போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! அதிர்ச்சியூட்டும் ஆய்வுமுடிவுகள்..
மொபைல் தொழில்நுட்பம் நமது வாழ்க்கைமுறையையே முற்றிலுமாக மாற்றியுள்ளது. நாம் படிப்பது, பணியாற்றுவது, தொடர்புகொள்வது, ஷாப்பிங் செய்வது, அன்பை பரிமாறிக்கொள்வது என அனைத்தையும் வித்தியாசமானதாக்கியுள்ளது.

சிறிய இயந்திரங்கள்
ஆனால் நாம் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நமக்கு முன்னால் உள்ள இந்த சிறிய இயந்திரங்கள் நம் எலும்புக்கூடுகளை மாற்றியமைக்கும் விதம். அதாவது இவை நாம் வெளிப்படுத்தும் நடத்தைகளை மட்டுமல்லாமல், நாம் வாழும் உடலின் அமைப்பையும் மாற்றக்கூடும்.

மண்டை ஓட்டின் பின்புறம்
ஃபயோமெக்கானிக்ஸ் பிரிவில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில், இளம் வயதினருக்கு மண்டை ஓட்டின் பின்புறம் கொம்பு போன்ற அமைப்புகள் வளர்க்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. தலையின் முன்னோக்கி குனிவதால் எலும்பு சிதைவு ஏற்பட்டு , அதிக எடையானது தசையிலிருந்து முதுகெலும்பிற்கு மாறுகிறது. இதனால் தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் இணைப்பின் மீது எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தோல் தடிமனாக மாறுவதை ஒப்பிடலாம்
புதிய எலும்பை ஏற்படுத்தும் எடை பரிமாற்றமானது, அழுத்தம் அல்லது சிராய்ப்பின் பிரதிபலிப்பாக தோல் தடிமனாக மாறுவதை ஒப்பிடலாம்.இதன் விளைவாக, முதுகுக்கு மேலே, மண்டை ஓட்டிலிருந்து கொக்கி அல்லது கொம்பு போன்ற ஒரு அம்சம் வெளியே வருகிறது.

இரு ஆராய்ச்சியாளர்கள்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகையில், இளைய தலைமுறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் உடலின் அமைப்பை முன்னோக்கி குனிவதன் மூலம் எலும்பு வளர்ச்சி நோய்க்கு வழிவகுக்கிறது என்கின்றனர். அவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கையடக்க சாதனங்கள் மனித உடல் வடிவத்தை மாற்றுவகையில், அவற்றின் மினியேச்சர் திரைகளில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க மனிதர்கள் தங்கள் தலையை முன்னோக்கி வளைக்கின்றனர்.

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஊடுருவலுக்கு பிறகு..
மனிதர்களின் தினசரி வாழ்க்கையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஊடுருவலுக்கு பிறகு, உடலியல் அல்லது எலும்பியலில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றிய கண்டுபிடிப்பை தங்களது முதல் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரு முக்கியமான கேள்வி
சுகாதார வல்லுனர்கள் "டெக்ஸ்ட் நெக்" பற்றி எச்சரிக்கிறார்கள் மற்றும் "டெக்ஸ்டிங் தம்ப்"க்கு டாக்டர்கள் சிகிச்சையளிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இவை
தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலை இல்லை எனினும், கர்பல் டனல் நோய்க்கான ஒத்ததாக இருக்கும். ஆனால் முன்னதாக நடைபெற்ற ஆராய்ச்சிகள், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை உடலில் எலும்புகளின் ஆழமான மாற்றங்களுடன் ஒப்பிடவில்லை.
"இந்த ஆய்வின் ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், இளம் வயதுடையோர் தங்களது வாழ்வின் தொடக்கத்திலேயே சீரழிவு செயல்முறை வளர்ச்சியை எதிர்கொளவது வெளிப்படையாக இருக்கும் போது எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் " என்கின்றனர் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதிய ஆய்வாளர்கள்.

நவீன வாழ்க்கை
இந்த ஆய்வுக்கட்டுரையானது கடந்த ஆண்டே வெளியான நிலையில், "எப்படி நவீன வாழ்க்கை மனித உடலமைப்பை மாற்றுகிறது" என்ற தலைப்பில் பிபிசி நிறுவனம் இதை ஒளிபரப்பியதன் விளைவாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications