ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி?

கஸ்டமர் கேர் வேலைக்கு ஆகாத பட்சத்தில், நம்மில் பலர் படையெடுப்பது சம்பந்தப்பட்ட நெட்வொர்க்-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தான்.

|

போஸ்ட்பெயிட் மொபைல் சலுகைகளை மாற்ற நினைக்கும் போது நம் மனதில் வரும் முதல் விஷயம் என்ன?

பெரும்பாலும் கஸ்டமர் கேர் மையத்தை தொடர்பு கொள்வது தான், எனினும் இவ்வாறு செய்ய முயற்சிப்பதும் முயற்சிக்காமல் இருப்பதும் ஒன்று தான். அதிகபட்சம் கஸ்டமர் கேர் மையங்கள் நம் நேரத்தை அதிகளவு எடுத்துக் கொள்வதோடு, நம் பொறுமையை அதிகம் சோதித்து விடும்.

கஸ்டமர் கேர் வேலைக்கு ஆகாத பட்சத்தில், நம்மில் பலர் படையெடுப்பது சம்பந்தப்பட்ட நெட்வொர்க்-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தான். இதுவும் சிலருக்கு ஏற்ற சலுகைகளை வழங்காமல் போகலாம். இவற்றை கடந்து உங்களது வேலையை சுலபமாக முடித்துக் கொள்ள ஒரு வழி இருக்கிறது.

நெட்வொர்க்

நெட்வொர்க்

நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் வழங்கும் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

 ஏர்டெல் பயனர்கள்

ஏர்டெல் பயனர்கள்

- உங்களது ஸ்மார்ட்போனில் மை ஏர்டெல் செயலியை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்யவும்

- உங்களின் மொபைல் நம்பர் மூலம் செயலியை காண்ஃபிகர் (Configure) செய்ய வேண்டும்

- இனி செயலியின் வலதுபுற மேல்பக்கம் காணப்படும் Me பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து திட்டத்தை மாற்றக்கோரும் ‘Change Plan' ஆப்ஷனை பாப்-அப் மெனுவில் இருந்து க்ளிக் செய்ய வேண்டும்.


- இனி சலுகைகள் திட்டங்கள் அடங்கிய பக்கம் திறக்கும், இதில் உங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்து OK பட்டனை க்ளிக் செய்து புதிய திட்டத்தை உறுதி செய்யலாம்.


- போஸ்ட்பெயிட் திட்டம் மாற்றப்பட்டதை உறுதி செய்யும் குறுந்தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

ஐடியா பயனர்கள்

ஐடியா பயனர்கள்

- உங்களது ஸ்மார்ட்போனில் மை ஐடியா செயலியை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்யவும்

- அடுத்து மொபைல் நம்பர் மூலம் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்

- செயலியில் உள்ள மை அக்கவுன்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இதில் பில்லிங் டீடெயில்ஸ் (Billing Details) பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் செயலியின் வலது புறம் மேல் பக்கமாக இருக்கும்.

- இனி குறிப்பிட்ட பில் பிளான் ஆப்ஷனில் Change பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


- நீங்கள் மாற்ற வேண்டிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வோடபோன் பயனர்கள்

வோடபோன் பயனர்கள்

- உங்களது ஸ்மார்ட்போனில் மை வோடபோன் செயலியை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்யவும்

- உங்களின் மொபைல் நம்பர் மூலம் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்

- இனி வோடபோன் செயலியில் தொடரச் செய்யும் ‘Continue to my Vodafone app' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- செயலியின் வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று செங்குத்தான சிறிய கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி ‘Active packs and plans' பகுதியில் உள்ள ‘Browse other plans' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


- இங்கு நீங்கள் மாற்ற வேண்டிய சலுகையை தேர்வு செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to change your postpaid plan on Airtel Vodafone and Idea: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X