ஆண்ட்ராய்டு போனில் கேம் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?
சந்தையில் கிடைக்கும் உயர்தர கேம்களை விளையாட தேவையான ஹார்ட்வேர் உள்ள மொபைல்கள் அனைவரிடமும் இருப்பதில்லை.
ப்ளே ஸ்டோரில் நிரம்பி வழியும் கேம்கள், சிலருக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆனால் பலருக்கோ சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதை தான். சந்தையில் கிடைக்கும் உயர்தர கேம்களை விளையாட தேவையான ஹார்ட்வேர் உள்ள மொபைல்கள் அனைவரிடமும் இருப்பதில்லை. அதற்காக போனை மாற்றுவது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. மாற்றுவழி என்னவென்று யோசித்தால், உயர்தர கேம்கள் விளையாடும் வகையில் உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிப்பது தான் ஒரே வழி.

ஆண்ட்ராய்டு ரூட் செய்வதன் மூலம் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?
படி#1
முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், ஏற்கெனவே ஆண்ட்ராய்டு மொபைலை ரூட் செய்யவில்லை என்றால் முதலில் அதை செய்யவேண்டும்.
படி#2
ஆண்ட்ராய்டை ரூட் செய்து முடித்தவுடன், GITools என்ற ஆண்ட்ராய்டு செயலியை இன்ஸ்டால் செய்யவும். இந்த செயலியின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு கருவியின் கிராபிக்ஸ் செயல்திறனை மேம்படுத்தலாம்.
படி#3
இந்த செயலியை இன்ஸ்டால் செய்தவுடன், சூப்பர் யூசருக்கான அனுமதியை கேட்கும். இதன் மூலம் சிஸ்டம் செட்டிங்களை மாற்றி, போனின் செயல்திறனை அதிகரிக்கும்.

படி#4
GITools ஐ இன்ஸ்டால் செய்தாலும், அதை இயக்க வைக்க TEX(DE)coder என்ற பிளக்கின் கூடுதலாக தேவைப்படும்.
படி#5
பிளக்கின்-ஐ பதிவிறக்கம் செய்தவுடன், அதன் விதிமுறைகளை ஆமோதித்து பின்னர் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மாற்றங்களை நடைமுறைக்கு வர போனை ரீபூட் செய்யவேண்டும்.
படி#6
போனை ரீபூட் செய்தவுடன், இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளின் பட்டியல் காண்பிக்கப்படும் . அதில் எந்த கேமின் செயல்திறனை அதிகரிக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவேண்டும்.

படி#7
தேர்வு செய்யப்பட்டுள்ள செயலியின் பல்வேறு அம்சங்களை மாற்றம் செய்யலாம். பின்வரும் செட்டிங்களை உங்களால் மாற்ற முடியும்.
1) Anti-aliasing (MSAA/CSAA
2) Render resolution
3) Force 16-bit rendering
4) Optimize GLSL shaders
5) Enable Texture decompression
6) Enable Texture recompression
7) Downscale Textures
8) Use FPS counter
9) FPS update delay
இப்போது உங்கள் மொபைல் உயர்தர கேம்களை விளையாட தயாராகிவிட்டது.


Click it and Unblock the Notifications