வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்வது எப்படி.??

Written By:

நாம் எந்நேரமும் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் கழிவறைகளில் இருப்பதை விட 18 மடங்கு அதிகளவு கிருமிகள் நமது ஸ்மார்ட்போன்களில் தான் இருக்கின்றது எனத் தெரியவந்திருக்கின்றது. அந்த வகையில் போனினை உங்களது உடையில் மட்டும் துடைத்துக் கொண்டால் போதாது.

போனினை சுத்தம் செய்ய சில வழிமுறைகளை நிச்சயம் பின்பற்றியே ஆக வேண்டும். உடனே இதற்கு அதிக செலவாகும், எங்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்காதீர்கள். வீட்டில் இருந்த படியே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் அழுக்குகளை நீக்க முடியும்.

நீங்களாக ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது சற்றே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கருவியின் கவர், பேக் பேனல் மற்றும் பேட்டரி போன்றவற்றை கழற்றி அனைத்து போர்ட்களிலும் மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும். அப்படியாக வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி ஸ்மார்ட்போனினை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோஃபைபர் அல்லது கட்டற்ற பஞ்சு துணி

மைக்ரோஃபைபர் அல்லது கட்டற்ற பஞ்சு துணி

பொதுவாக மூக்குக் கண்ணாடிகளை வாங்கும் போது வழங்கப்படும் மைக்ரோஃபைபர் அல்லது கட்டற்ற பஞ்சு துணியை கொண்டு ஸ்மார்ட்போன்களை மென்மையாகத் துடைக்கலாம். இவை கருவியில் இருக்கும் கைரேகை மற்றும் தூசிகளை நீக்க உதவும். துணியில் சிறிதளவு 'நீர்த் துளி' விட்டுத் துடைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பஞ்சு உருண்டை

பஞ்சு உருண்டை

காது குடையும் சிறிய சிறிய பஞ்சு உருண்டைகளை (காட்டன் பட்ஸ்) கொண்டும் போனில் இருக்கும் தூசிகளை அகற்ற முடியும். கருவியின் இடுக்குகளில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை நீக்க இவை பேருதவியாக இருக்கும்.

மதுபானம்

மதுபானம்

சிலர் ஸ்மார்ட்போன்களில் மதுபானம், அமோனியா போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் சிலர் பயன்படுத்தலாம் என்றும் கூறுவர். ஆனால் உங்களது சொந்த விருப்பத்தில் சிறிதளவு மதுபானத்தை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது 30 முதல் 40 சதவீதம் மதுவுடன் 70 முதல் 60 சதவீதம் தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டும். இவை கருவியில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

மதுபானத்தை பயன்படுத்த தயக்கமாக இருந்தால் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். சம பங்கு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை நன்கு கலந்து மென்மையான பஞ்சு துணியின் மூலம் கருவியில் இருக்கும் கிருமிகளை அழித்து கருவியை சுத்தம் செய்யலாம்.

சுத்திகரிப்பான்

சுத்திகரிப்பான்

சந்தையில் கிடைக்கும் சுத்திகரிப்பான்களை கொண்டும் கருவிகளின் அழுக்குகளை நீக்க முடியும். சுத்தமான பஞ்சு துணியில் சிறிதளவு சுத்திகரிப்பான் எடுத்து கருவியை மென்மையாகத் துடைத்தால் கருவியில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு கருவி சுத்தமாகிடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Household Items That Help You Clean Your Smartphone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot