உங்களுக்கு விருப்பமான ரிங்டோன் மற்றும் சவுண்டை ஆண்ட்ராய்டில் வைப்பது எப்படி?

உங்களுக்கு விருப்பமான ரிங்டோனை வைப்பதன் மூலம், எவ்வளவு கூட்டத்திலும் உங்களின் ரிங்டோனை தனித்துவமாக அடையாளங்காண முடியும்.

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள சிறம்பம்சம் என்னவென்றால், பயனர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றவாறு அதை மாற்றிக்கொள்ளலாம் என்பதே. இயங்குதளத்தின் லாஞ்சர் பிடிக்கவில்லை என்றால், புதிய ஒன்றை தேர்வுசெய்யலாம்.அதே போல், ஏற்கெனவே உள்ள ரிங்டோன் அல்லது சப்தங்கள் பிடிக்கவில்லை என்றால், அதை உங்களுக்கு பிடித்தவாறு வைத்துக்கொள்ளலாம்.

விருப்பமான ரிங்டோன் மற்றும் சவுண்டை ஆண்ட்ராய்டில் வைப்பது எப்படி?

உங்களுக்கு விருப்பமான ரிங்டோனை வைப்பதன் மூலம், எவ்வளவு கூட்டத்திலும் உங்களின் ரிங்டோனை தனித்துவமாக அடையாளங்காண முடியும். அதை எப்படி செய்வது என தயங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பமான ரிங்டோனை ஆண்ராய்டு கருவியில் சேர்ப்பது எப்படி என இந்த பதிவில் காணலாம்.


விருப்பமான ரிங்டோனை ஆண்ராய்டில் தேர்வு எப்படி?

இயல்பாகவே உங்கள் ஆண்ராய்டு போனில் பல ரிங்டோன்கள் இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் உங்களின் விருப்பத்திறக்கு ஏற்ப அதை தேர்வு செய்ய முடியும். முதலில் இதற்காக 'பைல் மேனேஜர்' செயலி வேண்டும். அனைத்து ஆண்ராய்டு போனிலும் ஒரு பைல் மேனேஜர் செயலி இருக்கும். இல்லையென்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அடுத்ததாக உங்களுக்கு விருப்பமான ரிங்டோனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு, பின்வரும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

படி#1
உங்களுக்கு தேவையான ரிங்டோனை தேடிப்பிடித்து, அதை சிறிது அழுத்தி பிடியுங்கள். இது போல ஒரே நேரத்தில் பல ரிங்டோன்களை தேர்வு செய்யலாம்.

படி#2
அழுத்தி பிடித்தவுடன், வரும் பட்டியலில் 'Copy' யை தேர்வு செய்யவும். இதன் மூலம் ரிங்டோனை காஃபி செய்ய முடியும்.

படி#3
பின்னர் இன்டர்னல் மெமரி சென்று ரிங்டோன்ஸ் போல்டரை திறக்கவும். அங்கு ' Paste' ஐ கிளிக் செய்யவும். இந்த ரிங்டோனை நோட்டிவிகேசன் அல்லது அலாரமாக வைக்க விரும்பினால், 'நோட்டிவிகேசன் போல்டர்' அல்லது 'அலாரம் போல்டரில்' பேஸ்ட் செய்யவும்.

பின்னர் செட்டிங் பகுதியில் ரிங்டோனை செட் செய்யமுடியும். சில ஆண்ராய்டு போன்களில் புதிதாக சேர்க்கப்பட்ட ரிங்டோன்கள் உடனடியாக செட்டிங் பகுதியில் காண்பிக்கப்படும். இல்லையெனில் போனை ரீபூட் செய்த பின் பார்க்கவும்.

விருப்பமான ரிங்டோன் மற்றும் சவுண்டை ஆண்ட்ராய்டில் வைப்பது எப்படி?

விருப்பமான ரிங்டோனை ஆண்ராய்டில் சேர்ப்பது எப்படி?

ரிங்டோனை உரிய இடத்தில் வைத்தபின், பின்வரும் வழிமுறை மூலம் அதை ரிங்டோன் அல்லது நோட்டிபிகேசனாக செட் செய்ய முடியும்.

படி#1
முதலில் 'செட்டிங்ஸ்' பகுதிக்கு செல்லவும்.

படி#2

அதில் 'Sound' ஐ செய்யுங்கள். இது 'sound and display'அல்லது 'Personalization' பகுதியில் இருக்கலாம்.

படி#3
அங்கு 'Phone Ringtone' ல் 'Custom Ringtone' ஐ தேர்வு செய்யவும்.

படி#4
பின்னர் ' Save' ஐ தேர்வு செய்யவும்.

இதன்மூலம் நீங்கள் வெற்றிகரமாக உங்களுக்கு விருப்பமான ரிங்டோனை போனில் வைத்துவிட்டீர்கள்.

விருப்பமான ரிங்டோன் மற்றும் சவுண்டை ஆண்ட்ராய்டில் வைப்பது எப்படி?

தனிநபர் கான்டேக்டுக்கு தனியாக ரிங்டோனை ஆண்ராய்டில் வைப்பது எப்படி?
உங்களுக்கு பிடித்தமானவர்களுக்காக தனியே ரிங்டோனை வைக்க விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
படி#1

Contact' ஐ திறக்கவும்.

படி#2
யாருக்கு தனி ரிங்டோன் வைக்க விரும்புகிறீர்களோ, அவரின் ' Contact Name'ஐ தேர்வு செய்யவும்.

படி#3
திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

படி#4
அதில் ' set ringtone' ஐ கிளிக் செய்து தேவையான ரிங்டோனை தேர்வு செய்து 'Save'ஐ கிளிக் செய்யவும்.

இதன் மூலம் எளிதாக உங்களுக்கு பிடித்தமானவர்களுக்காக தனியே ரிங்டோனை வைக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to add custom ringtones and sounds on Android ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X