ஐபோனில் போன்நம்பரை மறைத்து கால் செய்வது எப்படி?
நீங்கள் பிளாக் செய்யாத எண்ணிலிருந்து அழைக்கும் நபரின் போனில், பெயர்தெரியா அழைப்புகளை தடை செய்யும் வசதி இருந்தால் இணைப்பு துண்டிக்கப்படும்.
முன்பின் தெரியாத வேற்று மனிதர்கள் நம் போன் நம்பரை தெரிந்துகொள்வதை யாரும் விரும்பமாட்டோம். ஆனால் நமக்கு தெரியாதவர்களுக்கு போன் செய்யாதிருப்பது என்பது நடக்காத ஒன்று.

எனவே போன் நம்பரை பாதுகாக்க விரும்பும் பலரில் நீங்கள் ஒருவராக இருந்தால், நீங்கள் அழைக்கும் நபருக்கு உங்கள் போன்நம்பர் தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை இங்கே காணலாம்.

உங்கள் நம்பரை ப்ளாக் செய்தல்
நீங்கள் போன் செய்யும் நபருக்கு உங்கள் போன்நம்பர் தெறியாதபடி மறைக்க பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
1) உங்கள் போனில் அமைப்புகள்(Settings) பகுதிற்கு செல்லவும்.
2) அதில் கீழ்பகுதியில் உள்ள போன்-ஐ தேர்வு செய்யவும்.
3) 'Show my caller ID' எனும் பகுதிக்கு செல்லவும்
4) அதில் உள்ள ஸ்லைடரை ஆப் செய்யவும்.

பிரைவேட் நம்பர்
° இந்தியாவில் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் பிரைவேட் நம்பர்களை அனுமதிப்பதில்லை.
°ஏர்டெல் நிறுவனம் டயல்போர்ட் 'Dialport' எனும் தனி சேவையை வழங்குகிறது.
°வோடாபோன் நிறுவனம் வி.பி.என் சேவையையும்,பி.எஸ்.என்.எல் நிறுவனம் வாய்ஸ் வி.பி.என் சேவையையும் வழங்குகின்றன.
°அனைத்து மொபைல் நிறுவனங்களும் பிரைவேட் நம்பர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.
°பீரிபெய்டு பயனர்களுக்கு இந்த சேவை உள்ளதா இல்லையா என்பது நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.

வழிமுறை
வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உறுதியான தகவலை பெற்ற பின்பு மேற்கூறிய வழிமுறையை பின்பற்றவும். அதற்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உங்கள் போன்நம்பரை மறைக்க கீழ்கண்ட வழிமுறை தொடரவும்.

அழைப்பு
எடுத்துக்காட்டாக,நீங்கள் ×××-×××-×××× என்னும் போன் நம்பருக்கு அழைப்பு மேற்கொள்ள விரும்பினால், அதற்கு முன்பே அந்த எண்ணிற்கு முன்பு *31# ஐ சேர்ப்பதன் மூலம் போன்நம்பரை மறைக்கலாம். அழைப்பு மேற்கொள்ளும் போது *31# சேர்த்து அழைத்தால், அழைப்பு இணைக்கப்படாது.

அன்-பிளாக் கால்
பிரைவேட் நம்பர் சேவையின் குறைபாடுகள்
நீங்கள் பிளாக் செய்யாத எண்ணிலிருந்து அழைக்கும் நபரின் போனில், பெயர்தெரியா அழைப்புகளை தடை செய்யும் வசதி இருந்தால் இணைப்பு துண்டிக்கப்படும்.
°நீங்கள் அனைத்து வெளி செல்லும் அழைப்புகளையும் ப்ளாக் செய்த பின்னர், அன்-பிளாக் கால் செய்ய விரும்பினால், அதற்கான எண்ணை போன் நம்பருக்கு முன் சேர்க்க வேண்டும். அந்த எண் இந்திய பயனர்களுக்கு தெரிவிக்கப்படாததால், அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தும் *31#யை பயன்படுத்தலாம்.

பார்னர் எண்ணை பயன்படுத்துதல்
உங்கள் எண் முழுவதுமாக எப்போதும் தெரியாமலிருக்க வேண்டும் என்றால் , முதல் வழிமுறையை திறமையாக பயன்படுத்தலாம். உங்கள் ஐபோனின் முதன்மையான போன்நம்பரை தவிர்த்து வேறெந்த ப்ராக்ஸி எண் தெரிந்தாலும் பரவாயில்லை என்றால், ' Hushed' மற்றும் 'Burner' செயலிகளை பயன்படுத்தி இரண்டாம் எண்ணை செட்டப் செய்யலாம். மேலும் உங்கள் எண்ணை மறைத்து புதிய எண்ணையும் வழங்குகிறது. ஆனால் இந்த சேவைகள் இலவசம் இல்லை.
கூகுள் வாய்ஸ் மூலம் இதை மலிவாக செய்யமுடியும். உங்கள் எண்ணை இலவசமாக பர்ன் செய்ய (மறைக்க) முடியாவிட்டாலும், வேறொரு எண்ணை இலவசமாக பயன்படுத்தலாம். மேலும் இந்த புதிய எண்ணுக்கு வரும் அழைப்புகள் எண்ணிற்கு திருப்பி விடப்படும்.


Click it and Unblock the Notifications








