ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?

தேவையில்லாத அழைப்புகள் வராத போன்கள் என்ற ஒன்றை யாருமே பயன்படுத்தியிருக்கவே முடியாது என்று சொல்லலாம்.

|

தேவையில்லாத அழைப்புகள் வராத போன்கள் என்ற ஒன்றை யாருமே பயன்படுத்தியிருக்கவே முடியாது என்று சொல்லலாம்.நமக்கு தேவையா இல்லையா என்பது நமக்கே தெரியாத பொருட்களை விற்க கால் செய்யும் விற்பனை பிரதிநிதிகள் முதல் நாம் மறுபடியும் பேசவே விரும்பாத அழைப்புகள் வரை பல்வேறு சம்பவங்கள் அனைவருக்கும் நடந்திருக்கும்.

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?


எது எப்படியோ இனிமேல் அதுபோன்ற பிரச்சனையே இல்லை. பயனர்கள் தங்களுக்கு தேவையில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிதில் தடை செய்யமுடியும். ஐ ஓ.எஸ் அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பயன்படுத்தியோ அல்லது உங்கள் தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியுடனோ அல்லது நேசனல் டு நாட் கால் ரிஜிஸ்டரி மூலமோ இதை செய்யலாம். எப்படி இலவசமாகவும் எளிதாகவும் தேவையில்லா எண்களை நீங்களே தடை செய்யும் வழிமுறையை இங்கே காணலாம்.

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?

ஐ ஒ.எஸ்7 அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகளில் அழைப்புகளை ப்ளாக் செய்தல்

ஆப்பிள் போன்களில் உள்ள உள்ளார்ந்த வடிவமைப்பின் மூலம் உங்களை அழைப்புகளை தடை செய்ய அனுமதித்து, தேவையில்லா அழைப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. தடை செய்யப்பட்ட எண்களில் இருந்து அதன்பிறகு குறுஞ்செய்திகள், அழைப்புகள், ஃபேஸ்டைம் வேண்டுகோள்கள் என எவையும் வந்து தொந்தரவு செய்யாது. ஆனால் அனுப்பப்பட்டது என்பதற்கான குறியீடு மற்றும் இதர எச்சரிக்கைகள் அனுப்பியவர் போனில் எப்போதும் போல இருக்கும். இதன் மூலம் நீங்கள் அவர்களை ப்ளாக் செய்துள்ளீர்கள் என்பது தெரியாமல் இருக்கும். அதற்கான வழிமுறை இதோ.


படி#1
போன் என்ற பகுதிக்கு செல்லவும். ஐ ஓ.எஸ் 11-ல் முதலில் ஜெனரல் சென்று அதில் போன்-ஐ தேர்வு செய்யவும்.

படி#2

கால்ஸ்(Calls) என்ற பகுதிக்கு கீழே கால் ப்ளாக்கிங் (Call Blocking & Identification) என்பதை தேர்வு செய்தால் புதிய பக்கத்திற்கு கூட்டிச் செல்லும்.

படி#3
அங்கு நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் எண்களை சேர்த்துக்கொள்ளலாம்.

படி#4
மெசஜ் மற்றும் பேஸ்டைமிலும் ப்ளாக் செய்ய, அவற்றின் செட்டிங்ஸ் க்கு சென்று இதே ப்ளாக் மெனுவை பெறலாம்.

படி#5
'block contact' என்னும் நீல நிற பட்டனை செய்து , ப்ளாக் செய்யவேண்டிய எண்களை தேர்வு செய்யலாம்.

படி#6
எண்களை அன்-ப்ளாக் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள எடிட்-ஐ தேர்வு செய்து, அன்-ப்ளாக் செய்ய வேண்டிய எண்ணிற்கு அருகில் உள்ள சிவப்பு கழித்தல் குறியீடை கிளிக் செய்யவும்.

படி#7
பின்னர் சிவப்பு நிற 'unblock' பட்டனை கிளிக் செய்து மாற்றங்களை உறுதி செய்யவும்.

படி#8
மேலும் தெரியாத எண்களை ப்ளாக் செய்ய, 'recents' ஐ கிளிக் செய்து ப்ளாக் செய்யவேண்டிய எண்ணை தேர்வு செய்து, அதற்கு அருகில் உள்ள '|' ஐ கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?


ஆன்ட்ராய்டு கருவிகளில் அழைப்புகளை ப்ளாக் செய்தல்
உங்கள் ஆண்ராய்டு போன்களில் தேவையற்ற அழைப்புகளை தடை செய்வதற்கான வழிமுறை இதோ.

படி#1
போன் பகுதிக்கு சென்று மூன்று புள்ளி குறியீடை கிளிக் செய்யவும்.

படி#2
அதில் செட்டிங்ஸ் என்பதை தேர்வு செய்து, அங்கு Blocked numbersஐ கிளிக் செய்யவும்.

படி#3
பின்னர் நீங்கள் தடை செய்ய விரும்பும் எண்களை அதில் சேர்க்கவும்.

பல்வேறு கருவிகளில் உள்ள பல ஆண்ராய்டு பதிப்புகளில் இந்த வழிமுறைகள் சிறிது மாறுபடும். நேசனல் டோன்ட் கால் ரிஜிஸ்டரி(National Do Not Call Registry)
கூட்டு வர்த்தக ஆணையத்தின் டோன்ட் கால் ரெஜிஸ்டரியில் ஒரே நேரத்தில் 3 எண்களை இணைக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் உங்கள் பதிவை உறுதி செய்யும் விதமாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். இதில் எண்களை சேர்க்க DoNotCall.gov என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் எண்களை பதிவு செய்ய வேண்டும்.இந்த அமைப்பு ஒரு நாளில் அந்த எண்களை பட்டியிலில் சேர்க்கும். அதன் பிறகும் விற்பனை பிரதிநிதிகள் அழைப்புகள் வந்தால், கூட்டு வர்த்தக ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to block an unwanted number on your smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X