கம்ப்யூட்டர் மற்றும் போன்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

கூகுளில் சென்று ஏதாவது ஒன்றை சியர்ச் செய்ய டைப் செய்யுங்கள். அதில் வலது ஓரத்தில் செட்டிங் ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்து அதில் உள்ள சியர்ச் செட்டிங் என்பதை தேர்வு செய்யுங்கள்.

By GizBot Bureau
|

இணையதளம் என்பது இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். இதன் மூலம் மிக வேகமான தகவல் தொடர்பு கிடைப்பதால் அனைத்து வேலைகளும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிக சுலபமாக முடிந்து விடுகிறது. இருப்பினும் இந்த இணையதளத்தால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது.

இதில் கொட்டி கிடக்கும் ஏராளமான ஆபாச இணையதளங்களால் குழந்தைகள் தவறான பாதைக்கு சென்றுவிட வாய்ப்பு இருப்பதாக ஒவ்வொரு பெற்றோரும் கவலையில் உள்ளன. இப்படி ஒரு கவலை உங்களுக்கு இருந்தால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். இந்த கட்டுரையில் உங்கள் குழந்தைகளை பாதுகாக்க ஆபாச இணையதளங்களை பிளாக் செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

1. சேஃப் சியர்ச் மோட் மூலம் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

1. சேஃப் சியர்ச் மோட் மூலம் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

ஆபாச தளங்களை பிளாக் செய்ய பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று சேஃப் சியர்ச் மோட். இதன் மூலம் ஆபாச இணையதளங்களை கம்ப்யூட்டரில் மட்டுமின்றி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பிளாக் செய்ய முடியும். இந்த ஃபில்டர் மூலம் ஆபாச தளங்கள் உள்பட தேவையில்லாத எந்த தளத்தையும் அனுமதிக்காது. அதுமட்டுமின்று ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், கூகுள் சியர்ச் ரிசல்ட்டுகளில் இவை தடை செய்துவிடும்

கம்ப்யூட்டரில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

கம்ப்யூட்டரில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: கூகுளில் சென்று ஏதாவது ஒன்றை சியர்ச் செய்ய டைப் செய்யுங்கள். அதில் வலது ஓரத்தில் செட்டிங் ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்து அதில் உள்ள சியர்ச் செட்டிங் என்பதை தேர்வு செய்யுங்கள்

ஸ்டெப் 2: பின்னர் இந்த சியர்ச் செட்டிங்கில் 'பில்டர் எக்ஸ்பிளிக்ட் ரிசல்ட் என்பதை க்ளிக் செய்து அதன் பின்னர் சேவி செய்துவிடுங்கள்.

ஸ்டெப் 3: சியர்ச் செட்டிங் செய்து முடித்த பின்னர் ஸ்ட்ரிக்ட் செட்டிங் செல்ல வேண்டும். இதன் மூலம் உங்கள் கூகுள் பாஸ்வேர்டு இல்லாமல் கூகுளை ஓப்பன் செய்ய முடியாது. இது உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உதவியாக இருக்கும்.

மொபைல் போன்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

மொபைல் போன்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

மொபைலில் ஆபாச தளங்களை பிளாக் செய்ய ஸ்ட்ரிக் சியர்ச் ஆப்சனையே கையாள வேண்டும்

ஸ்டெப் 1: முதலில் கூகுள் பாக்கம் சென்று பின்னர் செட்டிங் பகுதியை கிளிக் செய்ய வேண்டும் .

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

செட்டிங் சென்ற பின்னர் சேஃப் சியர்ச்சில் உள்ள ஸ்ட்ரிக்ட் என்ற பகுதியில் உள்ள சேஃப் சியர்ச் பில்டர் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

சேஃப் சியர்ச் பில்டரில் ஸ்குரோல் செய்தால் அதில் உள்ள சேவ் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு, ஐபோன், ஐபேட்களில் கூகுள் ஆப் மூலம் சேஃப் சியர்ச் மோட் எனேபிள் செய்யும் முறை

ஆண்ட்ராய்டு: கூகுள் ஆப் ஓப்பன் செய்து அதன் இடது மேல்புறம் உள்ள செட்டிங் சென்று அதில் உள்ள சியர்ச் செட்டிங்கை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள சேப் செட்டிங் பில்டர்ஸ் என்ற பகுதிக்கு சென்று சேப் சியர்ச்சை டர்ன் ஆன் செய்ய வேண்டும் பின்னர் பில்டர் எக்ஸ்பிசிட் ரிசல்ட் சென்று அதை சேவ் செய்ய வேண்டும் இதன் மூலம் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்யலாம்.

பகுதி 2: டி.என்.எஸ் மூலம் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

பகுதி 2: டி.என்.எஸ் மூலம் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

டி.என்.எஸ் செட்டிங் மூலம் ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்யும் முறைகள் குறித்து தற்போது பார்ப்போம்

ஐபோன்:

ஐபோன்:

ஸ்டெப் 1: செட்டிங் சென்று அதன் பின்னர் வைபை ஐகானை கிளிக் செய்து அதனை டர்ன் ஆன் செய்யவும்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

பின்னர் வயர்லெஸ் புரவைடர் செக்சன் செல்ல வேண்டும். 'ஐ' ஐகான் என்ற வட்ட வடிவ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

பின்னர் டி.என்.எஸ் சென்று அதில் உள்ள டி.என்.எஸ் நம்பரை செட் செய்ய வேண்டும். அந்த நம்பர் 192.110.1.2.223 என்ற வகையில் இருக்கும். இந்த நம்பரை நோட் செய்துவிட்டு பின்னர் அதை நம்பரை அழித்துவிட்டு டி.என்.எஸ். புரவைடரை சேர்த்தால் பாதுகாப்பான தளங்கள் மட்டுமே ஓப்பன் ஆகும்

மீண்டும் பழைய முறைக்கு செல்ல 208.67.222.123" அல்லது "208.67.220.123 என்ற எண்களை பயன்படுத்தவும்

ஆண்ட்ராய்டு போன்கள்:

ஆண்ட்ராய்டு போன்கள்:

ஸ்டெப் 1: முதலில் செட்டிங் சென்று வைபை ஆன் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

தற்போது உள்ள கனெக்சனை தேர்வு செய்து அதில் உள்ள மாடிஃபை நெட்வொர்க் எனபதை செலக்ட் செய்து பின்னர் ஷோ அட்வான்ஸ் ஆப்சன் செல்ல வேண்டும். இதில் உள்ள ஐபி செட்டிங்கை மாற்ற வேண்டும்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

இதில் உள்ள டி.என்.எஸ் 1 மற்றும் டி.என்.எஸ் 2ஐ கண்டுபிடித்து அதில் தற்போது டி.என்.எஸ் எண்களுக்கு பதிலாக 208.67.222.123, 208.67.220.123 என்ற எண்களை பயன்படுத்த வேண்டும்

பகுதி3: விண்டோஸில் டி.என்.எஸ் மூலம் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

பகுதி3: விண்டோஸில் டி.என்.எஸ் மூலம் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள நெட்வொர்க் மற்றும் ஷேரிங் செண்டர் செல்ல வேண்டும்

ஸ்டெப் 2: இடது புறத்தில் உள்ள அடாப்டர் செட்டிங் சென்று அதை டபுள் கிளிக் செய்து அதில் உள்ள ஆக்டிவ் நெட்வொர்க் கனெக்சன் செல்ல வேண்டும்

ஸ்டெப் 3: பின்னர் இண்டர்நெட் புரோட்டோகோல் வெர்ஷன் 4 சென்று அதில் உள்ள பிராப்பர்ட்டீஸ் கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 4: பின்னர் யூஸ் தி ஃபாலோயிங் சர்வர் அட்ரஸ் என்ற பகுதியை செலக்ட் செய்து அதில் புதிய டி.என்.எஸ் ஐபி சர்வர் அட்ரஸை டைப் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 5: பின்னர் ஓகே செய்து அதன் பின்னர் நெட்வொர்க் பிராப்பர்டீஸை மூடிவிடவும்

பகுதி 4: டி.என்.எஸ் கான்பிகிரேஷன் மூலம் ஐஒஎஸ் சாதனங்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

பகுதி 4: டி.என்.எஸ் கான்பிகிரேஷன் மூலம் ஐஒஎஸ் சாதனங்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: சிஸ்டர் பிரிஃபிரென்ஸ் என்ற பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்

ஸ்டெப் 2: அதில் உள்ள நெட்வொர்க் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3: பின்னர் அதில் உள்ள 'ஆக்ட்வி கனெக்சன் என்பதை க்ளிக் செய்து அதில் புதிய டி.என்.எஸ் சர்வர் அட்ரஸை பயன்படுத்தவும். மேலும் ஐபி அட்ரஸை கமா செய்து பிரிக்கவும்

ஸ்டெப் 4: பின்னர் அப்ளை கிளிக் செய்து பின்னர் நெட்வொர்க் செட்டிங்கை மூடிவிடவும்

பகுதி 5: டி.என்.எஸ் கான்பிகிரேஷன் மூலம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

பகுதி 5: டி.என்.எஸ் கான்பிகிரேஷன் மூலம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் செட்டிங்கை ஓப்பன் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: அதில் உள்ள வைபையை டர்ன் ஆன் செய்யவும்

ஸ்டெப் 3: தற்போதைய கனெக்சனை ஹோல்ட் செய்து பின்னர் அதில் உள்ள மாடிஃபை நெட்வொர்க் கான்ஃபிக்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்

ஸ்டெப் 4: ஷோ அட்வான்ஸ் ஆப்சன் என்பதை டேப் செய்யுங்கள்

ஸ்டெப் 5: பின்னர் அதில் உள்ள ஐபி செட்டிங் சென்று ஸ்டேட்டிக் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 6: அதில் புதிய டி.என்.எஸ் சர்வரான டி.என்.எஸ் 1 மற்றும் டி.என்.எஸ் 2 எண்களை டைப் செய்து பின்னர் சேவ் செய்துவிட வேண்டும்

அதன் பின்னர் வைபையை செட்டிங்கை மூடிவிடவும்.

நீங்கள் மேலே பார்த்த இந்த ஐந்து முறைகள் மூலம் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்யலாம். இதற்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Block Porn Sites on Computer, iPhone and Android Devices: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X