Home
How to

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தினமும் நமது குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தில் உள்ளவர்கள் நம்மை தொடர்பு கொள்ள செல்போன்களளத்தான் பயன்படுத்துகின்றனர். இவ்வகை போன் அழைப்பினால் நமக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை. ஆனால் டெலி மார்க்கெட்டிங் செய்பவர்களின் அழைப்புகள் நம்முடைய வேலையை கெடுப்பதோடு, நம் நேரத்தையும் வீணாக்குகிறது.

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

இந்த நிலையில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்துவிடுவது ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ள வசதிகளில் ஒன்று. இவ்வாறான அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஒவ்வொரு ஆண்ட்ராய்ட் போன் உற்பத்தியாளர்களும் விதவிதமான ஓஎஸ்களை பயன்படுத்துவதால் இந்த பிளாக் செய்யும் வசதியும் ஒவ்வொரு மாடலை பொருத்து வித்தியாசப்படும். தற்போது ஒவ்வொரு மாடலுக்கும் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

கூகுள் பிக்சல்

கூகுள் பிக்சல்

நீங்கள் கூகுள் பிக்சல் அல்லது அதையொட்டிய மாடல் போன்களை வைத்திருந்தால் அழைப்புகளை பிளாக் செய்ய இரண்டு வழிகள் உள்ளது.

1. பிளாக் செய்யப்பட வேண்டிய எண்ணை போன் காண்டாக்டில் இருந்து எடுத்து அதனை ஒரு லாங் பிரஸ் செய்யவும்

2. அதன்பின்னர் வலது ஓரத்தில் தோன்றும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தால் அதில் உள்ள செட்டிங் சென்று, கால் பிளாக்கிங் என்ற ஆப்சனை தேர்வு செய்தால் இனிமேல் அந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வராது

சாம்சங் போன் பயனாளிகளுக்கு...

சாம்சங் போன் பயனாளிகளுக்கு...

1. டயல் செயலியை ஓப்பன் செய்யவும்

2. பிளாக் செய்ய வேண்டிய எண்ணை தேர்வு செய்து அதன் பின்னர் வலது ஓரத்தில் மூன்று புள்ளிகளை தேர்வு செய்யவும்

3. அதில் உள்ள பிளாக் காண்டாக்ட் என்பதை தேர்வு செய்யவும்

சியோமி  போன் பயனாளிகளுக்கு....

சியோமி போன் பயனாளிகளுக்கு....

1. செக்யூரிட்டி செயலியை ஓப்பன் செய்யவும்

2. பிளாக்லிஸ்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்

3. செட்டிங் பட்டனை தேர்வு செய்யவும்

4. நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய எண்ணை அதில் இணைக்கவும்

5. அதன் பின் பிளாக் செய்துவிடவும்

ஓப்போ போன் பயனாளிகளுக்கு....

ஓப்போ போன் பயனாளிகளுக்கு....

1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் செல்லவும்

2. அதில் உள்ள 'கால்ஸ்' என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்

3. பின்னர் அதில் உள்ள பிளாக் லிஸ்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்

4. + என்ற ஐகானை தேர்வு செய்து பிளாக் செய்ய வேண்டிய எண்ணை இணைக்கவும்

விவோ போன் பயனாளிகளுக்கு...

விவோ போன் பயனாளிகளுக்கு...

1. செட்டிங்ஸ் செல்லவும்

2. பின்னர் மெசேஜஸ் என்ற ஆப்சன் செல்லவும்

3. பிளாக்லிஸ்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்

4. அதில் நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய எண்ணை இணைக்கவும்

ஒன்ப்ளஸ், ஹூவாய், ஹானர் போன்களின் பயனாளிகளுக்கு....

ஒன்ப்ளஸ், ஹூவாய், ஹானர் போன்களின் பயனாளிகளுக்கு....

1. காண்டாக்ட் செல்லவும்

2. பிளாக் செய்ய வேண்டிய எண்ணை தேர்வு செய்யவும்

3. மூன்று புள்ளிகள் உள்ள ஆப்சனை தேர்வு செய்யவும்

4. பிளாக் கால்ஸை தேர்வு செய்யவும்

மேலும் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to block a phone number on Xiaomi, Samsung, OnePlus and other Android smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X