யூடியூப் சேனலின் பெயரை மாற்ற இதை செய்தாலே போதும்.!
யூடியூப் போன்ற சேவையை வழங்கும் பல்வேறு இதர தளங்களை விட யூடியூப் அதீத பிரபலமாக இருக்க ஒற்றை காரணம், இதை பயன்படுத்த எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது தான்.
தொழில்நுட்ப யுகத்தின் அதீத வளர்ச்சியால் நமக்கு தேவையான தகவல்களை பார்ப்பதும், அவற்றை பார்க்கும் விதமும் பலமடங்கு மாறிவிட்டது எனலாம். இன்று நமக்கு பார்க்க பல-லட்சம் வித்தியாசமான திரைப்படங்கள், இசை, நகைச்சுவை நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கு நாம் விரும்புவதை தேர்வு செய்ய பல ஆப்ஷன்கள் உள்ளன.

இவை அனைத்திற்கும் ஒற்றை காரணமாக இருப்பது யூடியூப் தான் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. உலகம் முழுக்க பலரது வாழ்க்கையை யூடியூப் அடியோடு மாற்றியிருக்கிறது எனலாம். ஒவ்வொருத்தரும் வளர்ச்சியடைவதோடு மட்டுமின்றி, மற்றவர்களின் வளர்ச்சிக்கும் ஏதேனும் வகையில் காரணமாகவும் இருக்கின்றனர்.

யூடியூப்
யூடியூப் போன்ற சேவையை வழங்கும் பல்வேறு இதர தளங்களை விட யூடியூப் அதீத பிரபலமாக இருக்க ஒற்றை காரணம், இதை பயன்படுத்த எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது தான். உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குவதில் இருந்து, மற்றவர்களின் சேனல் வீடியோக்களை பார்ப்பது வரை அனைத்துமே இலவசம் தான்.

நகைச்சுவை
கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சக்கணக்கான யூடியூபர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். யூடியூப் தளத்தில் சொந்தமாக சேனல் வைத்திருப்போரை தான் யூடியூபர்கள் என்கின்றோம். இவர்கள் இசை வீடியோக்கள், நகைச்சுவை அல்லது உரையாடல்கள் என ஏதேனும் வகையில் வீடியோக்களை வழங்கி வருகின்றனர். இவை அனைத்தும் யூடியூபின் விதிமுறைகளின் கீழ் சீராக இயங்கி வருகின்றன.

சுலபமான தகவல்
இவ்வாறு வீடியோக்களை பதிவிடும் அனைவரும் தங்களின் வீடியோக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் மற்றவர்களிடம் இருந்து திருடப்பட்டு இருக்க கூடாது. இதனை செய்வது மிகவும் எளிமையான காரியம் தான்.
உங்களின் சேனலுக்கு அருமையான பெயர் ஒன்றை தேர்வு செய்து, மிகவும் சுலபமான தகவல்களை வழங்கினாலே போதும். பின் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை பதிவிட்டால் வேலை முடிந்தது. அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டால், உங்களது சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களின் வீடியோக்களை அடிக்கடி பார்க்க விரும்புவோரை சந்தாதாரர் என்கிறோம்.

என்ன செய்ய வேண்டும்
சில சமயங்களில் ஒருவர் தேர்வு செய்யும் பெயர், சில காலம் கழித்து மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். இவ்வாறு செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்:
- பிரவுசரை திறந்து யூடியூப் (www.youtube.com.) வலைத்தளம் செல்ல வேண்டும்.
- இனி சைன்-இன் (Sign In) பட்டனை க்ளிக் செய்து அங்கு கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இங்கு உங்களின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.
- உங்களது கணக்கில் சைன்-இன் செய்ததும், வலதுபுறம் காணப்படும் தம்ப் (Thumb) புகைப்படத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து க்ரியேட்டர் ஸ்டூடியோ (creator studio) ஆப்ஷனில் வியூ சேனல்-ஐ (view channel) க்ளிக் செய்ய வேண்டும்.
- சேனல் பெயருக்கு அடுத்து காணப்படும் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து பின் சேனல் செட்டிங்ஸ் (Channel Settings) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி புதிய வலைப்பக்கம் திறக்கும் இதில் ‘Edit on Google' ஆப்ஷனை க்ளிக் செய்து பெயரை மாற்றலாம்.
- இறுதியில் நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை சேவ் செய்தால், புதிய பெயரை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








