மொபைல் ஆப் இல்லாமல் இல்லாமல் உபெர் கேப்ஸ் புக் செய்வதெப்படி.?
உபெர் நிறுவனத்தின் புதிய அம்சம் ஒன்று பயனர்கள் தங்கள் மொபைலில் உபெர் ஆப் இல்லாமலேயே கேப்ஸ் புக் செய்ய அனுமதிக்கிறது.
சமீபத்தில், உபெர் நிறுவனம் தனது பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருந்தது. அதன் கீழ் உபெர் அதிக அளவிலான பயனர்களை ஈர்க்கவும், ஒவ்வொரு பயனரின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் சில அற்புதமான அம்சங்களை அறிமுகம் செய்தது.
அவைகளில் நேர விரயத்தை தவிர்க்க முன்பே சவாரியை ஷெட்டுல் செய்வது, முதல் அணுகுமுறையிலேயே இலக்கை நிர்ணயிப்பது, இணை பயணிகள் மற்றும் உட்பட இதர தேர்வுகளை நிகழ்த்துவது போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இப்போது இந்த கேப் சேவை நிறுவனம், மற்றொரு புதிய அம்சத்தை வழங்குகிறது, அதாவது 29 இந்திய நகரங்களில் உள்ள தங்களின் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் உபெர் ஆப் இல்லாவிட்டாலும் கூட கேப் புக் செய்யும் அம்சத்தை வழங்கியுள்ளது. இப்போது நீங்கள் ஒரு உபெர் மொபைல் பயன்பாடு பதிவிறக்கம் செய்யாமலேயே உபெர் கேப் புக் செய்யலாம், அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

வழிமுறை #01
மொபைல் பயன்பாடு பதிவிறக்கம் செய்யாமல் ஒரு உபெர் சவாரி பதிவு செய்ய, பயனர் முதலில் தங்கள் மொபைல் ப்ரவுஸர் வழியாக dial.uber.com வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02
dial.uber.com வலைத்தளத்தில் நுழைந்த பின்னர், பயனர் இப்போது மொபைல் எண் உட்பட அவர்களின் விவரங்களை பதிவு செய்து அது உங்கள் இடத்தை கண்காணிக்க அனுமதிக்கவும், பின்னர் பயனர் எளிதாக தங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் அல்லது மின்னஞ்சல் ஐடி பயன்படுத்தி கேப் பதிவு செய்யலாம்.

வழிமுறை #03
நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் நுளைந்த உடனேயே ஒரு வெற்றிகரமான சவாரியை நிகழ்த்த உங்கள் தகவல்களை அணுக விரும்பும் டயலாக் பாக்ஸ் தென்படும். அதில் "அலோ" என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை #04
பயனர் இப்போது வெறுமனே ஒரு சவாரியை கோரலாம். உபெர் டிரைவருடன் அழைப்பு மேற்கொண்டு சவாரியை மேற்கொள்ளலாம். மற்றும் கிளம்பும் முன்னரே வாடகை செலுத்தும் ஷேர் கேப்ஸ் போலில்லாமல் சவாரிக்கான வாடகையை நீங்கள் இறங்கும் இடத்தில் கொடுக்கலாம்.

மேலும் படிக்க
இப்போது கானா ஆப், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.!


Click it and Unblock the Notifications