கிளவுடில் ஃபைல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது எப்படி?
கிளவுட் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
கிளவுட் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உங்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டால் அதனை எதுவும் செய்ய முடியாது. இதனால் தனியுரிமையை பாதுகாக்க தகவல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது அவசியமாகும். இதன் மூலம் பயனர்கள் உங்களது விவரங்களை சட்டவிரோதமாக இயக்க முடியாது.
ஆன்லைன் ஸ்டோரேஜ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்து வருகிறது. கிளவுட் ஸ்டோரேஜ் மிகவும் பொதுவான விஷயமாகி இருக்கிறது. ஸ்டோரேஜ் ஸ்பேஸ் பெறும் போது உங்களுக்கு தனியுரிமை மற்றும் உயர் ரக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஃபைல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது எப்படி?
பல்வேறு ஆன்லைன் சேவைகளிலும் இது மிகவும் எளிமையான காரியம் தான். இதன் மூலம் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை நீங்கள் கிளவுட் ஸ்டோரேஜில் ஃபைல்களை மிக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஃபைல்களை என்க்ரிப்ட் செய்ய முடியும்.

என்க்ரிப்டோ (Encrypto)
இந்த செயலியை மேக் ஓ.எஸ். எக்ஸ் அல்லது விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். இவற்றில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை அனுப்பவும், ஷேர் செய்யவும் முடியும். இது கிளவுட் ஸ்டோரேஜ் சார்ந்த என்க்ரிப்ஷன் ஆகும். இவற்றை யு.எஸ்.பி., டிராப்பாக்ஸ் அல்லது மின்னஞ்சல் கொண்டு அனுப்பலாம்.

பாக்ஸ்க்ரிப்டர் (Boxcryptor)
இந்த சேவையை பயன்படுத்து ஃபைல்களை என்க்ரிப்ட் செய்து கொள்ளலாம். இதற்கு கம்ப்யூட்டரில் ஃபோல்டர் ஒன்றை உருவாக்கி அதில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை 256 bit AES ஸ்டான்டர்டில் சேமித்து வைக்கலாம். அதனை பின் கூகுள் டிரைவ் அல்லது டிராப்-பாக்ஸ் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

என்க்ரிப்ட்டெட் கிளவுட் (nCrypted Cloud)
இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., மேக் மற்றும் விண்டோஸ் தளங்களில் கிடைக்கிறது. இந்த சேவை கிளவுட் ஸ்டோரேஜ் தளங்களை கம்ப்யூட்டரில் ஃபோல்டராக உருவாக்கி வைக்க வழி செய்கிறது. ஃபைல்களை இங்கு பதிவு செய்ததும், அவற்றை ரைட் க்ளிக் செய்து என்க்ரிப்ட் அல்லது டி-க்ரிப்ட் செய்யலாம்.

சூகாசா (Sookasa)
இந்த சேவை தற்சமயம் கூகுள் டிரைவ் மற்றும் டிராப்-பாக்ஸ் உள்ளிட்டவற்றில் மட்டுமே கிடைக்கிறது. தரவுகளை சின்க் செய்ய டிராப்-பாக்ஸ் அல்லது கூகுள் டிரைவில் பாதுகாக்கப்பட்ட ஃபோல்டரை உருவாக்கலாம். இங்கு என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை கிளவுட் சேவையில் அப்லோடு செய்யலாம்.

ஒடிரைவ் (Odrive)
நீங்கள் கிளவுடில் அனைத்து ஸ்டோரேஜ் அக்கவுன்ட்களையும் லின்க் செய்யலாம். இது சரியாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட SHA2256 பாதுகாக்கப்பட்ட ஃபோல்டர் ஆகும்.


Click it and Unblock the Notifications