மாத தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி?

பல்வேறு முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளை கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு வழங்குகின்றன.

|

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகர்களின் வரவு பலவிதங்களில் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன் வாங்குவது மிகவும் சுலபமாகி விட்டது.

மாத தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி?

பல்வேறு முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளை கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு வழங்குகின்றன.

மாத தவணையில் வாங்கவே அதிகம் விரும்புகின்றனர்

மாத தவணையில் வாங்கவே அதிகம் விரும்புகின்றனர்

புதிய பொருள் வாங்கும் போதே முழு பணத்தையும் செலுத்துவதை தவிர்த்து, பெரும்பாலானோர் மாத தவணையில் வாங்கவே அதிகம் விரும்புகின்றனர். மாத தவணை மூலம் வாங்கும் பொருட்களுக்கு குறைந்த தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்தலாம்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

மொபைல் போன்களை மாத தவணை முறையில் வாங்குவது மிகவும் சுலபமான காரியமே. இதை செய்ய ஒருவர் கிரெடிட் கார்டு வைத்திருந்தாலே போதுமானது. கிரெடிட் கார்டில் போதுமான அளவு பேலென்ஸ் தொகை இருப்பதை உறுதி செய்து கொண்டால் விரும்பிய மொபைலை வாங்கிய முடியும். இதை செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் கவனிக்க வேண்டியவை:

முதலில் கவனிக்க வேண்டியவை:

- மொபைலை இ.எம்.ஐ. முறையில் வாங்கும் முன் உங்களிடம் போதுமான பேலென்ஸ் கொண்ட கிரெடிட் கார்டு இருக்க வேண்டும்.

- இ.எம்.ஐ. சலுகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்கும் போதும் பெற முடியும்.

- கிரெடிட் கார்டு தகவல்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- ஒ.டி.பி. அனுப்பப்படும் என்பதால் மொபைல் போன் அருகில் இருப்பதை உறுதி செய்யவும்.

ஆன்லைனில் வாங்குவது எப்படி?:

ஆன்லைனில் வாங்குவது எப்படி?:

1 - முதலில் ஆன்லைன் வர்த்தக வலைதளம் அல்லது மொபைல் செயலியை திறக்கவும்.

2 - இனி நீங்கள் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனினை தேர்வு செய்ய வேண்டும்.

3 - இனி ‘Buy Now' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - அடுத்து முகவரியை பதிவிட்டு ‘Continue' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

5 - பணம் செலுத்தும் முறையை EMI என தேர்வு செய்து continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

6 - நீங்கள் பயன்படுத்தும் வங்கி கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும்.

7 - மாத தவணை காலத்தை தேர்வு செய்ய வேண்டும் ( மாத தவணை முறை 3 மாதங்களில் துவங்கி 24 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது).

8 - கிரெடிட் கார்டு தகவல்களை பதிவு செய்து proceed பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

9 - இனி, நீங்கள் கிரெடிட் கார்டிற்கு பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பருக்கு ஒ.டி.பி. (OTP) அனுப்பப்படும்.


10 - ஒ.டி.பி.-யை பதிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

ஆஃப்லைனில் வாங்குவது எப்படி?

ஆஃப்லைனில் வாங்குவது எப்படி?

நீங்கள் விரும்பும் ஆஃப்லைன் விற்பனையாளரை அணுகி, உங்களுக்கு விருப்பமான மொபைலை வாங்கி, அவரிடம் கிரெடிட் மூலம் பணத்தை செலுத்த வேண்டும். பின் உங்களது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டோ அல்லது வங்கியின் மொபைல் ஆப் மூலமாகவோ மாத தவணையை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to buy a smartphone on EMI: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X