Subscribe to Gizbot

ஸ்போட்டிஃபை ப்ளேலிஸ்ட்டை பேக்அப் செய்யும் வழிமுறை

Posted By: Jijo Gilbert

ஒரு காப்புபிரதியை (பேக்அப்) வைத்திருப்பது என்பது சேமிப்புகளைப் பராமரிப்பது போன்றது ஆகும். அது எப்போதும் தேவைப்படும் என்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் அதற்கான தேவை வரும் போது, அதை பயன்படுத்த நம்பிக்கை இழந்த நிலையில் தேடுவீர்கள். பொதுவாக கம்ப்யூட்டர் காப்புபிரதிகள், தனி டிஸ்க்குகள் அல்லது வெளிப்புறமான ஹெச்டிடி-க்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளை சேமித்து வைக்க வேண்டிய நிலை வரும் போது, ஒரு காப்புபிரதியை எப்படி உருவாக்க முடியும்? இதற்கு பொதுவான பதிலாக கூகுள் டிரைவ் என்று தான் கூறப்படுகிறது.

ஸ்போட்டிஃபை ப்ளேலிஸ்ட்டை பேக்அப் செய்யும் வழிமுறை

டிஜிட்டல் உலாவலுக்கு கூகுள் டிரைவ் எப்போதும் ஏற்றதாக அமைவதில்லை. எனவே ஸ்போட்டிஃபே போன்ற அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்தினால் கூட, ஒரு காப்புபிரதியை உருவாக்குவது குழப்பம் மிகுந்ததாக இருக்கிறது. உங்கள் ப்ளேலிஸ்ட்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும், அதை ஸ்போட்டிஃபை வைத்து கொள்கிறது. அதன் எண்ணிக்கை பல நூறாக, ஆயிரக்கணக்கான பாடல்களாக கூட இருக்கலாம். ஆனால் அவை எந்த நேரத்திலும் இழக்க நேரிடலாம் என்பதால், காப்புபிரதியாக வைத்து கொள்ள முடியாது என்பது பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்களின் டிராக்குகளை இழக்க எந்தொரு ஸ்போட்டிஃபை பயனரும் விரும்பமாட்டார் என்பதால், உங்கள் ப்ளேலிஸ்ட்களின் இழப்பை தவிர்த்து, அதை மீட்டெடுக்க பயன்படும் சில எளிய வழிமுறைகளைக் குறித்து இங்கு காண்போம்.

உங்கள் ஸ்போட்டிஃபை கணக்கிற்கு காப்புபிரதியை செய்ய உதவும் ஸ்போட்மைபேக்அப், ஒரு மூன்றாம் தரப்பு இணைய அப்ளிகேஷன் ஆகும். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து கீழே காண்போம்.

உங்கள் பிரவுஸர் மீது இரட்டை கிளிக் செய்து அதை திறக்கவும். அதன்பிறகு முகவரி பாரில் http://www.spotmybackup.com/ என்று தட்டச்சு செய்யவும். இணைய அப்ளிகேஷனுக்கான இந்த இணைப்பு ஏற்றம் கண்ட பிறகு, ஒரு பச்சை நிற பொத்தானை காணலாம்.

இந்த பொத்தானில், 'ஸ்போட்டிஃபை உடன் உள்நுழை' என்று இருக்கும். அதன்மீது கிளிக் செய்தால், ஒரு புதிய விண்டோ திறக்கிறது. அதை பயன்படுத்தி, முதலில் ஸ்போட்டிஃபை-க்குள் உள்நுழைய வேண்டும்.

இது ஒரு அனுமதி பெறுவதற்கான விண்டோ என்பதால், உங்கள் ஸ்போட்டிஃபை கணக்கை அணுகுவதற்கு, ஸ்போட்மைபேக்அப்-க்கு அனுமதி அளிக்கும் வகையில் 'ஓகே' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்கள் கணக்கை இந்த அப்ளிகேஷன் ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த செயல்பாடு முடிவடைய கொஞ்சம் நேரம் எடுத்து கொள்ளும் என்பதால், அதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த செயல்பாடு முடிந்த பிறகு, ப்ளேலிஸ்ட்டுகள் மற்றும் டிராக்குகளின் எண்ணிக்கையை விண்டோ காட்டுகிறது. இதனுடன் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் என்ற இரு தேர்வுகள் அளிக்கப்படுகின்றன. இதில் ஏற்றுதல் தேர்வை நோக்கிய உங்கள் கர்சரை எடுத்து சென்று அதன் மீது கிளிக் செய்யவும்.

இது தெரியாம போச்சே.! பல வாட்ஸ்ஆப் சண்டைகளை தவிர்த்து இருக்கலாமே.!

இதன் தீர்வாக ஒரு ஜெஎஸ்ஓஎன் கோப்பு கிடைக்கிறது. இந்த கோப்பை, உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

வேர்டுபேட் அல்லது வேர்டு போன்ற ஒரு சாதாரண டெக்ஸ்ட் எடிட்டரை பயன்படுத்தி இந்த ஜெஎஸ்ஓஎன் கோப்பு திறக்கக் கூடிய வகையில், ஒரு தரமான கோப்பாக உள்ளது. இந்த வடிவில் உள்ள கோப்பு, உங்கள் ஸ்போட்டிஃபை கணக்கில் உள்ள டிராக்குகளின் எல்லா ஐடிகளையும் கொண்டிருக்கும்.

இது எந்த வகையிலும் உங்களுக்கு பயன்படாது என்பதால், ஸ்போட்மைபேக்அப்-க்கு திரும்ப செல்லவும். இந்த முறை, இறக்குதல் என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்படி செய்வதன் மூலம் ஜெஎஸ்ஓஎன் கோப்பை, உங்கள் கணக்கில் சேர்க்க முடியும். மேலும் உங்கள் தகவல்கள் மறுசேமிப்பு செய்யப்பட்டிருப்பதை காணலாம்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
இந்த செயல்பாட்டை செய்து ஒரு காப்புபிரதியை உருவாக்கிய பிறகு, ஸ்போட்மைபேக்அப்-க்கு அளிக்கப்பட்ட அணுகுதலை மறக்காமல் நீக்கி விடவும். இப்படி செய்வதற்கு, அப்ளிகேஷன்களுக்குள் சென்று ஸ்போட்டிஃபை-யின் இணைய போர்ட்டலை திறக்கவும். அதில் ஸ்போட்மைபேக்அப்-பை தேர்ந்தெடுத்து, அதற்கான அணுகுதலை நீக்கவும். இது எந்த வகையிலும் நிரந்தரமானது அல்ல என்பதோடு, நீங்கள் விரும்பும் போது, அதை மீண்டும் சேர்த்து கொள்ள முடியும்.

Read more about:
English summary
Spotify houses all your playlists, be it any number. The several hundred, possibly thousands of songs could be lost any time, and having no backup is a cause for horror. Since any Spotify user hates losing their tracks, here are some simple measures you can take to recover your playlists in the event of a loss.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot