அமேசான் எக்கோ ஸ்பீக்கர்களுக்கான தனிப்பயன் அலெக்ஸா திறனை அமைக்கும் முறைகள்

|

மனிதனுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையிலான பேச்சு தொடர்பிற்கு வழிவகுத்து கொடுத்த எக்கோ ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்திய சந்தையில் கொண்டுவந்துள்ளது. அலெக்ஸா என்ற முக்கிய அம்சத்தை பெற்ற கட்டமைப்புடன் கூடிய எக்கோ, எக்கோ டாட் மற்றும் எக்கோ பிளஸ் ஆகிய சாதனங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் எக்கோ ஸ்பீக்கர்களுக்கான தனிப்பயன் அலெக்ஸா திறனை அமைக்கும் முற

அமேசானின் வாய்ஸ் சேவையை அலெக்ஸா அடிப்படையாக கொண்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான சாதனங்களின் பின்னணியில் முக்கிய சக்தியாக அமேசான் எக்கோ அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான திறன்களை அளிப்பதோடு, அதிக தனிப்பயனாக்கும் அனுபவத்தையும் அலெக்ஸா உருவாக்கி தருகிறது. மேலும் கோடிங் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாதரண பயனரால் கூட, மேற்கூறிய திறன்களை எளிதாக உருவாக்க முடியும் என்பது ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும்.

அமேசான் மூலம் அளிக்கப்படும் அலெக்ஸா திறன்களுக்கான கிட் மூலம் வடிவமைப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் பிராண்டுகளால் திறன்களின் கட்டமைப்பில் ஈடுபட்டு, புதிய வாடிக்கையாளர்களை அடையலாம். பொதுவாக, ASK என்பது சுயசேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்கள், கருவிகள், ஆவணப்படுத்துதல் மற்றும் கோடு மாதிரிகள் போன்றவற்றின் ஒரு கூட்டுசேர்ப்பாக திகழ்ந்து, அலெக்ஸாவில் திறன்களைச் சேர்க்க உங்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் அமைத்து தருகிறது.

இதற்கிடையே சாவன், ஸொமோட்டோ, டைம்ஸ் ஆப் இந்தியா, ஓலா மற்றும் கோஐபிபோ போன்ற பிராண்டுகள் மற்றும் மற்ற பல ஆக்கப்பூர்வமான வடிவமைப்பாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களால், ஏற்கனவே இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான திறன்கள் கிடைக்கப் பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

என்ன இருந்தாலும், எக்கோ சாதனங்களுக்கான விருப்பத் திறனை எப்படி கட்டமைப்பது என்பதைக் குறித்து இன்று கீழே பார்ப்போம்.

அறிந்திருக்க வேண்டியவை

இதை துவங்கும் முன், பல்வேறு வகையிலான திறன்கள் (விருப்பம், ஸ்மார்ட்-ஹோம், வீடியோ மற்றும் பல) இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, இதற்கு வேறுபட்ட வகையிலான சேவைகள் இப்போது தேவைப்படுகின்றன:

விருப்பத் திறனை பொறுத்த வரை, நீங்கள் ஒரு AWS லேம்டா செயல்பாடு அல்லது ஒரு இணைய சேவை என இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்:

AWS லேம்டா (ஒரு அமேசான் அளிக்கும் இணைய சேவைகள்) என்பது நிர்வாக சர்வர்கள் இல்லாமல் கிளவுட்டில் கோடு இயக்க உதவும் ஒரு சேவையாகும். உங்கள் கோடு பயனர் கோரிக்கைகளை அலெக்ஸா அனுப்புகிறது, அந்த கோடு உங்கள் கோரிக்கையை சோதித்தறிந்து, தேவையான ஏதாவது செயல்பாடுகளை (இணையத்தில் தகவல்களை ஆராய்வது போன்றவை) மேற்கொண்டு, அதன்பிறகு பதிலை அனுப்புகிறது. மேலும் நோடு.ஜேஎஸ், ஜாவா, பைத்தான் அல்லது சி# போன்றவற்றில் லேம்டா செயல்பாடுகளை எழுத முடியும்.

மாற்றாக, ஒரு இணைய சேவையை நீங்கள் எழுதி, அதை ஏதாவதொரு கிளவுடு ஹோஸ்ட் வழங்குநர் மூலம் ஹோஸ்ட் செய்யவும் முடியும். ஹெச்டிடிபிஎஸ் மூலம் கோரிக்கைகளை இணைய சேவை கட்டாயம் ஏற்றுகொள்ளப்படும். இந்நிலையில், உங்கள் இணைய சர்வருக்கு அலெக்ஸா கோரிக்கைகளை அனுப்பி, உங்கள் சேவையானது தேவையான செயல்பாடுகளை மேற்கொண்டு, பதிலை அனுப்புகிறது. உங்கள் இணைய சேவையை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்.

உங்கள் சேவையை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதையும் கடந்து, திறனுக்கு ஏற்ற ஒரு விருப்ப தொடர்பு மாதிரியையும் அமைக்க முடியும். இதன்மூலம் விருப்பக் கோரிக்கைகளை கையாள முடியும் என்பதோடு, அந்த கோரிக்கைகளை செயலாக்குவதைக் குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்க முடியும் என்பது தெரிகிறது.

முதலில் அலெக்ஸா திறனை கட்டமைப்பதில் களமிறங்குவோம். கீழே உள்ள வீடியோ படிப்பினையைப் பார்த்து அறியவும்.

படி 1: உங்கள் அலெக்ஸா திறனைத் தயார்படுத்துதல்

படி 1: உங்கள் அலெக்ஸா திறனைத் தயார்படுத்துதல்

தொடக்க படியாக, அமேசான் அலெக்ஸா மேம்பாட்டு தளத்தில் இருந்து உங்கள் அலெக்ஸா திறனை தயார்ப்படுத்தலாம். developer.amazon.com/alexa தளத்திற்கு சென்று, சைன் இன் செய்து துவங்கவும்.

1. மேலே உள்ள "அலெக்ஸா" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

2. அலெக்ஸா திறன்கள் கிட் கீழே உள்ள தொடங்கு பொத்தானை கிளிக் செய்து தொடங்கவும்.

3. அடுத்தப்படியாக, திரையின் மேற்புற வலதுபக்கத்தில், ஒரு புதிய திறனை சேர் என்பதை கிளிக் செய்யவும்.

இதன்மூலம் உங்களின் புதிய அலெக்ஸா திறனின் முதல் பக்கத்தை நீங்கள் அடையலாம்.

4. திறன் தகவல் திரையைப் பூர்த்தி செய்யவும்.

திரை தகவல்: இந்தத் தகவலைப் பயன்படுத்தி, உங்கள் திறன் கண்டறியப்படுவதோடு, உங்கள் திறன் அலெக்ஸா உடன் எப்படி தொடர்பு கொள்கிறது என்பது அறியப்படுகிறது. இது ஒரு நேரடியான சிறந்த தொடக்கமாக அமைகிறது.

இந்தக் களங்களை நிரப்புக; திறன் வகையாக "விருப்பத் தொடர்பு மாதிரி" அமைப்பதன் மூலம் திறன் நடத்தையை விளக்க முடியும். பெயராக, திறனை கண்டறிய எளிதாக அமையும் வகையில், "சோதனை" என்றும், துவக்கநிலை பெயர் அல்லது சொற்தொடராக, நமது திறனை அலெக்ஸா பயன்படுத்தும் வகையில் "சோதனை போட்" என்று பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, "ஹேய் அலெக்ஸா, சோதனை போட் கேள் (ஒரு சொற்தொடர்). நீங்கள் தயாரான பிறகு, கீழே வலதுபக்கத்தில் உள்ள அடுத்தது என்ற பொத்தானை அழுத்தவும்.

5. இந்தத் தகவல்களைப் பூர்த்தி செய்த பிறகு, தொடர்பு மாதிரி பகுதிக்கு அழைத்து செல்லும் அடுத்தது என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

6. திறன் கட்டமைப்பு பீட்டா வெளியீடு என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இதன்மூலம் புதிய திறன் கட்டமைப்பு டேஸ்போர்டை வெளியீடவும்.

படி 2: உங்கள் தொடர்பு மாதிரியை தயார்ப்படுத்தவும்

படி 2: உங்கள் தொடர்பு மாதிரியை தயார்ப்படுத்தவும்

அடுத்தபடியாக, நீங்கள் கேட்கும் காரியங்களில் எப்படியெல்லாம் அலெக்ஸா தலையிட்டு செயல்படும் என்பதை தொடர்பு மாதிரி விளக்குகிறது. இப்போது நாம் சொற்தொடரை விளக்குவதை குறித்து காண்போம். "ஹேய் அலெக்ஸா, சோதனை போட் கேள் (நீங்கள் விரும்பும் எதையும் எழுதலாம்)" மற்றும் அலெக்ஸா எப்படி அலச வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதன் முடிவில் வாக்கியம் அல்லது கேள்வி அமைக்க வேண்டும்.

நோக்கங்கள்

நோக்கங்கள் என்பது உங்கள் திறனை குறிக்கக்கூடிய வேறுபட்ட செயல்பாடுகளைக் குறித்த சிந்தனையாக இருக்கலாம். அவை உச்சரிப்புகளின் (கீழே பார்க்கவும்) அடிப்படையில் வாக்கியங்களாக அர்த்தம் கொள்ள முடியும் என்பதோடு, இந்த உச்சரிப்புகள் மூலம் இடங்கள் விரிவுப்படுத்தலாம் (மாறக்கூடியவை). இடங்களை குறித்து மற்றொரு படிப்பினையில் விளக்குகிறோம். தற்போது முதல் நோக்கம் மற்றும் இடங்களின் அமைப்பது குறித்து அறிந்து கொள்வோம்:

நமது நோக்கத்திற்கு, ஒரு நோக்க அமைப்பியல் தேவைப்படுகிறது. எனவே "ஹாலோவோல்ட்" என்ற ஒரு நோக்கம் மட்டும் கொண்ட அடிப்படையான ஒன்றை அமைப்போம். இடதுபக்கத்தில் உள்ள அமைப்பை நகல் எடுத்து கொள்ளலாம். இது மிக எளிய உச்சரிப்பு (செயல்பாடு உந்தி) உடன் இணைய போகிறது.

உச்சரிப்புகள்

உச்சரிப்புகள் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அலெக்ஸா குறிக்க கேட்கும் ஊக்கமூட்டும் சொற்தொடராக உள்ளது. நமது ஹாலோவோல்ட் உச்சரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், "ஹவ் ஆர் யூ" என்ற சொற்தொடரை நாம் பயன்படுத்துகிறோம்.

மேற்கண்ட காரியங்களைத் தொடக்கத்தில் தொடர்பு மாதிரியை துவக்க நாம் அமைக்க வேண்டியுள்ளது. இப்போது அலெக்ஸா திறனுக்கான கோடு எழுதுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

1. திறன் கட்டமைப்பு டேஸ்போர்ட்டில் "Add+" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இது டேஸ்போர்ட்டின் மேற்பகுதியில் இடதுபக்க முனையில் அமைந்துள்ள நோக்கங்கள் அருகே அமைந்திருக்கும்.

2. அளிக்கப்பட்டுள்ள செய்தி பெட்டியில், புதிய நோக்க பெயரான GetNewFactIntent. என்பதை உள்ளிட்டு, நோக்கத்தை உருவாக்கு என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

3. உங்கள் நோக்கத்திற்கான 10 - 15 மாதிரி உச்சரிப்புகளைச் சேர்க்கவும். இந்த நோக்கம் நிறைவேற ஒரு பயனரால் அளிக்கப்பட வேண்டிய காரியங்கள் இவை. இங்கு சில மாதிரிகளை அளிக்கிறோம்: ஒரு காரியத்தைத் தரவும், ஒரு காரியத்தை கூறு, ஏதாவது கூறு, இடைவெளி காரியத்தைப் பற்றி கூறு போன்றவை.

4. மாதிரியை சேமி என்ற பொத்தானை கிளிக் செய்த பிறகு, மாதிரியை கட்டமைக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

5. உங்கள் தொடர்பு மாதிரி வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டால், உருவமைப்பு பகுதிக்கு செல்லும் வகையில் உருவமைப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இந்த வழிகாட்டியின் அடுத்தப் படியாக, நமது லேம்டா செயல்பாட்டை ஏடபில்யூஎஸ் மேம்பாட்டாளர் முனையம் மூலம் நாம் உருவாக்க போகிறோம். ஆனால் இந்த பிரவுஸரை திறந்த நிலையிலேயே வைத்திருக்கவும். ஏனெனில் இந்தப் பக்கத்திற்கு நாம் திரும்ப வர வேண்டியுள்ளது.

படி 3: உங்கள் திறனுக்கான கோடு எழுதுதல் மற்றும் சோதித்தல்

படி 3: உங்கள் திறனுக்கான கோடு எழுதுதல் மற்றும் சோதித்தல்

உங்கள் திறனுக்கான முதன்மை கோடிடிங் பணியின் உருவாக்க, அலெக்ஸா சேவையிடம் இருந்து கோரிக்கைகள் ஏற்கவும், அதற்கான பதிலை அளிக்கவும் ஒரு சேவை தேவைப்படுகிறது.

விரைவான துவக்கத்திற்கு, உங்கள் திறனுக்கான சேவையை தொகுத்து அளிக்க, ஒரு ஏடபில்யூஎஸ் லேம்டா செயல்பாட்டை உருவாக்க வேண்டும். ஏடபில்யூஎஸ் லேம்டா என்பது எந்த மேலாளர் சேவைகளும் இல்லாமல் கிளவுட்டில் உங்கள் கோடு இயங்க உதவும் ஒரு சேவையாகும்.

மாற்றான, உங்கள் திறனுக்கான ஒரு இணைய சேவையைக் கட்டமைத்து, ஏதாவது ஒரு கிளவுட் வழங்குநர் மூலம் அதை தொகுத்து வழங்கலாம்.

1.http://aws.amazon.comக்கு சென்று, கன்சோலில் சைன் இன் செய்யவும். ஏற்கனவே உங்களுக்கு ஒரு கணக்கு இல்லாவிட்டால், ஒரு புதிய கணக்கை நீங்கள் உருவாக்க வேண்டும்.

2. திரைக்கு மேற்பகுதியில் உள்ள "சர்வீசஸ்"க்கு சென்று, கிளிக் செய்து, தேடல் பெட்டியில் "லேம்டா" என்று தட்டச்சு செய்யவும். சேவைகளுக்கான பட்டியலிலும் லேம்டாவை நீங்கள் காணலாம். இது "கம்ப்யூட்" பிரிவு ஆகும்.

3. உங்கள் ஏடபில்யூஎஸ் பகுதியை சோதிக்கவும். ஏடபில்யூ லேம்டா, அலெக்ஸா திறன்கள் கிட் உடன் இரு பகுதிகளில் மட்டுமே சேர்ந்து செயலாற்றும். அவையாவன: அமெரிக்காவின் கிழக்கு பகுதி (என்.வெர்ஜினியா) மற்றும் ஐரோப்பா (அயர்லாந்து). இதில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய பகுதியை தேர்ந்தெடுத்து இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

4. "ஒரு லேம்டா செயல்பாட்டை உருவாக்கு" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். உங்கள் திரையின் மேற்பகுதியை ஒட்டிய இது காணப்படும். (இந்தப் பொத்தானை நீங்கள் காணவில்லை எனில், நீங்கள் இன்னும் லேம்டா செயல்பாட்டை உருவாக்கவில்லை என்று அறியலாம். உங்கள் திரையின் நடுப்பகுதியை ஒட்டி காணப்படும் "தொடங்கு" என்ற நீலநிற பொத்தானை கிளிக் செய்யவும்.)

5. "alexa-skill-kit-sdk-factskill" என்று அழைக்கப்படும் ப்ளூபிரிண்டை தேர்ந்தெடு. உங்கள் திறனுக்கான அமைப்பை அளிக்கக் கூடிய ஒரு ஷாட்கட் தேர்வை, ப்ளூபிரிண்ட் வடிவில் அமேசான் உருவாக்கி உள்ளது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தி, ஒரு ப்ளூபிரிண்டைத் தேடி பார்க்கலாம். இந்த ப்ளூபிரிண்ட்டானது, அலெக்ஸா-எஸ்டிகே-வை உங்கள் லேம்டா செயல்பாட்டுடன் சேர்க்கிறது. எனவே நீங்களாக இதை பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை.

6. உங்கள் ஊக்கமூட்டியை கட்டமைக்கவும். டேஷ்டு பாக்ஸில் கிளிக் செய்து, பட்டியலில் இருந்து அலெக்ஸா திறன்கள் கிட் தேர்ந்தெடு. பட்டியலில் அலெக்ஸா திறன்கள் கிட் இல்லாவிட்டால், படி 2-க்கு திரும்பச் செல்லவும்.

7. உங்கள் செயல்பாட்டைக் கட்டமைக்கவும். இந்தத் திரையில், லேம்டா செயல்பாட்டின் முக்கியமான பாகங்களை அமேசான் வெளியிடும். இந்த மதிப்புகள் உங்களுக்கு மட்டுமே தெரியும் என்பதோடு, உங்கள் செயல்பாடு ஏதாவது ஒரு வகையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஒரு பெயருக்கு வேறெந்த யோசனையும் இல்லாதபட்சத்தில், "ஸ்பேஸ்பேட்ஸ்" போதுமானது.

8. லேம்டா செயல்பாட்டு கோடு பெட்டியில், அளிக்கப்பட்ட கோடு நகலெடுக்கப்பட்டு, பதிக்க வேண்டும். கோடு பெட்டியில் இருக்கும் உள்ளடக்கங்களை அழித்துவிட்டு, புதிய கோடு உள்ளடக்கங்களைப் பதிக்க வேண்டும்.

9. உங்கள் லேம்டா செயல்பாட்டு பங்கை அமைக்கவும். லேம்டாவிற்கான உங்கள் முதல் பங்கை அமைப்பதற்கு, அமேசான் ஒரு விரிவான ஒத்திகையை அளிக்கிறது. இதை முன்னரே செய்திருந்தால், உங்களுடைய தற்போதைய பங்கின் மதிப்பை "lambdabasicexecution"க்கு செய்யவும்.

10. இந்த வழிகாட்டிக்கு, எல்லா மேம்பட்ட அமைப்புகளையும் நீங்கள் தவிர்க்கலாம்.

11. அடுத்தது என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் மதிப்பாய்வு திரைக்கு செல்லலாம். இந்த மதிப்பாய்வு திரை என்பது, உங்கள் விருப்பத்தேர்வுகளின் திரட்டு ஆகும். கீழே இடது முனையில் உள்ள செயல்பாட்டை உருவாக்கு என்பதை கிளிக் செய்யவும். கீழ்நோக்கி உருட்டி சென்று, செயல்பாட்டை உருவாக்கு பொத்தானைக் காணலாம்.

12. செயல்பாட்டை உருவாக்கிய பிறகு, மேல் வலதுமுனையில் ஏஆர்என் மதிப்பு தோன்றுகிறது. வழிகாட்டியின் அடுத்த பிரிவில் பயன்படுத்தும் வகையில், இந்த மதிப்பை நகலெடுத்து கொள்ளுங்கள்.

படி 4: உங்கள் லேம்டா செயல்பாடு உடன் உங்கள் வாய்ஸ் பயனர் இடைமுகத்தை இணைக்கவும்

படி 4: உங்கள் லேம்டா செயல்பாடு உடன் உங்கள் வாய்ஸ் பயனர் இடைமுகத்தை இணைக்கவும்

இப்போது மேற்கண்ட இரு பகுதிகளையும் நாம் ஒன்றாக இணைக்க வேண்டியுள்ளது.

1. திரும்பவும் அமேசான் மேம்பாட்டாளர் போர்ட்டலுக்கு சென்று, பட்டியலில் இருந்து உங்கள் திறனைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பயிற்சியின் தொடக்கம் முதல் ஆரம்பித்திருந்தால், ஒரு பிரவுஸர் டேப் திறந்த நிலையிலே இருக்கக்கூடும்.

2. இடதுபக்கத்தில் உள்ள "கட்டமைத்தல்" டேப் திறக்கவும்.

3. உங்கள் நிலப்பகுதிக்கு ஏற்ப, "வட அமெரிக்கா" அல்லது "ஐரோப்பா" என தேர்ந்தெடுக்கவும். முக்கியம்: உங்கள் லேம்டா இன் உருவாக்கப்பட்ட போது, நீங்கள் தேர்ந்தெடுத்த அதே பகுதியை சரியான இங்கு தேர்ந்தெடுத்துள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளவும். அலெக்ஸா திறன்களை பயன்படுத்தும் ஏடபில்யூஎஸ் லெம்டா, என்.வெர்ஜினா (வட அமெரிக்கா) மற்றும் அயர்லாந்து (ஐரோப்பா) ஆகியவற்றில் மட்டும் இயக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

4. உங்கள் முடிவு பகுதிக்காக, "ஏடபில்யூஎஸ் லேம்டா ஏஆர்என்" தேர்வை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விரும்பும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், உங்கள் கோடு வெளியிட உங்களால் முடியும். ஆனால் எளிமை மற்றும் சிக்கன நடவடிக்கையை கருத்தில் கொண்டு, ஏடபில்யூஎஸ் லேம்டாவை பயன்படுத்துகிறோம்.

5. உங்கள் லேம்டாவின் ஏஆர்என் (அமேசான் ஆதார பெயர்), அளிக்கப்பட்டுள்ள செய்திபெட்டியில் பதிக்கவும்.

6. "கணக்கு இணைப்பு" அமைப்பிற்கு "வேண்டாம்" என்று விடவும். இந்த திறனுக்கு, கணக்கு இணைப்பு தேவையில்லை.

படி 5: உங்கள் திறனுக்கு பீட்டா சோதனை (விருப்பத் தேர்வு)

படி 5: உங்கள் திறனுக்கு பீட்டா சோதனை (விருப்பத் தேர்வு)

உங்கள் திறன் முடிவடைந்த நிலையில், உங்கள் திறனுக்கான பீட்டா சோதனை செய்வதற்கான அமைப்பை உருவாக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. இந்த பீட்டா சோதனையின் மூலம் பொதுவாக என்பதற்கு பதிலாக, நீங்கள் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்த ஒரு குறிப்பிட்ட சோதனையாளர்களைக் கொண்ட குழுவிற்கு, உங்கள் திறன் கிடைக்கப் பெறுகிறது.

1. அமேசான் மேம்பாட்டாளர் போர்ட்டலுக்கு மீண்டும் சென்று, பட்டியலில் இருந்து உங்கள் திறனை தேர்ந்தெடுக்கவும். இந்தப் பயிற்சியின் தொடக்கம் முதல் ஆரம்பித்திருந்தால், ஒரு பிரவுஸர் டேப் திறந்த நிலையிலே இருக்கக்கூடும்.

2. இடதுபக்கத்தில் உள்ள "சோதனை" என்ற டேப்பை திறக்கவும்

3. உங்கள் திறனை சேவை ஸ்டிமிலேட்டர் மூலம் சோதித்து அறியலாம். எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உங்கள் திறன் பணியாற்றுகிறது என்பதை தரம்பிரித்து அறிய, சேவை ஸ்டிமிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. உச்சரிப்பு செய்தி பெட்டியில் "ஒரு காரணியை அளிக்கவும்" என்று தட்டச்சு செய்யவும்.

படி 6: உங்கள் திறனை சமர்ப்பிக்கவும்

படி 6: உங்கள் திறனை சமர்ப்பிக்கவும்

உங்கள் திறனை பொதுவில் வெளியிட நீங்கள் தயாராகும் போது, சான்றிதழ் பெற அதை சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைக்கு உங்கள் திறன் பீட்டா சோதனையில் இருந்தாலும், சான்றிதழ் உடன் அதை செய்யலாம்.

1. சான்றிதழ் பெற செய்ய, சமர்ப்பண பட்டியல் உடன் உங்கள் திறனை முதலில் சோதித்து பார்க்க வேண்டும். அமேசான் சான்றிதழ் வழங்கும் அணியினர் உட்பட பலவற்றை இந்த பட்டியல் கொண்டுள்ளது. எனவே மேற்கண்ட எல்லா சோதனைகளிலும் நீங்கள் வெற்றிப் பெற்றால், உங்கள் சான்றிதழ் பெறும் பணி விரைவடையும்.

2. உங்கள் திறனை பொதுவில் வெளியிட, நீங்கள் தயாராகும் நிலையில், சான்றிதழ் அளிப்பதற்கான பட்டியலில் உள்ள அனைத்து தேவைகளையும், உங்கள் திறன் பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் திறனைகளை சான்றிதழ் பெறுவதற்கு சமர்ப்பிக்கவும்.

முடிவு

உங்கள் திறன் வெளியிடப்பட்டால், அலெக்ஸா பயன்பாட்டின் மூலம் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு காண கிடைத்து, அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

அதே நேரத்தில், உங்கள் திறனில் தொடர்ந்து நீங்கள் பணியாற்றி கொண்டே இருக்கலாம் (இருக்க வேண்டும்). அதன்மூலம் அதன் அம்சங்களை வளர்த்து, பிரச்சனைகளை கண்டறிந்து, உங்களை நாடும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ல திறன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் மற்றும் திறனைகளை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஆகியவற்றிற்கு, சான்றிதழ் பெறுவதற்கான திறனை சமர்ப்பித்தல் பகுதியில் "நேரலை திறனுக்கான புதிய பதிப்பை உருவாக்குதல்" பகுதியில் காண முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Here's how to build a custom skill for the Echo devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X