இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி?

ஒவ்வொரு நாளும் சுமார் 400 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கும் இன்ஸ்டா அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

|

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிக்களை பகிர்ந்து கொள்ள தலைசிறந்த தளமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 400 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கும் இன்ஸ்டா அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி?

கடந்த சில வாரங்களில் ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எமோஜி ஸ்லைடர், ஸ்டோரிக்களில் இசையை சேர்ப்பது மற்றும் கருத்து கணிப்பு உள்ளிட்டவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

 புதிய அம்சங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,

புதிய அம்சங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,

இன்ஸ்டா எமோஜி ஸ்லைடர்

- இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து கேமரா ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

- புதிய புகைப்படம் எடுக்கவும், இல்லையெனில் கேலரியில் இருக்கும் புகைப்படத்தையும் தேர்வு செய்யலாம்.

- எமோஜி ஐகானை க்ளிக் செய்தோ அல்லது மேல்பக்கமாக ஸ்வைப் செய்தோ எமோஜி பேனலை திறக்கலாம்.

- எமோஜி ஸ்லைடர் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க முடியும்.


- இனி உங்களின் கேள்வியை டைப் செய்து, அதற்கு தகுந்த எமோஜியை தேர்வு செய்து போஸ்ட் செய்யலாம்.

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

- இங்கும் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியை திறக்க வேண்டும்.

- கேமரா ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

- புதிய புகைப்படம் அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

- எமோஜி ஸ்லைடர் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க முடியும்.

- இனி போல்ஸ் (Polls) ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களது ஸ்டோரியில் சேர்க்கவும்.


- கருத்து கணிப்புக்கான கேள்வியை டைப் செய்து, அதற்கான பதில்களை வழங்க வேண்டும்.

இன்ஸ்டா ஸ்டோரி பின்னணி இசை

இன்ஸ்டா ஸ்டோரி பின்னணி இசை

- இன்ஸ்டாகிராம் செயலியின் கேமரா ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

- புதிய புகைப்படம் அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

- எமோஜி ஸ்லைடர் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க முடியும்.

 ஃபாஸ்ட்-ஃபார்வேர்டு

ஃபாஸ்ட்-ஃபார்வேர்டு

- மியூசிக் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் ஸ்டோரியில் சேர்க்க வேண்டும், இங்கு உங்களுக்கு விருப்பமான பாடலை லைப்ரரியில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

- பாடலை தேர்வு செய்ததும், அதனை ஃபாஸ்ட்-ஃபார்வேர்டு அல்லது மொத்த பாடலையும் ரீவைன்ட் செய்து உங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to add soundtrack, use emoji slider or conduct polls on Instagram Stories: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X