Home
How to

ஆன்ட்ராய்டில் ஆட்ஸ் தொந்தரவுகளை எதிர்கொள்ள தலைசிறந்த டிப்ஸ்.!

பெட்டர் ஆட்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் ப்ரோகிராம் என திட்டத்தின் கீழ் விளம்பரங்களை பயனருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் எவ்வாறு சிறப்பாக விளம்பரங்களை வழங்க முடியும் என்பது குறித்து நிறுவனங்களுக்கு கற்பிக்கப்படுகிறது

By Meganathan S

இணையத்தில் ஆர்வமாய் எதை செய்ய முற்பட்டாலும், முழு பக்க விளம்பரங்கள், அதிக ஒலியெழுப்பும் வீடியோ விளம்பரங்கள் உள்ளிட்டவை நம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும். நாளுக்கு நாள் விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிப்பதும், வெவ்வேறு விதங்களில் இவை நம் நிம்மதியை சீர்குலைப்பதாய் இருந்தாலும் இவற்றில் இருந்து வரும் வருமானத்தை நம்பி பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ஆன்ட்ராய்டில் ஆட் பாப்-அப்களை பிளாக் செய்வது எப்படி?

எனினும் பயனர் நலன் கருதி விளம்பரங்களை கட்டுப்படுத்த கூகுள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இந்த அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் க்ரோமிற்கு என எழுதப்பட்டிருக்கும் விளம்பரங்களை தடுக்க முடியும். இதனால் க்ரோமில் வரும் அனைத்து விளம்பரங்களும் முடக்கப்படுவதோடு, அதிக இடையூறை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மட்டுமே முடக்கப்படும்.

பெட்டர் ஆட்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் ப்ரோகிராம் என திட்டத்தின் கீழ் விளம்பரங்களை பயனருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் எவ்வாறு சிறப்பாக விளம்பரங்களை வழங்க முடியும் என்பது குறித்து நிறுவனங்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் வரும் விளம்பரங்கள் இடையூறை ஏற்படுத்தும் வகையில் இருக்காது.

இதன் காரணமாகவே ஆன்ட்ராய்டு தளத்துக்கான க்ரோம் சேவையில் விளம்பரங்களை முடக்கும் வசதி பயனருக்கு வழங்க கூகுள் முடிவு செய்தது. க்ரோம் பிரவுசரில் பின்வரும் ஆப்ஷன்களை சரிவர டிசேபிள் செய்திருந்தால் விளம்பரங்கள் மற்றும் பாப்-அப்கள் தானாகவே முடக்கப்பட்டு இருக்கும்.

ஆன்ட்ராய்டில் ஆட் பாப்-அப்களை பிளாக் செய்வது எப்படி?

அ) பாப்-அப்களை முடக்குவது எப்படி?

- முகவரி டேப்-இன் வலதுபுறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து வரும் ஆப்ஷன்களில் செட்டிங்ஸ் வசதியை தேர்வு செய்ய வேண்டும்.

- இனி சைட் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து பாப்-அப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- முந்தைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும் திறக்கும் புதிய பக்கத்தில் பாப்-அப்களை அனுமதிக்கும் ஆப்ஷன் நீல நிறத்தில் காணப்படும். பாப்-அப்களை முடக்க இந்த ஆப்ஷனை ஆஃப் செய்து பட்டன் சாம்பல் நிறத்திற்கு மாறுவதை உறுதி செய்ய வேண்டும்.

- இனி சைட் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்றால் பாப்-அப்கள் முடக்கப்பட்டு விட்டது என்ற தகவலை பார்க்க முடியும்.

ஆன்ட்ராய்டில் ஆட் பாப்-அப்களை பிளாக் செய்வது எப்படி?

ஆ) விளம்பரங்களை முடக்குவது எப்படி?

- முகவரி டேப்-இல் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.


- இனி செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


- அடுத்து சைட் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


- இனி ஆட்ஸ் ஆப்ஷனுக்கு ஸ்கிரால் செய்து இதனை தேர்வு செய்ய வேண்டும்.

- பாப்-அப் ஆப்ஷன் போன்றே ஆட்ஸ் ஆப்ஷனிலும் ஆன் ஆஃப் செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டு இருக்கும்ய இதில் விளம்பரங்களை முடக்கக்கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்து பட்டன் சாம்பல் நிறத்துக்கு மாறுவதை உறுதி செய்ய வேண்டும்.

- மீண்டும் செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று சைட் செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்கும் போது விளம்பரங்கள் முடக்கப்பட்டு விட்டதற்கான தகவலை பார்க்க முடியும்.

மேலே வழங்கப்பட்டு இருக்கும் செட்டிங்-களை செயல்படுத்தினால் மட்டும் அனைத்து விளம்பரங்களும் தடுக்கப்பட்டு விடாது. சில வலைத்தளங்களில் விளம்பரங்களை இனியும் பார்க்க முடியும். வலைத்தளங்களில் உள்ள விளம்பரங்களை முடக்க வேண்டுமானால், இவை பாப்-அப் மற்றும் அதிக ஒலியை எழுப்பும் விளம்பரங்களை மட்டும் தடுக்கும்.

Best Mobiles in India

English summary
How to block intrusive ads and pop-ups on Android ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X