இப்போது ஆண்ட்ராய்ட் போனில் எதையும் எளிதாக ஒளித்து வைக்கலாம். எப்படி தெரியுமா?
ஆண்ட்ராய்டு போனில் புகைப்படங்களை ஒளித்து வைக்க இதோ ஒரு ஐடியா
நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் பெரும்பாலும் பொழுது போக்கு அம்சங்களுடன் இருந்தாலும் ஒருசில புகைப்படங்கள் மற்றவர்கள் பார்க்கும் வகையில் இல்லாமல் நமது தனிப்பட்ட புகைப்படங்களாக இருக்கும். இப்படிப்பட்ட புகைப்படங்களை தனியே ஒளித்து வைக்க சந்தையில் ஏகப்பட்ட ஆப்ஸ் உலவி வந்த போதிலும் ஒருசில ஆப்ஸ்கள் மட்டுமே சரியான முறையில் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் நமது அந்தரங்க புகைப்படங்களை சரியான விதத்தில் ஒளித்து வைக்க பயன்படும் ஆப்ஸ்களில் ஒன்று 'ஆஸ்ட்ரோ ஃபைல் மேனேஜர்' (Astro File Manager). கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்ட பின்னர் பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்:

ஸ்டெப் 1:
முதலில் இந்த குறிப்பிட்ட ஆப்-ஐ இன்ஸ்டால் செய்த பின்னர் புகைப்படங்களை இந்த ஆப்ஸ்க்குள் செல்வதற்கு அனுமதியுங்கள்

ஸ்டெப் 2:
அனுமதி பெற்றவுடன் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள அனைத்து புகைப்படங்களின் ஃபோல்டர்களும் தெரியும். அனைத்து புகைப்படங்களையும் இந்த ஆப்-இல் ஸ்டோர் செய்து கொள்ளவும், பின்னர் குறிப்பிட்ட புகைப்படங்களை ஒளித்து வைக்க மேல்புறம் மூன்று கோடுகள் உள்ள ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:
பின்னர் ஒளித்து வைக்க வேண்டிய புகைப்படங்கள் உள்ள போண்டரின் பெயரை nomedia ena மாற்றுங்கள், அதே நேரத்தில் அந்த போல்டர் பெயரின் முன்னர் காலத்தை குறிப்பிட மறந்துவிட வேண்டாம். இப்போது உங்களுடைய அந்த குறிப்பிட்ட போல்டர் மறைந்திருக்கும்

ஸ்டெப் 4:
ஒருவேளை நீங்கள் ஒளித்து வைத்த புகைப்படங்களை மீண்டும் தோன்றா செய்ய வேண்டும் என்றல் வலது கார்னரில் உள்ள வியூ செட்டிங்ஸ் என்ற ஆப்சனுக்கு சென்று ஷோ ஹைடன் ஃபைல்ஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் போதும்


Click it and Unblock the Notifications