இண்டர்நெட் இல்லாமல் ஓலா, முன்பதிவு செய்வது எப்படி?

Written By:

கடந்த மாதம் யுபெர் நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் கார் முன்பதிவு செய்யும் சேவையைத் துவங்கியது. இதற்கான வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யுபெர் நிறுவனத்தைப் போன்றே ஓலா நிறுவனமும் இண்டர்நெட் இல்லாமல் கார் முன்பதிவு செய்யும் சேவையை அறிவித்துள்ளது. இதனால் ஓலா ஆப் பயன்படுத்தி பயனர்கள் கார் முன்பதிவு செய்ய முடியும்.

இண்டர்நெட் இல்லாமல் ஓலா, முன்பதிவு செய்வது எப்படி என்பதைப் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஓலா ஆப்

ஓலா ஆப்

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் ஓலா ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்ஷன்

ஆப்ஷன்

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஓலா ஆப் ஓபன் செய்யும் போது, இரு ஆப்ஷன்களை பார்க்க முடியும். ஒன்று மீண்டும் முயற்சிக்கவும் (Try Again) அல்லது எஸ்எம்எஸ் மூலம் புக் செய் (Book via SMS). இதில் இரண்டாவது ஆப்ஷனினை தேர்வு செய்து மூன்றாவது வழிமுறையினை பின்பற்ற வேண்டும்.

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ் மூலம் புக் செய் (Book via SMS) ஆப்ஷனை தேர்வு செய்ததும் உங்களது ஸ்மார்ட்போனின் டீபால்ட் எஸ்எம்எஸ் ஆப்ஷன் ஓபன் ஆகும். இங்குக் கிடைக்கும் குறிப்பிட்ட எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி சில நிமிடம் காத்திருக்க வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கார்

கார்

குறுந்தகவல் அனுப்பியதும் உங்களுக்கு எஸ்எம்எஸ் ஒன்று வரும். இதில் உங்களின் அருகாமையில் இருக்கும் கார் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து குறிப்பிட்ட கார் எண்ணினை பதில் குறுந்தகவலில் அனுப்ப வேண்டும்.

தகவல்

தகவல்

காரினை தேர்வு செய்ததும் உங்களுக்கு மற்றும் ஓர் எஸ்எம்எஸ் வரும். இதில் காரின் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஓட்டுநருக்கு உங்களது தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த குறுந்தகவல் உறுதி செய்யும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
How to Book an Ola Cab Without Internet Connection Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot