பேஸ்புக் மெஸேன்ஜர் வழியாக கேப் புக் செய்வது எப்படி.?
பேஸ்புக் மெஸேன்ஜர் ஆனது பயனர்கள் நண்பர்களுடன் சாட் செய்வது தவிர்த்து மற்ற சில விடயங்கள் செய்யவும் உதவுகிறது. அதில் ஒன்றுதான் இது.
பேஸ்புக் சமீபத்தில் தனது மெஸேன்ஜரில் சாட் பின்னணி நிற மாற்றம், ரகசிய சாட் உட்பட பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது. அப்படியாக நாம் தினமும் பயன்படுத்தும் மெஸேன்ஜரில் நமக்கு தெரியாத பல அம்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பேஸ்புக் மெஸேன்ஜர் வழியாக கேப் புக் செய்ய முடியும் அம்சம்.!
பேஸ்புக் மெஸேன்ஜர் பயனர்கள் இப்போது நேரில் சுவாரசியமான பல விடயங்களை செய்ய முடியும்,அப்படியாக அதன் மூலம் கேப் முன்பதிவு செய்வது எப்படி என்பதை பின்வரும் வழிமுறைகளில் அறிந்துக்கொள்ளுங்கள்.

வழிமுறை #01
அனைத்து பயனர்களும் முதலில் செய்ய வேண்டியது எல்லாம் தங்கள் ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட பேஸ்புக் மெஸேன்ஜர் ஆப்பை நிறுவ வேண்டும். பின்னர் விரும்பும் எதாவது ஒரு உரையாடலை திறக்கவும்.

வழிமுறை #02
பின்னர் மெஸேன்ஜர் ஸ்க்ரீனில் மேல்பாகத்தில் காணப்படும் இந்த குறியை '>' அதை கிளிக் செய்து கேப் ஆப்ஷனை பெறவும்.

வழிமுறை #03
இந்த வழக்கில் நீங்கள் உபெர் கேப் புக் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட உபெர் பயன்பாட்டை பதிவு செய்திருக்க வேண்டும்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04
நீங்கள் கேப் பதிவு செய்த பிறகு, நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தும் ஏறும் இடம் இறங்கும் மற்றும் இறங்கும் இடம் ஆகியவைகளை செட் செய்ய வேண்டியது மட்டும் தான். இப்போது நீங்கள் செல்ல தயாராகலாம்.

1. மெஸேன்ஜர் மூலமாக இந்தியாவில் நீங்கள் மேரு கேப் மட்டுமே புக் செய்ய முடியும். 2. அதிகாரபூர்வ மெஸேன்ஜர் ஆப்பில் இந்த அம்சம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதும், இந்த அம்சத்திற்கு மெஸேன்ஜர் ஆப்பிற்கான பேஸ்புக் பாட்ஸ் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. மெஸேன்ஜர் மூலமாக இந்தியாவில் நீங்கள் மேரு கேப் மட்டுமே புக் செய்ய முடியும்.
2. அதிகாரபூர்வ மெஸேன்ஜர் ஆப்பில் இந்த அம்சம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதும், இந்த அம்சத்திற்கு மெஸேன்ஜர் ஆப்பிற்கான பேஸ்புக் பாட்ஸ் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
விஎல்சி மீடியா பிளேயர் பயன்படுத்தி யூட்யூப் வீடியோ டவுன்லோட் செய்வதெப்படி.?


Click it and Unblock the Notifications