ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி?

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் மற்றும் பல சேவைகளுக்கும் இனிமேல் ஆதார் கட்டாயம் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது.

|

ஆதார் அட்டைப் பொறுத்தவரை இப்போது அனைத்து இடங்களிலும் அதிகமாய் பயன்படுகிறது என்றே தான் சொல்லவேண்டும். மேலும் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மிக எளிமையாக மாற்றம் செய்ய முடியும். ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வந்த நிலையில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி?

அதன்படி மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் மற்றும் பல சேவைகளுக்கும் இனிமேல் ஆதார் கட்டாயம் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் தொழில்செய்யும் இடங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் கண்டிப்பாக ஆதார் அட்டை அதிகமாக தேவைப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக ஆதார் அட்டையில் புதிய எண்னை கொண்டுவருவதற்கு கண்டிப்பாக பழைய மொபைல் எண் இருக்க வேண்டும், ஒருவேளை அந்த பழைய எண் தொலைந்து போனாலும் மிக எளிமையாக மாற்ற முடியும்,அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில்https://uidai.gov.in/-- என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும், பின்பு அந்த வலைபக்கத்தில்
இருக்கும் aadhar update எனும் வசதியை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

aadhar update வசதியை கிளிக் செய்த பின்பு, அவற்றில் உள்ள update aadhar details online என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து வரும் பக்கத்தில் to submit your update/correction request online please என்பதை
கிளிக் செய்யவேண்டும். அதன்பின்பு அந்தவலைப்பக்த்தில் உங்கள் ஆதார் எண் கேட்டகப்படும், பின்பு உங்கள் பழைய மொபைல்
நம்பருக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்ப உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த ஒடிபி-எண்ணை அந்த வலைப்பக்கத்தில் உள்ளிடவும். அதன்பின்பு data update request என்ற பக்கத்தில் 'மொபைல் நம்பர்" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

 வழிமுறை-5:

வழிமுறை-5:

அடுத்து உங்களின் புதிய மொபைல் எண் அந்த data update request வலைப்பக்கத்தில் கேட்கப்படும்,அவற்றில் புதிய மொபைல் எண் கொடுத்து submit update request கிளிக் செய்ய வேண்டும். அடுத்து 15நாட்களுக்கு பின்பு உங்கள் மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
பழைய எண் தொலைந்து போனால் :

பழைய எண் தொலைந்து போனால் :

ஆதார் அட்டையில் இருக்கும் உங்களின் பழைய எண் தொலைந்து போனால்
https://uidai.gov.in/images/aadhaar_enrolment_correction_form_version_2.1.pdf- இந்த படிவத்தை நிரப்பி அருகில் இருக்கும் ஆதார் சேவை மய்யத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
how to change mobile number in aadhar card online ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X