விண்டோஸ் 10 கம்ப்யூட்டர், லேப்டாப்களில் ஃபேன் வேகத்தை மாற்றுவது எப்படி?
எனினும், இவ்வாறு செய்ய உங்களது செட்டப் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து மாறுபடும். இதற்கு முதற்கட்டமாக உங்களது கம்ப்யூட்டரின் BIOS செட்டிங் செல்ல வேண்டும்.
விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஃபேன் வேகத்தை இயக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இவ்வாறு செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எனினும், இவ்வாறு செய்ய உங்களது செட்டப் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து மாறுபடும். இதற்கு முதற்கட்டமாக உங்களது கம்ப்யூட்டரின் BIOS செட்டிங் செல்ல வேண்டும்.

ஒருவேளை உஙகளது கம்ப்யூட்டரின் ஃபேன் வேகத்தை குறைக்கின்றீர்கள் எனில், அதற்கு முக்கிய காரணமாக ஃபேன் அதிவேகமாக சத்தம் எழுப்புவதாக தான் இருக்கும். கம்ப்யூட்டர் ஃபேன் அதிக ஒலியெழுப்ப சில காரணங்கள் இருக்கலாம், எனினும் இதன் முக்கிய பணி உங்களது கம்ப்யூட்டரை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்வது தான்.
இந்த பிரச்சனை உங்களது லேப்டாப்பில் எழுகிறது என்றால், லேப்டாப்பில் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கவில்லை என்றே கருதலாம். இதே பிரச்சனை உங்களது கம்ப்யூட்டரில் ஏற்பட்டால் உங்களது ஃபேனினை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். உங்களது டெஸ்க்டாப் சி.பி.யு. கார்பெட் அல்லது மென்மையான இடத்தில் இருந்தால் அதனை, அதிக காற்றோட்டம் செல்லும்படியான இடத்தில் வைக்க வேண்டும்.
விண்டோஸ் 10-இல் ஃபேன் வேகத்தை மாற்றுவது எப்படி?
விண்டோஸ் 10-இல் ஃபேன் வேகத்தை மாற்ற உங்களது கம்ப்யூட்டரின் BIOS செட்டிங் சென்று சில மாற்றங்களை செய்தாலே போதும்.
செட்டிங் ஆப்ஷனில் ஃபேன் கண்ட்ரோல்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனை ஹார்டுவேர் செட்டிங்கில் பார்க்க முடியும். உங்களது மதர்போர்டு உற்பத்தி செய்த நிறுவனத்திற்கு ஏற்ப BIOS மெனுவில் மாற்றங்கள் இருக்கலாம்.

ஃபேன் கண்ட்ரோல்களை கண்டறிந்ததும், அவை ஆட்டோ மோடில் இருப்பதை பார்க்க முடியும். இங்கு நீங்கள் புள்ளிகளின் அடிப்படையில் ஃபேன் வேகத்தை மாற்றியமைக்கலாம். எனினும், இவ்வாறு செய்யும் போது உங்களது கம்ப்யூட்டர் குளிர்ச்சியாவது குறைக்கப்படும்.
இதனால் கம்ப்யூட்டர் எளிதில் சூடாகலாம், இதனால் உங்களது கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களுக்கு ஏற்ப ஃபேன் வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.
கம்ப்யூட்டர் ஃபேன் வேகத்தை குறைக்கும் சூழலில், கம்ப்யூட்டருக்கு தேவையான காற்றோட்டம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications