கம்ப்யூட்டர் வெப்கேமராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி.?

Written By:

வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டைப் பாதுகாப்பது மிகவும் எளிய விடயமாகி விட்டது. வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது கம்ப்யூட்டர் வெப்கேமரா போன்றவற்றைக் கொண்டு வீட்டை எங்கிருந்தும் கவனிக்க முடியும். அந்த வகையில் நீங்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு சிசிடிவி பாதுகாப்பு வழங்க உதவும் தொகுப்பாக இது அமைந்துள்ளது.

வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர் வெப்கேமராவை சிசிடிவி கேமரா போல் பயன்படுத்துவது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்

ஆப்

யாகேம் (Yawcam) எனும் செயலியை பயன்படுத்தி கணினியுடன் இணைக்கப்பட்ட எவ்வித கேமராவையும் நேரலை வீடியோக்களை பார்க்க முடியும். இலவசமாகக் கிடைக்கும் இந்தச் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

பின் வழக்கமாக மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் வழிமுறையைப் பின்பற்றி யாகேம் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதோடு வெப்கேமராக்களை சரியாகப் பொருத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

இன்ஸ்டால் செய்த செயலியை ஓபன் செய்து நீங்கள் பயன்படுத்த இருக்கும் கேமராவை தேர்வு செய்ய வேண்டும். இன்டகிரேட்டெட் கேமரா ஆப்ஷன் இருந்தால் யாகேம் செயலி தானாக உங்களது கேமராவை தேர்வு செய்து கொள்ளும். இதன் பின் வீடியோவிற்கென தனி பிரீவியூ திரையைக் காண முடியும்.

மோஷன் டிடெக்ஷன் அம்சம்

மோஷன் டிடெக்ஷன் அம்சம்

அடுத்து விண்டோ மெனுவில் இருக்கும் மோஷன் டிடெக்ஷன் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்ததும் உங்களது கேமராவில் இருந்து பிரீவியூ மோஷன்களை பார்க்க முடியும். அடுத்து செட்டிங்ஸ் சென்று மோஷன்-டிடெக்ஷன் அம்சங்களைச் சரியாக மாற்றியமைக்க வேண்டும். இங்கு உங்களது பயன்பாடுகளுக்கு ஏற்ப செட்டிங்களை மாற்றிப் பார்க்க முடியும்.

யாகேம்

யாகேம்

யாரும் இல்லாத போது வேலை செய்யுமளவு கணினியில் செட்டப் செய்ததும், உங்களுக்குந சீரான இடைவெளியில் மின்னஞ்சல்கள் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் தகவல்களை கொண்டு நீங்கள் வீட்டில் இல்லாத போதும் பாதுகாக்க முடியும்.

ஸ்னாப்ஷாட்

ஸ்னாப்ஷாட்

பின் செட்டிங்ஸ் -- ஆக்ஷன் -- செக் சென்ட் மெயில் ஆப்ஷன்களை கிளிக் செய்தால் சீரான இடைவெளியில் ஸ்னாப்ஷாட் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் பெற முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

யூஎஸ்பி-சி : அனைத்து உபகரணங்களையும் சார்ஜ் செய்யும் அடுத்த தலைமுறை உபகரணம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to change your pc webcamera into a cctv camera. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot