உங்கள் மொபைல் பேட்டரி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.!

தவறாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதும் தவறு இருந்தால் மட்டுமே..

|

ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவம் அடிக்கடி அரங்கேறத் தான் செய்கின்றது. சமீபத்தில் பல நிறுவனங்களின் கருவிகள் வெடித்த நிகழ்வுகள் சார்ந்த செய்திகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

இதே போல் பல்வேறு சம்பவங்களை கூற முடியும். இதனால் தான் உங்களது மொபைல் போன் பேட்டரி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விவரித்திருக்கின்றோம்..!

காரணம்

காரணம்

பேட்டரியை தவறாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதும் தவறு இருந்தால் மட்டுமே எவ்வித மின்சாதன பொருளும் வெடிக்கும். இது போன்ற பிழை ஏற்படுவது மிகவும் அரிதான காரியம் ஆகும்.

வெடித்தல்

வெடித்தல்

ஒருவேளைக் கருவி ஏதும் வெடிக்கும் பட்சத்தில் இதற்குக் காரணம் பேட்டரி மட்டும் கிடையாது. பொதுவாகப் போலி பேட்டரி அல்லது சார்ஜர் பயன்படுத்தும் போது தான் மின்சாதன கருவிகள் வெடிக்கும்.

தெர்மல் ரன் அவே

தெர்மல் ரன் அவே

பொதுவாக இன்றைய மொபைல்களில் வழங்கப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள் தெர்மல் ரன் அவே என்ற பிரச்சனையை சந்திக்கின்றன. இது பேட்டரி அதிகளவு சார்ஜ் செய்வதால் ஏற்படும்.

அமைப்பு

அமைப்பு

இந்த தெர்மல் ரன் அவே பிரச்சனையை தவிர்க்கவே அதிகளவு சார்ஜ் ஆவதை நிறுத்தும் அமைப்பு பேட்டரிகளில் பொருத்தப்படுகின்றது.

மலிவு

மலிவு

விலை பொதுவாக விலை குறைவாக கிடைக்கும் லோக்கல் பேட்டரிகளும் ஒரிஜனல் பேட்டரிகளையும் தரம் கொண்டவையாக நம்ப முடியும் என்பர். ஆனால் இது முழுமையாக உண்மை கிடையாது.

மெலிவு

மெலிவு

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் அளவில் மெலிந்து வருவதால் பேட்டரியினுள் இருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை தகடுகளை பிரிக்கச் சிறிதளவு இடம் மட்டுமே கிடைக்கும்.

ஆபத்து

ஆபத்து

இது போன்ற சூழ்நிலைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை தகடுகளுக்குள் ஏதேனும் நுழைந்தால் ஆபத்து அதிகமாகும். மேலும் வடிவமைப்பு பணிகளில் தரம் பின்பற்றப்படவில்லை என்றால் பேட்டரி அதிகளவு சார்ஜ் செய்வது ஆபத்தாகும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒரு வேலை பேட்டரி தயாரிப்பவர்கள் போதுமான வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி பேட்டரிகளை தயாரிக்கும் பட்சத்தில் பேட்டரி பாதுகாப்பானதாக இருக்கும். மாறாக ஏதேனும் பிழை ஏற்பட்டாலோ பேட்டரி வெடிக்கும் சூழல் அதிகமே.

வெடிக்கும்

வெடிக்கும்

நேர்மறை மற்றும் எதிர்மறை தகடுகளின் சுற்றுகளில் ஏதும் தடை ஏற்படும் சூழலில் பேட்டரிகள் வெடிக்கும் தன்மை பல மடங்கு அதிகமாகும்.

பேட்டரி

பேட்டரி

பேட்டரிகளை வாங்கும் முன் அவற்றின் விலையை மட்டும் பரிசீலனை செய்யாமல் போலி பேட்டரி மூலம் போன் வெடித்து அதனால் ஏற்படும் செலவையும் கணக்கிட்டால் போலி பேட்டரிகளை வாங்க மனம் வராது.

முறை

முறை

பேட்டரி பயன்பாடுகளில் சூடான வெளியில் கருவியை பொருத்தக் கூடாது, கருவியை நீண்ட நேரம் சார்ஜ் செய்ய கூடாது, முழுமையான சார்ஜ் ஆனதும் கருவியை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும் போன்றவற்றையும் தவறாமல் பின்பற்றுவது நல்லது. இதோடு பேட்டரி அளவு 50 சதவீதம் வந்ததும் அதனை சார்ஜ் செய்வது நல்லது. பேட்டரி முழுமையாகத் தீரும் வரை காத்திருந்து ஆதனினை 100 சதவீதம் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பீதியை கிளப்பும் புதிய பாஸ்வேர்ட் திருட்டு வழிகள், அனைவரும் உஷார்.!

Best Mobiles in India

Read more about:
English summary
How to stop the issues like smartphone battery exploding. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X