Whatsapp ஓபன் செய்வதற்குள் மெசேஜ் டெலிட் பண்ணிட்டாங்களா?-மற்றவர் டெலிட் செய்த மெசேஜையும் படிக்கலாம்!

|

சமூகவலைதளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

பல்வேறு புதிய அம்சங்கள்

பல்வேறு புதிய அம்சங்கள்

வாட்ஸ் அப் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பல வசதிகளை செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப்பில் இருக்கும் அம்சமே டெலிட் ஆல் அம்சம்.

மெசேஜ் டெலிடட் என காண்பிக்கும்

மெசேஜ் டெலிடட் என காண்பிக்கும்

வாட்ஸ் அப் டெலிட் ஆல் அம்சம் இந்த செயலி பயன்படுத்தும் பலரும் பயன்படுத்தியிருப்போம். வாட்ஸ்அப் செயலியில் மற்றவர் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் சில நேரங்களில் நீங்கள் படிப்பதற்குள் மெசேஜ் டெலிடட் என காண்பிக்கும். சில சமயங்களில் இந்த அம்சத்தை நீங்களும் பயன்படுத்தியிருக்கலாம்.

படிப்பதற்குள் டெலிட் செய்யலாம்

படிப்பதற்குள் டெலிட் செய்யலாம்

வாட்ஸ்அப் மெசேஜை சிலருக்கு தவறாக அனுப்பியிருந்தால் அதை அவர்கள் படிப்பதற்குள்ளும் அல்லது படித்தப்பிறகும் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் என்ற தேர்வை கிளிக் செய்து டெலிட் ஆல் அம்சத்தை தேர்வு செய்து மொத்தமாக அழித்து விடலாம். நீங்கள் அனுப்பிய தகவல் பயனர்களுக்கு மெசேஜ் டெலிடட் என்று மட்டுமே காண்பிக்கும். மெசேஜ் மொத்தமாக அழிந்துவிடும். அப்படி பிறர் உங்களுக்கு அனுப்பும் மெசேஜை அவர்கள் டெலிட் ஆல் கொடுத்தாலும் பார்ப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

WhatsappRemoved+ என்ற செயலி

WhatsappRemoved+ என்ற செயலி

வாட்ஸ் அப் டெலிடட் மெசேஜை படிப்பதற்கு முதலில் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாட்ஸ் அப் டெலிடட் மெசேஜை படிப்பதற்கு கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று WhatsappRemoved+ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்

தகவல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

தகவல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

WhatsappRemoved+ என்ற செயலியை இன்ஸ்டால் செய்து, அதில் கேட்கும் தகவல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பின் அதில் காட்டும் முதல் பக்கத்தில் வாட்ஸ்அப் என்ற அம்சத்தை தேர்வு செய்யவும். அதன்பின் Savefiles என்ற அம்சத்தை கிளிக் செய்யவேண்டும்.

டெலிடட் மெசேஜ்களை நீங்கள் படிக்கலாம்

டெலிடட் மெசேஜ்களை நீங்கள் படிக்கலாம்

அவ்வளவுதான் இனி வாட்ஸ்அப் டெலிடட் மெசேஜ்களை நீங்கள் படிக்கலாம். உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் டெலிட் ஆல் கொடுத்தாலும் அது இந்த செயலியில் வரும். இந்த செயலியானது ஆண்ட்ராய்டு பயணர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு செயலிகள்

பல்வேறு செயலிகள்

அதேபோல் வாட்ஸ்அப் வியூ டெலிடட் மெசேஜ் என்ற செயலி போன்ற பல்வேறு செயலி இருக்கிறது. வியூ டெலிடட் மெசேஜ் என்ற செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் மெசேஜ் டெலிட் செய்தாலும் அது நோட்டிபிகேஷனாக காண்பிக்கப்படும். நியூ டெலிடட் மெசேஜ் என்று காண்பிக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றி டெலிடட் மெசேஜ்களை படிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How Can You Read Whatsapp Deleted Message: Here the Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X