இன்றே கடைசி : ஜியோ ஆப் மூலம் ப்ரைம் ரீசார்ஜ் செய்வது எப்படி.?
சரி நீங்கள் ஜியோ ப்ரைம் சேவையை தான் மேற்கொண்டு அணுகவுள்ளீர்கள் மற்றும் பிற நிறுவனங்களோடு ஒப்பிடும் போது ஜியோவின் கட்டண சேவைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தீர்மானித்து விட்டீர்களா.? அப்போ சரி.!
1 நாள் கூட முழுதாய் நம் கைகளில் இல்லை, ஜியோவின் இலவச சேவைகள் மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பராக மாற வேண்டும், அதற்கு ஆண்டுதோறும் ரூ.99/- கட்டணம் செலுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக இதுநாள் வரையிலாக நாம் இலவசமாக அனுபவித்து வந்த சேவைகளை கட்டண திட்டங்களின் கீழ் பெற வேண்டும்.? சரி நீங்கள் ஜியோ ப்ரைம் சேவையை தான் மேற்கொண்டு அணுகவுள்ளீர்கள் மற்றும் பிற நிறுவனங்களோடு ஒப்பிடும் போது ஜியோவின் கட்டண சேவைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தீர்மானித்து விட்டீர்களா.? அப்போ சரி.!
"அடடா.. எனக்கு ரீசார்ஜ் பண்ணுற பழக்கமே மறந்து போச்சே.. இனிமே நாம் எப்படி ரீசார்ஜ் செய்வேன்.??" - என்பது தான் உங்களின் எண்ணமெனில் கவலையை விடுங்க. புதிய ஜியோ ப்ரைம் சேவையின் கீழ் எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்பது பெரும்பான்மையினருக்கு தெரியாது தான், இப்போது தெரிந்துகொள்வோம்.!

வழிமுறை #01
1. ரிலையன்ஸ் ஜியோ சிம் பொருத்தப்பட்ட உங்கள் சாதனத்தில் மைஜியோ பயன்பாட்டை திறக்கவும்.
2. ஒருவேளை நீங்கள் அப்டேட் செய்யாத ஆப்பை பயன்படுத்தினால், அப்டேட் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். அதை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளவும்.

வழிமுறை #02
3. அடுத்த திரையில், நீங்கள் நிறுவிய ஜியோ பயன்பாடுகளின் ஒரு பட்டியலை காண்பீர்கள் அதில் மைஜியோ ஆப் முதலில் இடம்பெறும்.

வழிமுறை #03
4. பின்னர், மைஜியோ ஆப்பை திறக்க அதன் அருகில் உள்ள ஓப்பன் பட்டனை டாப் செய்யவும்.
5. பின்னர் நீங்கள் சைன்-இன் செய்ய வேண்டும் அதற்கு உங்கள் ஜியோ பயனர் பெயர், மற்றும் ஏற்கனவே அமைத்த கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

வழிமுறை #04
6. இப்போது பயன்பாட்டின் ஹோம் ஸ்க்ரீனில், கீழே ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை டாப் செய்யவும். நீங்கள் வேறு எந்த திரையில் இருந்தாலும் மேல் இடது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் மெனு பொத்தானை டாப் செய்து, தொடர்ந்து ஜியோ ப்ரைம் டாப் செய்யவும்.

வழிமுறை #05
7. இப்போது ரூ.99/- என்ற பொத்தானை டாப் செய்வதின் மூலம் நீங்கள் ஜியோ ப்ரைம் தேர்வை நிகழ்த்துவீர்கள்
8. இப்போது உங்களுக்கு விருப்பமான பேமண்ட் ஆப்ஷன்களை தேர்வு செய்து பணபரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்ளவேண்டியது தான்.

மேலும் படிக்க
முற்றிலும் இலவசமாக ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெறுவது எப்படி.?


Click it and Unblock the Notifications