அவசர அவசரமாக 5G போன் வாங்கப் போறீங்களா? முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க.!

|

இந்தியாவில் சமீபத்தில் தான் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக செல்போன் நிறுவனங்களும் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

 ஜியோ, ஏர்டெல்

ஜியோ, ஏர்டெல்

அதேபோல் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவைவழங்கப்பட இருக்கிறது. பின்பு படிப்படியாகச் சேவை விரிவுபடுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?

 சாம்சங், சியோமி, விவோ

தற்போது இந்திய சந்தையில் சாம்சங், சியோமி, விவோ போன்ற நிறுவனங்களின் 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கு முன்பு மக்கள் சில முக்கிய விஷயங்களைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போது அந்த முக்கிய விஷயங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

5ஜி பேண்ட் முக்கியம்

5ஜி பேண்ட் முக்கியம்

5ஜி போன் வாங்கு முன்பு கண்டிப்பாக அந்த போன் எந்த பேண்ட் ஆதரவைக் பெறுகிறது என்று பார்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் வாங்க இருக்கும் போன் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் போன் எந்த பேண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது தெரியும்.

அதேபோல் 11 5ஜி பேண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பேண்ட்களை ஆதரிக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்குவது மிகவும் நல்லது. குறிப்பாக இதுபோன்ற போன்கள் தான் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

நீங்கள் வாங்கும் 5ஜி மொபைலில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். இதுதான் 5ஜி நெட்வொர்க்குகளை ஆதரிக்கும். அதேபோல் இப்போது பெரும்பாலான போன்கள் 5ஜி சிப்செட் வசதியுடன் தான் வருகின்றன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 மற்றும் அதற்கு மேற்பட்டவை அதாவது ஸ்னாப்டிராகன் 765ஜி,ஸ்னாப்டிராகன் 865 போன்ற சிப்செட்டுகளை கொண்ட போன்களை தேர்வு செய்வது நல்லது.

மீடியாடெக் டைமென்சிட்டி-சீரிஸ் சிப்செட்கள் சிறந்த 5ஜி செயல்பாடுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே Dimensity 700, Dimensity 8100, Dimensity 9000 போன்ற சிப்செட்களை கொண்ட போன்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக மீடியாடெக் G-series மற்றும் Helio-series போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

அப்டேட்

அப்டேட்

5ஜி போன்களில் சாப்ட்வேர் அப்டேட்களை முறையாக பயன்படுத்துங்கள். இதுதான் 5ஜி சேவையை பயன்படுத்த அருமையாக உதவும். குறிப்பாக இண்டர்நெட் ஸ்பீட் என்று வரும்போது 5ஜி மிகப்பெரிய முன்னேற்றத்தை வழங்கும். எனவே செல்போன் நிறுவனங்கள் அவ்வப்போது வழங்கும் சாப்ட்வேர் அப்டேட்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக அடிக்கடி சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கும் நிறுவனங்களின் 5ஜி போன்களை தேர்வுசெய்ய வேண்டும்.

போனை திருடியவரின் இடத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடிச்ச சிங்கப்பெண்: க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!போனை திருடியவரின் இடத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடிச்ச சிங்கப்பெண்: க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

நீங்கள் வாங்கும் போனின் டிஸ்பிளே பெரியதாக இருந்தால் அதில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருந்தால் நல்லது. அதேபோல் சற்று சிறிய டிஸ்பிளே இருந்தால் 4500 எம்ஏஎச் பேட்டரி அல்லது அதை விட சற்று பெரிய பேட்டரி இருப்பதை உறுதிசெய்யவும்.

Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

மிகவும் மலிவு விலை 5ஜி போன்களை வாங்குவதை விட ரூ.15,000 முதல் ரூ.20,000-க்குள் 5ஜி போன்களை வாங்குவது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் தான் அதிக வருடங்கள் தாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Here's what to keep in mind before buying a new 5G smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X