கேஷிஃபை பைபேக் திட்டத்தில் ஒன்பிளஸ் 5டி வாங்கும் வழிமுறைகள்

|

கேஷிஃபை உடன் கைகோர்த்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பழைய ஃபோன்களுக்கான பணத்தை கேஷிஃபை-யில் இருந்து பயனர் பெற்று கொள்ளலாம். ஆனால் இந்தப் பரிமாற்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கேஷிஃபை பைபேக் திட்டத்தில் ஒன்பிளஸ் 5டி வாங்கும் வழிமுறைகள்

இந்தியா முழுவதும் உள்ள 31 நகரங்களில், 22 பிராண்டுகளுக்கு இந்தத் திட்டம் இதுவரை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், oneplusstore.in இல் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கான ஆர்டர் செய்த பிறகே, பைபேக் சேவையைப் பயன்படுத்த முடியும்.

ஒரு பைபேக் திட்டத்தின் கீழ் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் பதிப்பின் அறிமுகத்திற்கு பிறகே, இந்தத் திட்டம் வெளியாகி உள்ளது. கேஷிஃபை மூலம் செயல்படுத்தப்படும் இந்த பைபேக் திட்டத்தை தனது எல்லா ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்நிறுவனம் விரிவுப்படுத்தி உள்ளது.

நகரங்களின் பட்டியல்

நகரங்களின் பட்டியல்

அகமதாபாத், பெங்களூரு, சண்டிகார், சென்னை, டெல்லி, காசியாபாத், குர்காவுன், ஹைராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டா.

பரிமாற்றத்தில் உள்ள பிராண்டுகளின் பட்டியல்

பரிமாற்றத்தில் உள்ள பிராண்டுகளின் பட்டியல்

ஆப்பிள், கூகுள், ஹெச்டிசி, ஹூவாய், ஒப்போ, விவோ, சாம்சங், சோனி, சியாமி, மைக்ரோமெக்ஸ், மோட்டோரோலா, எல்ஜி, கார்பன்.

Oppo F5 Sidharth Limited Edition Unboxing (TAMIL)
பரிமாற்றத்திற்கான படிகள்

பரிமாற்றத்திற்கான படிகள்

படி 1: ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று, மேலே வலதுபுறத்தில் உள்ள பைபேக் திட்டத்தைத் துவக்க, கிளிக் செய்யவும்.

படி 2: உங்களுக்கு தேவையான ஃபோனையும், உங்கள் நகரத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்கான விலை நிர்ணய உறுதி செய்து கொள்ளவும் இதற்கு உங்கள் பழைய ஃபோனின் தற்போதைய நிலையை குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.

படி 3: இப்போது ஆன்லைன் ஸ்டோரில் இருந்து ஒரு புதிய ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனை வாங்க தயாராகிவிட்டது.

படி 4: வாங்கிய பிறகு, நீங்கள் அளித்த முகவரிக்கு ஒன்பிளஸ் 5டி முதலில் பட்டுவாடா செய்யப்படும்.

படி 5: அதன்பிறகு கேஷிஃபை அணியினர் உங்களோடு தொடர்பு கொண்டு, ஒரு நேர்காணலை நியமிப்பார்கள். பழைய ஃபோனைப் பெற்று கொள்ளும் போது, அதற்கான பரிமாற்றத் தொகை அளிக்கப்படும்.

 ஒன்பிளஸ் 5டி

ஒன்பிளஸ் 5டி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகச் சிறந்த தன்மைகளோடு கூடிய நவீன முன்னணி தயாரிப்பாக ஒன்பிளஸ் 5டி உள்ளது. இந்த ஃபோனில் 6-இன்ச் 1080பி எப்ஹெச்டி+ ஆப்டிக் அல்மோல்டு திரை (2160 x 1080 பிக்ஸல்) உடன் 401பிபிஐ மற்றும் 18:9 விகிதத்தில் அமைந்தது உள்ளிட்ட சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

திரைக்கும் பாடிக்கும் இடையிலான விகிதம், மிக அதிகமாக 80.5 சதவீதத்தில் அமைந்துள்ளது. குவால்காமின் நவீன மற்றும் அதிக ஆற்றலுள்ள சிப்செட் ஆன 2.45ஜிஹெச்இசட் இல் இயங்கும் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் அட்ரினோ 540 ஜிபியூ-யும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 6ஜிபி ராம் மற்றும் 64ஜிபி சேமிப்பகம் கொண்ட ஒரு வகையும் 8ஜிபி ராம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் கொண்ட ஒரு வகை என்று இரு வகைகளில் கிடைக்கின்றன. மென்பொருள் பகுதியில், ஆன்ட்ராய்டு 7.1.1 நெளவ்கட் அடிப்படையில் அமைந்த ஆக்ஸிஜன் ஓஎஸ்-சில் இயங்குகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 16எம்பி மற்றும் 20எம்பி ஆகிய இரட்டை பின்புற கேமரா செட்அப் காணப்படுகிறது. முக்கியமான கேமராவில் ஒரு 16 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்398 சென்ஸர் மற்றும் ஒரு எப்/1.7 துளை ஆகியவை காணப்படுகிறது. இதற்கு ஆற்றலை அளிக்க டேஷ் சார்ஜிங் ஆதரவு கொண்ட 3300எம்ஏஹெச் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் வங்கியின் வழக்கமான டெபிட் கார்டை பெறும் வழிமுறைகள்பேடிஎம் வங்கியின் வழக்கமான டெபிட் கார்டை பெறும் வழிமுறைகள்

Best Mobiles in India

English summary
OnePlus has announced the buyback program in-ties with Cashify. According to this program, it allows the users to get cash for your old device from Cashify, but the exchange is available only for selected smartphones and areas only.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X