Home
How to

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்.!

மெசேஜ் அனுப்பவேண்டியவரின் மொபைல் எண் தெரிந்தால் உடனடியாக உரையாடலை துவங்கலாம்.

By Gizbot Bureau

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை எனக் கூறலாம். இந்த செயலியின் மூலம் உடனடியாக மெசேஜ், போட்டோ மற்றும் வீடியோக்களை உங்கள் கான்டேக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு அனுப்ப முடியும். மேலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியும் உள்ளது. வாட்ஸ்ஆப்-ல் ஒருவருடன் உரையாடலை துவங்க அவர் கண்டிப்பாக உங்கள் கான்டேக்ட் லிஸ்டில் இருக்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்.!

தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'கிளிக் டூ சாட்'(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் கான்டேக்ட் லிஸ்டில் இல்லாத எண்களுக்கு கூட மெசேஜ் அனுப்ப முடியும். மெசேஜ் அனுப்பவேண்டியவரின் மொபைல் எண் தெரிந்தால் உடனடியாக உரையாடலை துவங்கலாம். ஆனால் அவரிடம் வாட்ஸ்ஆப் கணக்கு இருக்க வேண்டும். இல்லையெனில் வாட்ஸ்ஆப் சாட் செய்யமுடியாது.


'கிளிக் டூ சாட்' வசதியை பயன்படுத்துவது எப்படி?

படி#1

வாட்ஸ்ஆப் ஏ.பி.ஐ யை பயன்படுத்தி சாட் லிங்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

http://api.whatsapp.com/send?phone=

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்.!

படி#2
அந்த லிங்க/யூ.ஆர்.எல் முடியும் இடத்தில் , மெசேஜ் அனுப்பவேண்டியவரின் போன் எண்ணை நாட்டிற்கான குறியீட்டுடன் சேர்த்து குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய நாட்டிற்கான குறியீடு +91, மெசேஜ் அனுப்பவேண்டிய எண் 9820098200 என வைத்துக்கொண்டால், அந்த யூ.ஆர்.எல் கீழே குறிப்பிட்டுள்ளதை போல இருக்கும்.

http://api.whatsapp.com/send?phone=919820098200

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி: கிளிக் டூ சாட்.!

படி#3
இந்த லிங்கை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள குரோம் அல்லது ஏதேனும் ஒரு ப்ரவுசரில் உள்ளீடு செய்தால், உடனே வாட்ஸ்ஆப் உரையாடலை துவங்குவதற்கான திரை காண்பிக்கப்படும்.

இந்த லிங்கை உங்கள் கணிணி அல்லது லேப்டாப்பில் உள்ள ப்ரவுசரில் கூட பயன்படுத்தலாம். அதற்கு முதலில் வாட்ஸ்ஆப் வெப் உடன் இணைத்து அதன் பின்னர் உரையாடலை துவங்கலாம்.

ஏற்கனவே மெசேஜ் உள்ள உரையாடலை துவங்க , உங்கள் லிங்கை கீழ்கண்டவாறு பயன்படுத்தலாம்.

http://api.whatsapp.com/send?phone=9820098200&text=Hi...!There?

இது பயனர்களுக்கு எவ்வளவு பயன்படப் போகிறது என்பது தெரியாது. ஆனால் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள விரும்பும் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

#Whatsapp #apps #Click to chat # technology #வாட்ஸ்ஆப் #செயலி #கிளிக் டூ சாட் #தொழில்நுட்பம்

Best Mobiles in India

English summary
How to chat with WhatsApp users without saving their phone number: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X