கூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி?
தற்போது இதில் புதிய சாதனையாக , உணவகங்களுக்கு அழைப்பு மேற்கொள்ளல், உணவை ஆர்டர் செய்தல் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் அசிஸ்டென்ட் தற்போது ஆண்ராய்டு, ஐ ஓஎஸ் போன்கள், ஸ்பீக்கர்,டிவி என சுமார் 500மில்லியனுக்கும் மேற்பட்ட கருவிகளில் செயல்படுகிறது. ஆண்ராய்டு கருவிகளை பொறுத்தவரை இதற்கு ஆண்ராய்டு6.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் மட்டுமே செயல்படும். கூகுள் அசிஸ்டென்ட்-ல் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில் ஏற்கனவே உள்ள இரண்டு குரல்களுடன் கூடுதலாக ஆறு புதிய குரல்கள் புதிய மேம்படுத்தலில் வழங்கப்பட்டுள்ளன. ஜான் லெஜன்ட்டின் குரலும் இந்தாண்டின் இறுதியில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள ஆறு குரல்களை பொறுத்தவரை, மூன்று ஆண் குரல்களும் மூன்று பெண் குரல்களும் உள்ள நிலையில் இரட்டைப்படை எண்களுக்குரியன ஆண் குரலாகும். தற்போது மொத்தம் 8 குரல்கள் உள்ளன. கூகுள் அசிஸ்டென்ட் ஏற்கனவே ஹிந்தியில் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் கிடைக்கிறது. ஆனால் இந்த வசதி கூகுள் ஹோம் மற்றும் மினி ஸ்பீக்கரில் கிடைப்பதில்லை.
தற்போது இதில் புதிய சாதனையாக , உணவகங்களுக்கு அழைப்பு மேற்கொள்ளல், உணவை ஆர்டர் செய்தல் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுளின் புதிய டியூப்லக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் பேச்சை மிமிக் செய்து தானாகவே உரையாடலை நிகழ்த்தக்கூடியது. அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்ட இந்த வசதி தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது.
உங்கள் பல்வேறு வித கருவிகளில் எப்படி குரல்களை மாற்றுவது என்ற வழிமுறையை கீழே காணலாம்.

ஆண்ராய்டு
போன் மற்றும் டேப்லெட்
1)ஹோம் பட்டனை அழுத்திப்பிடித்து கூகுள் அசிஸ்டென்ட்ஐ இயக்க வேண்டும்.
2)மேல் வலது மூலையில் உள்ள ப்ளு ஐகானை கிளிக் செய்து கூகுள் அசிஸ்டென்ட் எக்ஸ்ப்லோரரை அணுகவும்.
3)பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அமைப்புகளுக்கு (Settings) செல்லவும்.
4) அங்கு ஏக்செஸ் செட்டிங்ஸ்-ல் பிரிபெரென்ஸ்(preference) செல்லவும்
5)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் தேவையான குரலை தேர்வு செய்து ப்ரிவியூ-ம் பார்க்கலாம்
6)அதை விட்டு வெளியேறியவுடன், நீங்கள் தேர்வு செய்த புதிய குரல் இயக்கத்திற்கு வரும்.

ஸ்பீக்கர்
1) உங்கள் ஆண்டாய்டு போன் அல்லது டேப்லெட்-ல் உள்ள கூகுள் ஹோம் செயலியை திறக்கவும்.
2)மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து மெனுவை அடையவும்.
3)அதில் மோர் செட்டிங்ஸ் தேர்வு செய்து பிரிபெரென்ஸ்(preference) செல்லவும்
4)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் தேவையான குரலை தேர்வு செய்து ப்ரிவியூ-ம் பார்க்கலாம்
5)அதை விட்டு வெளியேறியவுடன், நீங்கள் தேர்வு செய்த புதிய குரல் இயக்கத்திற்கு வரும்.

ஐ ஓ.எஸ்
ஐபோன் மற்றும் ஐ பேட்
1)உங்கள் ஐபோன் அல்லது ஐபேடில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் செயலியை இயக்க வேண்டும்.
2)மேல் வலது மூலையில் உள்ள ப்ளு ஐகானை கிளிக் செய்து கூகுள் அசிஸ்டென்ட் எக்ஸ்ப்லோரரை அணுகவும்.
3)பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அமைப்புகளுக்கு (Settings) செல்லவும்.
4) அங்கு ஏக்செஸ் செட்டிங்ஸ்-ல் பிரிபெரென்ஸ்(preference) செல்லவும்
5)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் தேவையான குரலை தேர்வு செய்து ப்ரிவியூ-ம் பார்க்கலாம்.

ஸ்பீக்கர்
1) உங்கள் ஐபோன் அல்லது ஐபேட்-ல் உள்ள கூகுள் ஹோம் செயலியை திறக்கவும்.
2)மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து மெனுவை அடையவும்.
3)அதில் மோர் செட்டிங்ஸ் தேர்வு செய்து பிரிபெரென்ஸ்(preference) செல்லவும்
4)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் உங்களுக்கு விருப்பமான குரலை தேர்வுசெய்யலாம்.


Click it and Unblock the Notifications