ஐபோனில் ஐ.ஓ.எஸ். 12 கொண்டு இரண்டாவது ஃபேஸ் ஐ.டி.யை சேர்ப்பது எப்படி?

அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போனில் ஒரே ஒரு ஃபேஸ் ஐ.டி.யை மட்டும் கொண்டு அன்லாக் செய்யும் வசதி வழங்கப்பட்ட நிலையில், ஐ.ஓ.எஸ். 12 மூலம் இரண்டாவது ஃபேஸ் ஐ.டி.யை சேர்க்கும் வசதியை ஆப்பிள் வழங்கியுள்ளது

|

ஐபோன் X மாடலில் அறிமுகமான ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் உலகம் முழுக்க பல்வேறு பிரான்டுகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு அதிக பிரபலமாகி வருகிறது. ஐபோன் X மாடலில் இருந்து உருவாக்கப்பட்டாலும், ஆப்பிள் அம்சத்தை வழங்கினாலும், ஆப்பிள் போன்ற ட்ரூ டெப்த் கேமரா தொழில்நுட்பத்தை மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களால் அதிக துல்லியமாக வழங்க முடியவில்லை.

ஐபோனில் ஐ.ஓ.எஸ். 12 கொண்டு இரண்டாவது ஃபேஸ் ஐ.டி.யை சேர்ப்பது எப்படி?

அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போனில் ஒரே ஒரு ஃபேஸ் ஐ.டி.யை மட்டும் கொண்டு அன்லாக் செய்யும் வசதி வழங்கப்பட்ட நிலையில், ஐ.ஓ.எஸ். 12 மூலம் இரண்டாவது ஃபேஸ் ஐ.டி.யை சேர்க்கும் வசதியை ஆப்பிள் வழங்கியுள்ளது.

ஐ.ஓ.எஸ். 12 அறிமுக நிகழ்வு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், புதிய இயங்குதளத்தின் மாற்றங்கள் பற்றி ஆப்பிள் எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கைரேகை சென்சாருக்கு இணையான வசதியை பெற முடியும்.

ஃபேஸ் ஐ.டி. வசதியில் இரண்டாவது நபரை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். எனினும், இதை முயற்சிக்கும் முன் நீங்கள் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தை அப்டேட் செய்துள்ளீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது.


ஐ.ஓ.எஸ். 12: ஐபோனின் ஃபேஸ் ஐ.டி.யில் இரண்டாவது நபரை சேர்ப்பது எப்படி?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, ஐபோனின் செட்டிங் ஆப் செல்வது தான். பின் கீழ்புறமாக ஸ்வைப் செய்து "Face ID and Passcode" எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு "Set Up and Alternate Appearance" ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இனி நீங்கள் விரும்பும் இரண்டாவது நபரை கொண்டு ஃபேஸ் ஐ.டி.யை தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்வு செய்யும் நபரின் முகம் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்படும், வெற்றிகரமாக சேர்க்கப்பட்டதும், பச்சை நிறத்தில் நீங்கள் செட் செய்த ஃபேஸ் ஐ.டி. அடையாளப்படுத்தப்படும்.

ஐபோனில் ஐ.ஓ.எஸ். 12 கொண்டு இரண்டாவது ஃபேஸ் ஐ.டி.யை சேர்ப்பது எப்படி?

ஒருவேளை வேறு நபரை இரண்டாவது ஃபேஸ் ஐ.டி.யாக சேர்க்க நினைத்தால், இரண்டாவது நபரை எடுத்துவிட்டு, பின் ஃபேஸ் ஐ.டி.யை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இரண்டு ஃபேஸ் ஐ.டி.க்களும் அழிக்கப்பட்டு விடும். மீண்டும் நீங்கள் ஃபேஸ் ஐ.டி.யை புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

இத்துடன், ஃபேஸ் ஐ.டி.யை ரீசெட் செய்யும் போது உங்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இருக்காது, இவ்வாறு நீங்கள் செய்யும் ஒற்றை கிளிக் உங்களது ஃபேஸ் ஐ.டி. விவரங்களை மொத்தமாக அழித்து விடும்.

Best Mobiles in India

English summary
How to add secondary Face ID to your iPhone with iOS 12: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X