ஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..? டிப்ஸ் இதோ.!

'பிரைவேட் மோட்'-ல் ப்ரவுசிங் ஹிஸ்டரி சேமிக்கப்படுவதில்லை என்பதால் அதையும் பயன்படுத்தலாம்.

By GizBot Bureau
|

தகவல்களை திரட்ட வேண்டும் என்றால் எங்கும் அலைய வேண்டியதே இல்லை . இருக்கும் இடத்தில் இருந்தே ப்ரவுசிங் மூலம் பல்வேறு வழிகளில் எளிதாக தகவல்களை திரட்ட முடியும். ஆனால் நாம் தேடும் தகவல்கள் இணையத்தில் எங்கெல்லாம் சேகரிப்படுகிறது எனத் தெரியுமா? அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்று ப்ரவுசிங் ஹிஸ்டரி. ஆனால் ப்ரவுசர் என்ற உலாவியும், இணையப்பக்கங்களும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போது பல்வேறு வழிகளில் தகவல்களை சேமிக்கப்படுகின்றன. அவை கேசஸ், குக்கீஸ், ப்ரவுசர் எக்ஸ்டென்சன், ஆட்டோபில் போன்ற பல வடிவங்களில் இருக்கலாம்.

ஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..? டிப்ஸ் இதோ.!

உங்கள் இணைய நடவடிக்கைகள் அனைத்தும் முழுவதும் பாதுகாப்பானது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும் சில வழிகளில் உலாவியின் குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்படுத்தி குறைவான அளவு தகவலே சேகரிக்கப்படுமாறு செய்யலாம். அதற்கு உங்கள் உலாவியின் தனியுரிமை அமைப்புகளில்(Privacy Settings) சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..? டிப்ஸ் இதோ.!
குரோம் (Chrome)
குரோமில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, அதில் பைரஸி-யை கிளிக் செய்தால் ஒரு பட்டியல் தோன்றும்.

அதில் 'சேப் ப்ரவுசிங்' என்பதை தேர்வு செய்யவும். பெயருக்கேற்றாற் போல் உங்கள் ப்ரவுசிங் தகவலை பாதுகாக்கிறது குரோம். இதில் மோசடிகள் மற்றும் வைரஸ்கள் பற்றி எச்சரிக்கை செய்யப்படுகிறது.

'டோன்ட் டிராக்கிங்' என்பதை தேர்வு செய்வதன் மூலம், குரோம் இணையதளத்திற்கு ரிக்வஸ்ட் அனுப்பும். ஆனால் இணையதளங்கள் அதை நிராகரித்து தொடர்ந்து தகவல்களை சேகரிக்கலாம்.

'பிரைவேட் மோட்'-ல் ப்ரவுசிங் ஹிஸ்டரி சேமிக்கப்படுவதில்லை என்பதால் அதையும் பயன்படுத்தலாம். செயலியை திறந்து, மூன்று புள்ளிகளை கிளிக் செய்து வரும் பட்டியலில் 'new Incognito Tab' ஐ தேர்வு செய்ய வேண்டும்.

'செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று 'பைரவசி'-ல் 'கிளியர் ப்ரவுசிங் ஹிஸ்டரி' என்பதை தேர்வு செய்யலாம். அதில் நீங்கள் நீக்க விரும்பும் பட்டியலை தேர்வு செய்து நீக்கலாம்.

ஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..? டிப்ஸ் இதோ.!

பையர்பாக்ஸ் (Firefox)
இந்த ப்ரவுசரில் உள்ள மெனுவில் செட்டிங்ஸ் தேர்வு செய்து, பின்வரும் வசதிகளை இயக்கவும்.

'டிராக்கிங் ப்ரொடெக்சன்' : இந்த வசதியை முக்கியமாக ப்ரைவேட் ப்ரவுசிங்-க்காக பயன்படுத்தும் போதிலும், சாதாராணமாக ப்ரவுசிங் செய்யவும் பயன்படுத்தலாம். கேடயம் சின்னம் முகவரி பட்டையில் தெரிந்தால், இந்த ப்ரவுசரில் ட்ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

'Clear private data on exit' என்பதை தேர்வு செய்வதன் மூலம், பையர்பாக்ஸ் ப்ரவுசரை மூடும் போது அனைத்து தகவலும் அழிக்கப்படும்.

பாஸ்வேர்ட் சேமிக்க வேண்டியதில்லை என்றால்
'Remember Logins' ஐ அன்செக் செய்யவும்.

சாபாரி (Safari)
செட்டிங்ஸ் பகுதியில், 'பைரைவசி மற்றும் செக்யூரிட்டி' யை தேர்வு செய்தால் கீழ்கண்ட வசதிகளை காண முடியும்.

Prevent cross-site tracking: இந்த வசதியின் மூலம் உங்களின் மற்ற இணையபக்கங்களின் தகவல்களை இணையதளங்கள் சேகரிப்பது தடுக்கப்படுகிறது.

Block all Cookies:
விரைவாக ப்ரவுஸ் செய்வதற்கு வசதியாக தகவல்களை இதில் சேமிக்கப்படுகிறது. அதையும் தடை செய்யலாம்.

Camera and Microphone access: இந்த வசதியே அன்செக் செய்வதன் மூலம் பிற இணையதளங்கள் கேமராவை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

ப்ரவுசிங் ஹிஸ்டரியை நீக்க, செட்டிங்ஸ் பகுதியில் 'Clear history and website data.'ஐ தேர்வு செய்யவும்.

ஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..? டிப்ஸ் இதோ.!

டக் டக் கோ(Duck Duck go)
இந்த செயலியில் ஒரு பொத்தனை அழுத்துவதன் மூலம் டிராக்கிங் தடை செய்வது, என்கிரிப்ட் செய்த இணைப்புகள், ஹிஸ்டரியை கிளியர் செய்வது மற்றும் புதிய டேப்ஐ திறப்பது என அனைத்தும் செய்யலாம். மேலும் இந்த செயலி வழங்கும் ப்ரவுசரில் ப்ரவுசிங் தகவல்கள் ட்ராக் செய்யப்படுவது இல்லை.
Best Mobiles in India

English summary
How to browse privately on your smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X