ஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி?

நீங்கள் பதிவிடும் போஸ்ட்கள், அப்டேட்கள், தனிப்பட்ட தகவல்கள், கான்டாக்ட் விவரங்கள் என அனைத்தும் ஃபேஸ்புக் சர்வர்களில் சேமிக்கப்படுகிறது.

|

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்களுடன் எந்நேரமும் தொடர்பில் இருக்க சிறப்பான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் இருக்கிறது. உங்களது அனைத்து தகவல்களையும் ஃபேஸ்புக் முழுமையாய் பதிவு செய்து வைத்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


நீங்கள் பதிவிடும் போஸ்ட்கள், அப்டேட்கள், தனிப்பட்ட தகவல்கள், கான்டாக்ட் விவரங்கள் என அனைத்தும் ஃபேஸ்புக் சர்வர்களில் சேமிக்கப்படுகிறது. அந்த வகையில் உங்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டு மற்றவர்களுக்கு தெரிந்தால், நீங்கள் கனவிலும் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு ஆளாக நேரிடலாம்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

சில சமயங்களில் உங்களது அக்கவுன்ட்-இல் இருந்து சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் பதிவுகள் போஸ்ட் செய்யப்பட்டால், வீண் வம்புகளுக்கு நீங்கள் ஆளாக்கப்படுவீர்கள். இவை அனைத்தையும் தவிர்க்க உங்களின் பாஸ்வேர்டு ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ஃபேஸ்புக் பயன்படுத்தும் பலரும் பாஸ்வேர்டாக பெயர், பிறந்த தேதி அல்லது மொபைல் எண் என எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதாகவே வைக்கின்றனர். அவ்வாறானவர்களில் நீங்கள் ஒருவர் எனில் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுவது அவசியமாகும். ஃபேஸ்புக்கில் உங்களின் பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

செக்யூரிட்டி

செக்யூரிட்டி

1 - ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் செயலியை திறக்கவும்

2 - இனி திரையின் மேல்புறம் வலதுபக்கம் காணப்படும் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - இனி செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி (Settings and Privacy) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - அடுத்து அக்கவுன்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

5 - இனி செக்யூரிட்டி மற்றும் லாக்-இன் (Security and login) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

6 - இந்த மெனுவில் சேஞ்ச் பாஸ்வேர்டு (Change Password) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

7 - இனி தற்போதைய பாஸ்வேர்டு மற்றும் மாற்ற நினைக்கும் புதிய பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

8 - முதலில் தற்போதைய பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். அடுத்து உங்களின் புதிய பாஸ்வேர்டை பதிவிட்டு, மீண்டும் அதனை உறுதி செய்ய புதிய பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். இம்முறை நீங்கள் பதிவிடும் புதிய பாஸ்வேர்டு மிகவும் ரகசியமாகவும், எளிதில் எவராலும் கண்டறிய முடியாததாகவும் இருப்பது அவசியமாகும்.

9 - இனி சேவ் சேஞ்சஸ் (Save changes) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி உங்களது பாஸ்வேர்டு மாற்றப்பட்டுவிடும்.

10 - பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ஒருமுறை ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.

11 - திரையில் உங்களின் யூசர்நேம் மற்றும் புதிய பாஸ்வேர்டை பதிவிட்டு, வழக்கம் போல ஃபேஸ்புக் பயன்படுத்த துவங்கலாம்.

 பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஒவ்வொரு முறை ஃபேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றும் போதும், அதனை தனியே ஒரு இடத்தில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்யும் போது மீண்டும் பாஸ்வேர்டு மாற்ற நேர்ந்தால், இது பயன்தரும். இத்துடன் பாஸ்வேர்டை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
How to change your Facebook password: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X