ஓலா, உபெர் ஆப் இல்லாமல் கார் புக் செய்வது எப்படி?

ஓலா சேவையிலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வேலை செய்வதற்கென பிரத்யேக செயலி கிடைக்கிறது.

|

இருசக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களை சொந்தமாக வாங்காதவர்களுக்கும், வாங்கியும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோருக்கும் இந்த தொகுப்பு பயன்தரும்.

எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக அவசர சூழல்களில் கால் டாக்சி அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும். எதுவும் திட்டமிட்டப்படி நடக்காது என்பதற்கு இதை தவிர சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

எப்படியும், அவசர சூழல்களில் கால் டாக்சிக்களை புக் செய்யும் போது அவசியம் குறிப்பிட்ட சேவைகளின் செயலி ஸ்மார்ட்போனில் அவசியம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். நேரம் இருந்தால் குறிப்பிட்ட செயலிகளை இன்ஸ்டால் செய்வதில் பிரச்சனை இல்லை, அவசர சூழல்களில் மற்றவர்களிடம் உதவியை நாடாமல் கார் புக் செய்ய முடியும் என தெரியுமா?

ஸ்மார்ட்போனில் செயலியை இன்ஸ்டால் செய்யாமல் ஓலா அல்லது உபெர் போன்ற சேவைகளில் கார் புக் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

உபெர் மொபைல் ஆப் இல்லாமல் கார் புக் செய்வது எப்படி?

உபெர் மொபைல் ஆப் இல்லாமல் கார் புக் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன் இல்லாமல் உபெரில் கார் புக் செய்வது சுலபமான காரியம் தான், எனினும் இதை வெற்றிகரமாக மேற்கொள்ள சில தந்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உபெர் டெஸ்க்டாப் தளத்தில் கார் புக் செய்ய முடியாது என்பதால், நீங்கள் மொபைல் வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டும். இதை எப்படி செய்ய வேண்டும்?

- கம்ப்யூட்டரின் பிரவுசரில் m.uber.com என்ற வலைத்தளம் செல்ல வேண்டும்.

- அடுத்து திறக்கும் திரையில் உங்களது மொபைல் நம்பரை பதிவிட்டு, பாஸ்வேர்டையும் பதிவிட வேண்டும்.

- இனி உங்களது மொபைல் எண்ணிற்கு ஒடிபி (OTP) அனுப்பப்படும், இதனை பதிவிட்டு புக்கிங் செய்வதற்கான பக்கத்திற்கு செல்ல வேண்டும். இது ஒருமுறை மட்டும் செய்தாலே போதும் என்பதால், அடுத்த முறை கார் புக் செய்ய மீண்டும் சைன்-இன் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

- சைன்-இன் செய்ததும் உங்களது லொகேஷனை இயக்குவதற்கான அனுமதி கோரப்படும். இங்கு எனேபிள் அல்லது டிசேபிள் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து புக்கிங் செய்வதற்கான திரைக்கு செல்லலாம்.

- இங்கு நீங்கள் எங்கிருந்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும்.

- அடுத்து திறக்கும் திரையில், உங்களது பயண விவரம் மேப் மூலம் காண்பிக்கப்படும். இதனுடன் பல்வேறு கேப்கள், அவற்றின் தோராய கட்டண விவரம் மற்றும் பிக்கப் செய்ய வேண்டிய நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். இதே பகுதியில் கட்டண வழிமுறைகளும், அதனை உறுதி செய்யும் (Request) ஆப்ஷனும் காணப்படும்.

- ரிக்வஸ்ட் (Request) ஆப்ஷனை கிளிக் செய்ய பயணத்தை துவங்கலாம்.

விண்டோஸ் இயங்குதளத்துக்கான உபெர் ஆப்

விண்டோஸ் இயங்குதளத்துக்கான உபெர் ஆப்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை விட எளிமையான முறையிலும் உபெர் புக் செய்ய முடியும், ஆனால் இதற்கு நீங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் 10 இயங்குதளங்களில் வேலை செய்வதற்கென பிரத்யேக உபெர் செயலி உள்ளது. இது உங்களின் லொகேஷனை பயன்படுத்தி உபெரில் கார் புக் செய்யும்.

இந்த செயலியை பயன்படுத்துவதும் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வேலை செய்யும். எனினும் இது பிரவுசரை விட வேகமாக வேலை செய்யும். எனினும் செயலியை பயன்படுத்தி இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் அதிகாரப்பூர்வ உபெர் செயலியை மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்யலாம்.

ஓலா சேவையிலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வேலை செய்வதற்கென பிரத்யேக செயலி கிடைக்கிறது, எனினும் இது விண்டோஸ் 10 மொபைலில் மட்டுமே வேலை செய்யும், இதனால் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இதனை பயன்படுத்த முடியாது.

மேக் இயங்குதளத்துக்கான உபெர் ஆப்

மேக் இயங்குதளத்துக்கான உபெர் ஆப்

மேக் பயனர்களுக்கென பிரத்யேக உபெர் செயலி கிடையாது. எனினும் ஃபாஸ்ட்லேன் (Fastlane) எனும் செயலியை கொண்டு ஆப்பிள் கம்ப்யூட்டரில் உபெர் கார் புக் செய்யலாம். அதிகாரப்பூர்வ உபெர் ஆப் போன்றே ஃபாஸ்ட்லேன் செயலியும் இலவசமாக கிடைக்கிறது. இதுவும் உங்களது கம்ப்யூட்டர் மெனு பாரில் இருக்கும் என்பதால் ஒற்றை கிளிக் செய்து சேவையை பெறலாம்.

கிளிக் செய்ததும், உங்களின் பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன்களை பதிவிட்டு ரிக்வஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த சேவையும் அதிவேகமாக வேலை செய்யும் என்றாலும், அதிகாரப்பூர்வ மொபைல் இணையத்தளம் போன்று இந்த சேவை வேலை செய்யாது. மூன்றாம் தரப்பு செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. இருந்தாலும் இந்த சேவையே போதும் என்போர் ஃபாஸ்ட்லேன் செயலியை அதன் இணையதளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஆஃபீஸ் 365-இல் உபெர்

ஆஃபீஸ் 365-இல் உபெர்

உபெர் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதால், ஆஃபீஸ் 365 மூலம் இந்த சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. நீங்களும் ஆஃபீஸ் 365 சந்தாதாரர் எனில் அவுட்லுத் ஏபிஐ (Outlook API) பயன்படுத்தி உபெர் வேலை செய்யும். இங்கு கேலென்டர் சேவையிலேயே உபெர் பயணங்களை புக் செய்யலாம்.

காலென்டரில் உபெர் ஆப் பயணங்களுக்கான ரிமைன்டர்களை செட் செய்தால், சரியான நேரத்தில் உங்களுக்கு பாப் அப் முறையில் நினைவூட்ட முடியும். இதனை ஸ்வைப் செய்து உங்களது பயணங்களை மேற்கொள்ள முடியும்.

மொபைல் ஆப் இல்லாமல் ஓலா கார் புக் செய்வது எப்படி?

மொபைல் ஆப் இல்லாமல் ஓலா கார் புக் செய்வது எப்படி?

மொபைல் போன் இல்லாமல் ஓலாவில் கார் புக் செய்வது எளிமையாக இருக்கும், இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

- உங்களது கம்ப்யூட்டரில் www.olacabs.com என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்

- வலைத்தளத்தின் இடதுபுறத்தில் காணப்படும் பெட்டியில் பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன்களை பதிவிட்டு நீங்கள் பயணிக்க வேண்டிய நேரத்தை குறிப்பிட வேண்டும்

- கேப்களை தேடக்கோரும் சர்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- பிக்கப் செய்ய வேண்டிய நேரம் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்களுடன் கார்களின் பட்டியலை திரையில் பார்க்க முடியும். இங்கு உங்களுக்கு சிறப்பானதாக தோன்றுவதை தேர்வு செய்யலாம். புக்கிங் செய்யும் போது பேமென்ட் ஆப்ஷனில் கேஷ் என குறிப்பிடப்பட்டிருக்கும். இனி சைன்-இன் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்..

How to Find a domain easily for your business (TAMIL)
வழிமுறை 1:

வழிமுறை 1:

முதலில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்

வழிமுறை 2: நீங்கள் பதிவிட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி (OTP) அனுப்பப்படும், இதனை குறிப்பிட்ட ஆப்ஷனில் பதிவிட வேண்டும். இதையும் ஒரு முறை மட்டும் செய்தாலே போதும் என்பதால் அடுத்த முறை கார் புக் செய்யும் போது மீண்டும் சைன்-இன் செய்ய வேண்டிய அவசியம் பெரும்பாலும் ஏற்படாது.

குறிப்பு: கம்ப்யூட்டர் மூலம் புக் செய்யப்படும் கார்களில் கேன்சல் செய்யும் வசதி வழங்கப்படவில்லை. இவ்வாறு புக் செய்து கேன்சல் செய்ய அவசியம் மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Book an Uber or Ola Cab Without the App ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X