பேஸ்புக் உங்களிடம் இருந்து திருடிய தகவல்கள் டவுண்லோடு செய்வதெப்படி?

பேஸ்புக் 2004,ல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள்.

|

பேஸ்புக் 2004,ல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள். தற்போது பேஸ்புக் மூலம் மிக அதிக வருமானம் பெற்று வந்தார் மார்க் ஜுக்கர்பெர்க். மேலும் உலக நாடுகள் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த பேஸ்புக் வலைதளத்தை உபயோகம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் உங்களிடம் இருந்து திருடிய தகவல்கள் டவுண்லோடு செய்வதெப்படி?

பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும் அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது.

 மார்க் ஜூக்கர்பெர்க் :

மார்க் ஜூக்கர்பெர்க் :

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி வெளியானதை தொடர்ந்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார், குறிப்பாக சேனல் 4 தொலைகாட்சி
நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேங்க் சார்ந்த தகவல்கள்:

பேங்க் சார்ந்த தகவல்கள்:

பேஸ்புக்கில் நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக எடுக்க முடியும். குறிப்பாக மெசேஜ், வீடியோ, போட்டோ, மீம்ஸ், ஸ்டேட்டஸ் மற்றும் நீங்கள் பேங்க் சார்ந்த தகவல்களை பேஸ்புக்கில் கொடுத்து இருந்தால் அதையும் மிக எளிமையாக இப்போ பேஸ்புக்கில் எடுக்க முடியும்.

பேஸ்புக் செட்டிங்ஸ்:

பேஸ்புக் செட்டிங்ஸ்:

குறிப்பாக நீங்கள் பேஸ்புக் ஆரம்பித்த காலம் முதல் இப்போது வரை, பேஸ்புக் தளத்தில் கொடுத்த அனைத்து தகவல்கள் மற்றும் டேட்டாவை எடுக்க ஒரு வழி உள்ளது. பேஸ்புக் செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்து உழ்நுழைந்தால் Download a copy of your Facebook data-எனும் விருப்பத்தை தேர்வுசெய்து கிளிக் செய்தால் போதும் உடனே உங்களது அனைத்து தகவல்கள் மற்றும் டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனரின் தகவல்கள்

பயனரின் தகவல்கள்

தற்சமயம் ஃபேஸ்புக் பயனரின் தகவல்களை திருடப்பட்டிப்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள அந்நிறுவனம் ஒரு வழிமுறையை அறிவித்துள்ளது. இந்தப் பயன்பாடு பேஸ்புக் உபயோகம் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா:

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா:

உங்களின் பல்வேறு தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மூலம் எடுக்கப்பட்டு இருந்தால், பேஸ்புக் நேர்ட்டிஃபிகேஷனில், ஃபேஸ்புக் எவ்வாறு
This Is Your Digital Life வலைத்தளத்தை முடக்கியது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். மேலும் நோட்டிபிகேஷனில் இருக்கும் லிங்க்-ஐ கிளிக் செய்து நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

பேஸ்புக் பயன்படுத்தும் அகைவரும் எந்த சிஸ்டத்தில் எல்லாம் நீங்கள் லாக் இன் செய்துள்ளீர்கள் என்ற விஷயம் இருக்கும், அதை செக் செய்து சரியான முறையில் லாக் அவுட் செய்து வைக்க வேண்டும்.

How to check PF Balance in online (TAMIL)
 39 ஆயிரம் கோடி:

39 ஆயிரம் கோடி:

பேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ்ஆப் துணை நிறுவனர் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேஸ்புக் பிரச்சனை தற்சமயம் அனைத்து இடங்களிலும் பூதாகரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூக்கபெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Here’s what Facebook knows about you, and how to download all your data; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X