விண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி?

மைக்ரோசாப்ட்டில் லாகின் செய்யும்போது இவை திரையில் தோன்றுவது ஒரு பெரிய குறையாக பார்க்கப்பட்டது.

|

மைக்ரோசாஃப்ட் கணக்கு கடந்த காலங்களில் பல புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது, இது மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட், நெட் பாஸ்போர்ட், மைக்ரோசாஃப்ட் பாஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் விண்டோஸ் லைவ் ஐடி என அறியப்படுகிறது. அவுட்லுக், கோர்ட்டானா, ஒண்டிரைவ் மற்றும் மைக்ரோசாப்ட் சாதனங்கள் போன்ற மைக்ரோசாப்ட் சேவைகள் ஒற்றை பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கலவையுடன் அணுக முடியும். ஆனால் அனைத்து அருமையான பயன்கள் மற்றும் அணுகல் எளிதாக்கும் வகையில் தற்போது உள்ளது. மேலும் பாதுகாப்பு மற்றும் தனித்தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019

விண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி?

நீங்கள் மைக்ரோசாப்ட்டில் உள்ளே நுழையும் போது உங்களது விபரங்கள், ஐபி முகவரி, ஆப்பரேட்டிங் சிஸ்டம், மற்றும் பிரெளசர் வெர்ஷன் ஆகியவை கவனிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் லாகின் செய்யும்போது இவை திரையில் தோன்றுவது ஒரு பெரிய குறையாக பார்க்கப்பட்டது. பொது இடங்களில் நாம் செயல்படும்போது இது ஒரு பிரச்சனையாக கருதப்பட்டது.

விண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி?

இந்த பிரச்சனைகள் குறித்து விண்டோஸ் ஆலோசித்து வந்தாலும், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் வெளியில் சென்றுவிடாமல் இருக்கும் வகையில் நீங்கள் தான் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். உங்கள் விபரங்கள் மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் உங்கள் மைக்ரோசாப்ட் பெயரை மாற்றி கொள்வது நல்லது. இது பாதுகாப்பினை அதிகப்படுத்துகிறதோ இல்லையோ, நிச்சயம் வேறு ஒருவர் உங்கள் லாகினில் சென்றுவிடாமல் தடுக்கின்றது.

பொது இடத்தில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும்போது நம்முடைய பெயர் ஸ்க்ரீனில் தெரிவதை பலர் விரும்புவதில்லை என்பதே உண்மை.

விண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி?

மைக்ரோசாப்ட் கணக்கு:

எனவே மைக்ரோசாப்டில் உங்களது பெயரை மாற்றி கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் போது

1.அக்கவுண்ட் செட்டிங் செல்ல வேண்டும்

2. அக்கவுண்டை செலக்ட் செய்ய வேண்டும்

3. உங்கள் விபரங்கள் அடங்கிய பகுதிக்கு செல்ல வேண்டும்

4. மேனேஜ் மை மைக்ரோசாப்ட் கணக்கு என்பதை தேர்வு செய்ய வேண்டும்

5. இந்த கணக்கு பக்கத்தை பிரெளசரில் லோட் செய்ய வேண்டும்

6. உங்கள் பெயரில் உள்ள மோர் ஆக்சன் பகுதியை கிளிக் செய்ய வேண்டும்

7. புரபைல் எடிட் செல்ல வேண்டும்

8. இந்த பக்கம் லோட் ஆனவுடன் எடிட் நேம் எனப்தை செலக்ட் செய்ய வேண்டும்

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இங்கே உங்கள் பெயரை மாற்றுதல் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் மற்றும் இந்த கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்துள்ள அனைத்து சாதனங்களுக்கும் பொருந்துகிறது.

விண்டோஸ் 10-ல் மைக்ரோசாப்ட் லாகினை மாற்றம் செய்வது எப்படி?

லோக்கல் கணக்கு
லோக்கல் கணக்கில் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு மாற்ற வேண்டும் எனில் கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ்களை பின்பற்றுங்கள்

1. கண்ட்ரோல் பேனலை அக்ஸஸ் செய்ய வேண்டும்

2. யூசர் அக்கவுண்டை செலக்ட் செய்ய வேண்டும்

3. நீங்கள் எந்த யூசர் அக்கவுண்டை செயல்படுத்த வேண்டுமோ அதை செலக்ட் செய்ய வேண்டும்

4. பின்னர் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அக்கவுண்டை செலக்ட் செய்ய வேண்டும்

5. அதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயரை குறிப்பிட வேண்டும்

6. பின்னர் சேஞ்ச் நேம் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்

அல்லது உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மற்றவர்கள் கண்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் கணக்குகளை அணுகி, உள்நுழைவு விருப்பங்களை தேர்ந்தெடுத்து, தனியுரிமையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்

Best Mobiles in India

English summary
How to change your login name on Windows 10 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X