ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

18வயது நிரம்பிய யாரும், இணையவழியில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

|

நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது. வாக்காளர் அட்டையுடன், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டையை பெற அதிக நாட்கள் தேவைபட்டாலும்,அதை இணையவழியில் விண்ணப்பிப்பதன் மூலம் எளிதில் பெறலாம்.

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்தல் நடைபெறும் ஆண்டின் ஜனவரி1 ஆம் தேதி 18 வயதாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க அதிகபட்ச வயது ஒன்றும் கிடையாது.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இரண்டு விதமான ஆவணங்களை, ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1) வயது சான்றிதழ்
இதற்கு கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்கலாம்.

- மாநகராட்சி/மாவட்ட அலுவலகம்/ பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் அளித்த பிறப்பு சான்றிதழ் அல்லது ஞானஸ்தான சான்றிதழ்

- கடைசியாக பயின்ற அரசு/அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தின் பிறப்பு சான்றிதழ்

- 10 ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள், மதிப்பெண் சான்றிதழில் பிறந்ததேதி குறிப்பிட்டிருந்தால் அதை சமர்பிக்கலாம்

- பிறந்ததேதி குறிப்பிட்டுள்ள 8 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

- பிறந்ததேதி குறிப்பிட்டுள்ள 5 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

- இந்திய கடவுசீட்டு (பாஸ்போர்ட்)

- ஃபான் அட்டை

- ஓட்டுநர் உரிமம்

- ஆதார் ஆணையத்தால் வழங்கப்பட்ட கடிதம்

2) இருப்பிட சான்றிதழ்

2) இருப்பிட சான்றிதழ்

உங்களின் இருப்பிடத்தை அறியும் ஆவணமாக கீழ்கண்டவற்றை சமர்பிக்கலாம்.

- வங்கி கணக்கு புத்தகம்/ விவசாயி அடையாள அட்டை/ தபால் நிலைய கணக்கு புத்தகம்

-ரேசன் கார்டு

-இந்திய பாஸ்போர்ட்

- ஓட்டுநர் உரிமம்

- வருமானவரி தாக்கல் செய்த ஆவணம்

- சமீபத்திய வாடகை ஒப்பந்தம்


- விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர் போன்ற நேரிடையான உறவுகளின் பெயரில் உள்ள தண்ணீர்/ தொலைபேசி/ மின்சார/எரிவாயு கட்டண ரசீது

- இந்திய தபால் துறை மூலம், உங்கள் பெயர் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்த கடிதம்/தந்தி

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
 3) பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை

3) பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை

அனைத்து ஆவணங்களையும் சேகரித்த பின்னர், கீழ்கண்ட படிநிலைகளை பின்பற்றி இணையதளத்தில் விண்ணப்பக்கலாம்.


1) www.nvsp.in என்ற இணையதள முகவரிக்கு சென்று "Apply online for registration of new voter/ due to shifting from AC" என்னும் லிங்க்கை கிளிக் செய்யலாம் அல்லது நேரிடையாக http://www.nvsp.in/Forms/Forms/form6 என்ற இணைய முகவரிக்கும் செல்லலாம்.


2) அங்குள்ள மெனுவில் மொழியை தேர்வு செய்து, பெயர்,வயது, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவலையும் உள்ளிட வேண்டும். மேலும், மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


3) உள்ளீடு செய்த தகவல்களை மீண்டும் சரிபார்த்த பின்பு, சமர்பிப்பு (Submit) பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

உடனே ஈமெயிலில் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம். விண்ணப்பத்தை சரிபார்த்து, வாக்காளர் அட்டை விநியோகிக்க 30நாட்கள் வரை ஆகும்.


இணையவழியில் விண்ணப்பிக்கும் போது எழும் சந்தேகங்கள் கேள்வி பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யார் வேண்டுமானாலும் இணையவழியில் விண்ணப்பிக்கலாமா?

யார் வேண்டுமானாலும் இணையவழியில் விண்ணப்பிக்கலாமா?

18வயது நிரம்பிய யாரும், இணையவழியில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டவர்கள், கைதிகள், தேர்தலில் முறைகேடு செய்து வாக்களிக்கும் தகுதியை இழந்தவர்கள் போன்ற குறிப்பிட்ட சிலர், விண்ணப்பிக்க கூடாது.

வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது என்ன?

வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது என்ன?

இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்தல் நடைபெறும் ஆண்டின் ஜனவரி1 ஆம் தேதி 18 வயதாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க அதிகபட்ச வயது ஒன்றும் கிடையாது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டின் குடியுரிமை பெற்றவர்கள், http://www.nvsp.in/Forms/Forms/form6A இணைய முகவரியில் உள்ள 6A படிவத்தை நிரப்பி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Apply for Voter ID Card Online; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X