உங்களது ஐபோன் / ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் சிக்னலை பூஸ்ட் செய்வது செய்வது எப்படி?

பேட்டரி அளவு குறையும் போது மொபைல்போன் பேட்டரி சேமிக்கப்படும் வகையில் அவை உருவாக்கப்படுகின்றன.

By Staff
|

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நம்மில் பலருக்கும் சிக்னல் கோளாறு அவ்வப்போது ஏற்படும். இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம் குறைவது, அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்று பல்வேறு பிரச்சனைகள் எழும்.

நம் வாழ்வின் நீக்கமுடியாத அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நம் மனதை அதிகம் பாதிக்கும். இதனாலேயே நம் பணிகளில் தொய்வு நிலை ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா?

இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

1 - ஸ்மார்ட்போன் ஆன்டெனா

1 - ஸ்மார்ட்போன் ஆன்டெனா

ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செயய் வேண்டும்.

2 - செல் டவர் இடையூறுகள்

2 - செல் டவர் இடையூறுகள்

செல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும்.


இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்?

• ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம்.

• இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.


• இரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.

3 - மொபைல்போன் பேட்டரி

3 - மொபைல்போன் பேட்டரி

பேட்டரி அளவு குறையும் போது மொபைல்போன் பேட்டரி சேமிக்கப்படும் வகையில் அவை உருவாக்கப்படுகின்றன. பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே.

இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.

4 - சிம் கார்டு சரிபார்த்தல்

4 - சிம் கார்டு சரிபார்த்தல்

திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம். இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகலாம்.

ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம்.

5 - 2ஜி / 3ஜி நெட்வொர்க்

5 - 2ஜி / 3ஜி நெட்வொர்க்

சில பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது. இதுபோன்ற சமயங்களில் நம் மொபைல் போனுக்கு கிடைக்கும் சிக்னல் அளவுக்கு ஏற்ப அவை தானாக சிறப்பான நெட்வொர்க்-ஐ தேர்வு செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன. எனினும் நெட்வொர்க் மோட் ப்ரியாரிட்டியில் இருக்கும் போது கால் டிராப்கள் ஏற்படலாம்.

இந்த பிரச்சனையை சரி செய்ய மொபைல் போன் செட்டிங்களை மாற்றலாம்.

ஆன்ட்ராய்டு பயனர்கள் கனெக்ஷன் செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- நெட்வொர்க் மோட் -- 2ஜி / 3ஜி ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.


ஐபோன் பயனர்கள் செட்டிங்ஸ் -- செல்லுலார் -- செல்லுலார் டேட்டா ஆப்ஷன்கள் -- எனேபிள் 4ஜி என்ற ஆப்ஷனை செயல் இழக்க செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to boost signal strength of your iPhone Android smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X