உங்களது ரிலையன்ஸ் ஜியோ நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் செய்வது எப்படி?

டிஎன்டி சேவை ஆக்டிவேட்: டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வதன் மூலம் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களில் இருந்து தப்பிப்பதோடு மட்டுமின்றி அவற்றை பிளாக் செய்யவும் முடியும். ஜியோவில் டி.என்.டி.

|

இந்தியாவில் புதிதாக சிம் கார்டு வாங்குவோர் முதலில் செய்ய வேண்டியது டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது தான். இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் விளம்பர நிறுவனங்கள் தொடர் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களின் மூலம் தொல்லை கொடுக்க ஆரம்பித்திடுவர்.

உங்களது ரிலையன்ஸ் ஜியோ நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் செய்வது எப்படி?

இவற்றில் இருந்து தப்பிக்க டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது அவசியமாகும். ஜியோவில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது மிகவும் எளிய காரியம் தான். மற்ற டெலிகாம் நிறுவனங்களில் செய்வதை போன்றே ஜியோவிலும் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்திடலாம்.

 டிஎன்டி சேவை ஆக்டிவேட்:

டிஎன்டி சேவை ஆக்டிவேட்:

டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வதன் மூலம் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களில் இருந்து தப்பிப்பதோடு மட்டுமின்றி அவற்றை பிளாக் செய்யவும் முடியும். ஜியோவில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

 ஆக்டிவேட் செய்வது எப்படி?:

ஆக்டிவேட் செய்வது எப்படி?:

மைஜியோ செயலியை கொண்டு டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்யலாம். இதற்கான வழிமுறைகள்.

1 - ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் மைஜியோ செயலியை இன்ஸ்டால் செய்யாத பட்சத்தில் அதனை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும்.


2 - இனி செயலியின் இடதுபுறம் இருக்கும் ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இனி Full DND ஆப்ஷனில் On

இனி Full DND ஆப்ஷனில் On

4 - சர்வீஸ் செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

5 - இனி டு நாட் டிஸ்டர்ப் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

6 - இனி Full DND ஆப்ஷனில் On பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


இவ்வாறு செய்ததும் உங்களின் ஜியோ நம்பரில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் ஆகிவிடும்.

 எஸ்.எம்.எஸ்  அல்லது கால் மூலம்  ஆக்டிவேட்  எப்படி?

எஸ்.எம்.எஸ் அல்லது கால் மூலம் ஆக்டிவேட் எப்படி?

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிற்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்யலாம். இதற்கு பின்வரும் வழிமுறைகளை கீழே காணலாம்.

 START 0 என டைப் பண்ண வேண்டும்:

START 0 என டைப் பண்ண வேண்டும்:

1 - மொபைல் போனில் START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் ஆகிவிடும்.

டி.என்.டி. சேவையை ஆக்டிவேட்:

டி.என்.டி. சேவையை ஆக்டிவேட்:

2 - இதேபோன்று 1909 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்தும் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்யலாம்.

2 நீண்ட நாள் பிளானை அறிவித்தது:

2 நீண்ட நாள் பிளானை அறிவித்தது:

நீண்ட நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. தற்போது வரை அதிக வாடிக்கையாளர்களை பெற்று தெறிக்கவிடும் நிறுவனமாக ஜியோ இருக்கின்றது.மேலும், ஜியோ நிறுவனம் வழங்கி வரும் சலுகையால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது மற்ற நிறுவனங்களுக்கு இது ஆப்பு வைக்கும் ஆப்பராக மாறியது.

இந்நிலையில் மேலும், இரண்டு நீண்ட நாள் வேலிட்டில் வழங்கும் அறிவிப்பை ஜியோ நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம் குறைந்த காலத்தில் இந்திய சந்தையில் நுழைந்தது. மேலும் பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்தியாவின் பொது மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நிறுவனமாகவும் இது இருக்கின்றது.

இலவச திட்டங்கள்:

இலவச திட்டங்கள்:

ஜியோ நிறுவனம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், இலவச ரோமிங், ரிங்டோன், மிஸ்டு கால் அலர்ட், காலர் டியூன் உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றது. இதனால் இந்தியாவில் அதிகளவில் வாடிக்கையாளர்களை பெற்றது.

வோல்டு இ ரோமிங் சேவை:

வோல்டு இ ரோமிங் சேவை:

இந்தியாவில் முதல் முறையாக வோல் இ ரோமிங் என்படும் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்கியது. மேலும், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்தின் போது, கால் டிராப் பிரச்னை ஏற்படாத ஓரே நிறுவனம் என்று டிராய் நிறுவனமும் அறிவித்தது. ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியால் மற்ற நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போயின.

ரூ.49ல் சலுகை:

ரூ.49ல் சலுகை:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.

இரண்டு புதிய சலுகை:

இரண்டு புதிய சலுகை:

ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.594 சலுகை:

ரூ.594 சலுகை:

ரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆகும்.

ரூ.297 சலுகை:

ரூ.297 சலுகை:

ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

தெறிக்கவிட்டுள்ளது:

தெறிக்கவிட்டுள்ளது:

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியானது. அதில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Best Mobiles in India

English summary
How to Activate DND on Jio Activating Do Not Disturb on Your Reliance Jio Number : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X