ஜியோ 4ஜி வேகத்தை 10 எம்பிபிஎஸ் வரை அதிகரிப்பது எப்படி.?
ஜியோ 4ஜி வேக குறைபாடுதனை எப்படி சரிசெய்வது எப்படி.? அதன் வேகத்தை 10 எம்பிபிஎஸ் வரையிலாக மேம்படுத்துவது எப்படி.?
செப்டம்பர் 1, 2016 அன்று முதல் நாட்டு மக்களுக்கு அதன் 4ஜி சேவைகளை தொடங்கியது ரிலையன்ஸ் ஜியோ அன்று முதல் இன்று வரையிலாக பல்வேறு காரணங்களுக்காக இணையத்தை சுற்றி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ புயல். உடன் பல குறைபாடுகளும் சேர்த்தே வளம் வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் - மெதுவான 4ஜி வேகம்..!
பெரும்பாலானோர்கள் ஜியோ 4ஜி வாடிக்கையாளர்கள் சில சமயங்களில் நெட்வொர்க்கில் மெதுவான 4ஜி பதிவிறக்க வேகத்தை சந்திப்பதாக குறை கூறி வருகின்றனர். அப்படியான ஜியோ 4ஜி வேக குறைபாடுதனை எப்படி சரிசெய்வது எப்படி.? அதன் வேகத்தை 10 எம்பிபிஎஸ் வரையிலாக மேம்படுத்துவது எப்படி.? என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.

வழிமுறை #01
முதலில் கூகுள் ப்ளேஸ்டோர் சென்று இண்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர் அண்ட் ஆப்டிமைசேர் ஆப் (Internet Speed Booster and Optimizer app) ஆகியவைகளை பதிவிறக்கம் செய்யவும்.

வழிமுறை #02
இந்த ஆப் ஆனது ரூட் செய்யப்பட்ட மற்றும் ரூட் செய்யப்படாத ஆகிய இரண்டு கருவிகளின் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும். ஆக உங்கள் ப்ரொபைலுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

வழிமுறை #03
நீங்கள் குறிப்பிட்ட ப்ரொபைலை தேர்வு செய்து எனேபிள் செய்த பின்னர் ஆப்பை ரன் செய்யவும்.

வழிமுறை #04
ரன் செய்த பின்னர் இப்போது உங்களக்கு ஸ்மார்ட் போன் ஆனது அதிவேக 4ஜி இண்டர்நெட் வேகத்தை உங்களுக்கு வழங்கும்.

வழிமுறை #05
குறிப்பிடத்தக்க ஒன்றாக கிடைக்கப்பெறும் நீங்கள் இருக்கும் வட்டாரத்தை பொறுத்தது என்பது முக்கியமாக வட்டாரத்தின் ப்ரவுஸிங் மற்றும் பதிவிறக்க வேகத்தை பொறுத்தது. 4ஜி வேகமானது இடத்திற்கு இடம் வேறுபடும்.


Click it and Unblock the Notifications








