ஆண்ட்ராய்டு கேம் டேட்டாவை கம்ப்யூட்டரில் பேக்கப் செய்வது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு டேட்டாவை உங்கள் கம்ப்யூட்டரில் பேக்கப் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

|

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கேம் ஒன்றை நீங்கள் அன் இன்ஸ்டால் செய்தால் அதன் டேட்டா கண்டிப்பாக அழிந்துவிடும். இந்த டேட்டாவை பின்னாளில் பயன்படுத்த, அதன் டேட்டாவை நீங்கள் பாதுகாக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு வழியை நாங்கள் காண்பிக்கின்றோம். இந்த கட்டுரையில் உங்கள் ஆண்ட்ராய்டு டேட்டாவை உங்கள் கம்ப்யூட்டரில் பேக்கப் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம். நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிய இந்த ஆறு ஸ்டெப்ஸ்கள் தான்;

ஆண்ட்ராய்டு கேம் டேட்டாவை கம்ப்யூட்டரில் பேக்கப் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: ஹீலியம் ஆப் சிங் மற்றும் பேக்கப் என்ற செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்யுங்கள்

ஸ்டெப் 2: ஹீலியம் ஆப் சிங் மற்றும் பேக்கப் செயலியில் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள டேட்டாவை லான்ச் செய்ய யூஎஸ்பியை எனேபிள் செய்யுங்கள்

ஸ்டெப் 3: இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ஹீலியம் ஆப் சிங் மற்றும் பேக்கப் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனைத்தை கண்டுபிடிக்கும். அதுவரை காத்திருங்கள்


ஸ்டெப் 4: உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை கண்டுபிடித்த பின்னர் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் அதற்கான மெசேஜ் தோன்றும்

ஸ்டெப் 5: இப்போது பேக்கப் பட்டனை டிக் செய்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் நீங்கள் பேக்கப் செய்ய வேண்டிய டேட்டாவையும் செலக்ட் செய்யுங்கள்

ஸ்டெப் 6: இப்போது பேக்கப் டேடாவை பேக்கப் செயலில் உள்ள ஃபைல் மேனேஜரில் வைத்து கொள்ளுங்கள். இந்த பேக்கப் ஃபைலை உங்கள் கம்ப்யூட்டரிலும் நீங்கள் மாற்றி கொள்ளலாம்.

இப்போது உங்கள் கேம் டேட்டா முழுவதுமாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்.

இதே பணியை மொபிகின் அசிஸ்டெண்ட் என்ற செயலி மூலமும் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை தற்போது பார்ப்போம்

1. மொபிகின் அசிஸ்டெண்ட் செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் மற்றும் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

2. யூஎஸ்பியை உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஆண்ட்ராய்டு சாதனைத்தையும் இணைத்து கொள்ளுங்கள். இதில் யூஎஸ்பியில் உள்ள டிபக்கிங் மோட் ஆன் செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. இப்போது உங்கள் ஆண்ட்ராய்டை செயலி கண்டுபிடிக்கும் வரை பொறுத்திருங்கள். கண்டுபிடித்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு சாதனத்தின் மாடல் எண் தோன்றும்.

4. இப்போது இடதுபுறம் உள்ள விண்டோவில் காணப்படும் ஆப்ஸ் என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் டவுண்லோடு செய்யப்பட்டிருக்கும் கேம்ஸ் மற்றும் செயலிகளின் விபரம் தோன்றும்

5. இப்போது நீங்கள் சேவ் செய்ய வேண்டிய கேம் அல்லது செயலியை தேர்வு செய்து அதனை எக்ஸ்போர்ட் கொடுத்து கம்ப்யூட்டரில் சேவ் செய்து கொள்ளுங்கள். ஒருசில நொடிகளில் உங்கள் டேட்டாக்கள் கம்ப்யூட்டரில் சேவ் ஆகிவிடும். இதேபோன்று ஐஸ்கைசாப்ட் டூல்பாக்ஸ் என்ற செயலியின் மூலம் இதே போன்று டேட்டாவை கம்ப்யூட்டரில் சேவ் செய்து கொள்ளலாம். அதற்கும் மேற்கூறிய வழிகளே பொருந்தும்.

எனவே உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை ரீசெட் அல்லது அன் இன்ஸ்டால் செய்யுமுன் இந்த வழிகளை பின்பற்றி உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள டேட்டாக்களை சேவ் செய்து கொள்ளுங்கள்

Best Mobiles in India

English summary
How to backup Android game data to your PC: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X