ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா?

இந்த நிலையில் ஃபேஸ்புக் சமீபத்தில் ஸ்லீப் மோட் என்ற புதிய வசதியை இந்த மெசஞ்சர் கிட் செயலியில் அறிமுகம் செய்துள்ளது.

|

கடந்த சில வருடங்களாக ஃபேஸ்புக் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யபட்ட ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட். இந்த செயலி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு என பிரத்யேகமாக வல்லுனர்களால் அமைக்கப்பட்டது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா


இந்த செயலி குறிப்பாக 13 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டது. குழந்தைகள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பாதுகாப்பான முறையில் சேட் செய்து உரையாட இந்த ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் உதவுகிறது.

மேலும் இந்த செயலியை பயன்படுத்தும் குழந்தைகளின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் அவர்களுடைய பெற்றோர்களின் அக்கவுண்டுடன் கண்ட்ரோலில் இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த செயலி இப்போதைக்கு அமெரிக்கா பயனாளிகளுக்கு மட்டும் உள்ளது. மேலும் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்யும்.


இந்த நிலையில் ஃபேஸ்புக் சமீபத்தில் ஸ்லீப் மோட் என்ற புதிய வசதியை இந்த மெசஞ்சர் கிட் செயலியில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி குழந்தைகளின் பெற்றோர்கள் செட் செய்த ஒரு குறிப்பிட்ட நேரங்களில் குழந்தைகள் மெசஞ்சரை பயன்படுத்த முடியாது. இந்த வசதியால் குழந்தைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது மட்டுமின்றி சேட் செய்வதில் அடிமையாகாத வகையில் பாதுகாக்கப்படுகின்றனர். இந்த ஸ்லீப் மோட் எனேபிள் செய்யப்பட்டவுடன் ஃபேஸ்புக் மெசஞ்சரில் இருந்து எந்த ஒரு மெசேஜ், நோட்டிபிகேசன் என எதுவும் வராது. ஸ்லீப் மோட் முடிந்தபின்னர் அவை அனைத்தும் அனுமதிக்கப்படும்.

ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா



இந்த ஸ்லீப் மோட் வசதியை எப்படி செட்டப் செய்வது என்று பார்ப்போம்
மிக எளிதில் இந்த ஸ்லீப் மோட் செட்டிங்கை செய்து கொள்ளலாம். இந்த வசதியால் உங்கள் குழந்தை ஃபேஸ்புக் செயலியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயங்க வைக்கும் வகையில் கட்டுப்படுத்தலாம். இந்த ஃபேஸ்புக் ஸ்லீப் மோட் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை கீழே உள்ள ஸ்டெப்களை வைத்து புரிந்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 1: முதலில் ஃபேஸ்புக் செயலியை ஓப்பன் செய்து பின்னர் அதில் உள்ள மெசஞ்சர் கிட் கண்ட்ரோல் செல்லுங்கள்

ஸ்டெப் 2: அதன் பின்னர் ஆப் கண்ட்ரோல் செக்சன் சென்று, அதில் உள்ள ஸ்லீப் மோட் ஐ தேர்வு செய்யுங்கள்

ஸ்டெப் 3: அதன் பின்னர் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மெசஞ்சர் செயல்படாத வகையில் நேரத்தை செட் செய்யுங்கள்.வார இறுதி நாட்களில் அல்லது வார நாட்களில் மட்டும் கூட இந்த ஸ்லீப் மோட் ஐ பயன்படுத்தி கொள்ளலாம். நேரத்தை செட்டிங் செய்த பின்னர் மீண்டும் அந்த நேரத்தை மாற்றவோ அல்லது கேன்சல் செய்யவோ முடியாது.

ஸ்லீப் மோட் வசதி மட்டுமின்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் கிட்ஸ் மெசஞ்சரில் காண்டாக்ட்களை நீக்கவோ அல்லது இணைக்கவோ முடியும். மேலும் உங்கள் குழந்தைகளுக்காக புதிய அக்கவுண்ட்டுக்களை ஓப்பன் செய்யவோ அல்லது இருக்கும் அக்கவுண்ட்டுக்களை டெலிட் செய்யவோ முடியும். இந்த செயலி மூலம் தங்கள் குழந்தைகள் ஒரு அளவுடன் இந்த மெசஞ்சரை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் இதற்கு அடிமையாகிவிடாத வகையில் குழந்தைகளுக்கு புரியும்படி விளக்கலாம் என்றும் ஃபேஸ்புக் இந்த வசதியை அறிமுகம் செய்யும்போது கூறியுள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா


எனவே உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஸ்லீப் மோட் ஆன் செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கு நேரம் எது என்பது உங்களுக்கு தெரியும் என்பதால் அந்த நேரத்தில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் இந்த வசதி பெற்றோர்களுக்கு உதவி செய்யும். இதுகுறித்து நீங்கள் உங்கள் குழந்தையுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். குழந்தைகளுக்குக் எடுத்து சொல்லும் வகையில் சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்வதோடு, அவர்களின் பாதுகாப்பையும் இந்த வசதி உறுதி செய்கிறது.

Best Mobiles in India

English summary
How to activate ‘Sleep Mode’ on Facebook Messenger Kid ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X