உங்களுக்கு பிடித்த டிவிட்ஸை புக்மார்க் செய்யும் வழிமுறைகள்.!

பிரபலங்கள், முக்கிய நபர்கள் மற்றும் தூண்டும் உரையாடல்கள் நடத்த விரும்பும் நபர்கள் ஆகியோருக்கான ஒரு முக்கிய தளமாக, டிவிட்டர் விளங்குகிறது.

|

பிரபலங்கள், முக்கிய நபர்கள் மற்றும் தூண்டும் உரையாடல்கள் நடத்த விரும்பும் நபர்கள் ஆகியோருக்கான ஒரு முக்கிய தளமாக, டிவிட்டர் விளங்குகிறது. நீங்கள் டிவிட்டரை அதிகளவில் பயன்படுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில், அது எந்த அளவிற்கு தகவல்களை அளிக்க வல்லது, அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியது அல்லது மிகவும் தீவிரமானது என்பது தெரிந்திருக்கும். இந்த மைக்ரோபிளாக்கிங் தளமானது, பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் போல பரவலாக பயன்பாட்டில் இல்லை என்றாலும், அதிக விறுவிறுப்பான அல்லது மும்முரமான உரையாடல்கள் நடைபெறும் ஒரு இடமாக திகழ்கிறது.

உங்களுக்கு பிடித்த டிவிட்ஸை புக்மார்க் செய்யும் வழிமுறைகள்.!


இது போன்ற சிறப்பான செயல்பாடுகள் நடைபெறும் நிலையில், உரையாடல்கள் அல்லது நீங்கள் அதிகமாக விரும்பிய டிவிட்ஸ் ஆகியவற்றை பிற்காலத்தில் பார்க்க முடிந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்டுரைகளின் மூலம் அவற்றை நீங்கள் புக்மார்க் நிலையில் வைத்து கொள்ள அல்லது ஆஃப்லைனில் சேமித்து வைக்க முடியும். இந்த தேவையை உணர்ந்த டிவிட்டர், உங்களுக்கு விருப்பமான டிவிட்ஸ்களை புக்மார்க் செய்து கொள்ளும் ஒரு அம்சத்தை அளிக்கும் வகையில் அப்ளிகேஷனை புதுப்பித்து உள்ளது.

முக்கியமான செய்திகளின் புதுப்பிப்புகள், அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடிய டிவிட்ஸ் அல்லது நீண்ட செய்தி என்று எதுவாக இருந்தாலும், டிவிட்ஸை புக்மார்க் செய்து கொள்வதை டிவிட்டர் எளிதாக்கி உள்ளது. இதை எல்லா தளங்களிலும் செய்ய முடியும் என்பதால், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் ஃபோன்கள் மற்றும் இணைய பிரவுஸர்கள் ஆகியவற்றில் இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விளக்கி உள்ளோம்.

உங்களுக்கு பிடித்த டிவிட்ஸை புக்மார்க் செய்யும் வழிமுறைகள்.!

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் -
உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, டிவிட்டர் அப்ளிகேஷனை திறக்கவும். இதை திறக்கும் முன் புதுப்பிக்காமல் இருந்தால், புக்மார்க் தேர்வை நீங்கள் பயன்படுத்த முடியாது. நீங்கள் சேமிக்க விரும்பும் டிவிட்டை காணும் வரை கீழ் நோக்கி உருட்டவும். அந்த டிவிட்டிற்கு கீழே, பிடிக்கும் என்ற பொத்தானுக்கு அருகில் பகிர் ஐகான் இருப்பதை காணலாம். அதன் மீது தட்டினால், மூன்று தேர்வுகளுடன் கூடிய ஒரு விண்டோ திறக்கிறது. அதில் இரண்டாவதாக உள்ள 'புக்மார்க்கில் டிவிட்டை சேர்' என்ற தேர்வு இருப்பதை காணலாம். அதன்மீது தட்டிய உடன், அது வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது என்ற செய்தியை டிவிட்டர் கீழே வெளியிடும்.

மெனு ஸ்லைடரை பயன்படுத்தி, இந்த புக்மார்க்கில் இருக்கும் டிவிட்ஸை நீங்கள் அணுக முடியும்.

உங்களுக்கு பிடித்த டிவிட்ஸை புக்மார்க் செய்யும் வழிமுறைகள்.!


இணைய பிரவுஸர் -
உங்களுக்கு விருப்பமான ஒரு பிரவுஸரின் மூலம் டிவிட்டர் இணையதளத்திற்கு சென்றால், அதில் புக்மார்க் அம்சத்தை காண முடியாது. இந்த அம்சத்தை அறிமுகம் செய்த போதே, தரமான ஸ்மார்ட்போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள தங்கள் அப்ளிகேஷனை தவிர, மொபைல் இணையதளங்களில் மட்டுமே இயங்க வேண்டும் என்று திட்டமிட்டு டிவிட்டர் வெளியிட்டுள்ளது.

இதிலிருந்து ஒரு ஸ்மார்ட்போன் பிரவுஸரில் இருந்து அணுகும் டிவிட்ஸை மட்டுமே புக்மார்க் செய்ய முடியும் என்று அறியலாம். அதே நேரத்தில், இதை டெஸ்க்டாப்பில் செய்ய வேண்டுமானால், மொபைல்போன்களுக்கான டிவிட்டர் தளமான https://mobile.twitter.com-க்கு சென்று செய்யலாம்.

மேற்கண்ட வழிமுறைகள் மிக எளிதாக செய்யக்கூடியவை ஆகும். அதை முயற்சித்து பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்!

Best Mobiles in India

English summary
How to bookmark tweets; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X