சேமித்த வைபை பாஸ்வேர்டுகளை எளிதில் பார்க்க 2 எளிய வழிகள்

Written By:

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட வைஃபைக்கள் பயனப்டுத்துவராக இருந்தால் அதன் பாஸ்வேர்டை எளிதில் ஞாபகம் வைத்து கொள்வது கடினம் இந்த நிலையில் வைபை பாஸ்வேர்டுகளை எப்படி ஸ்மார்ட்போனில் தெரிய வைப்பது என்பது குறித்து இரண்டு வழிகளில் தெரிந்து கொள்ளலாம்

சேமித்த வைபை பாஸ்வேர்டுகளை எளிதில் பார்க்க 2 எளிய வழிகள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் என்பது புத்திசாலித்தனமானது. நீங்கள் பயன்படுத்தும் அனைத்து வகை பாஸ்வேர்டுகளையும் தனது மெமரியில் சேமித்து வைக்கும் தன்மை உடையது. எனவே நீங்கள் மல்டி வைபைக்கள் பயன்படுத்தும்போது அந்தந்த வைபைக்களின் பாஸ்வேர்டை தெரிந்து கொள்வது சிரமமாக இருந்தால் இதோ கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதல் முறை: ஃபைல் மேனேஜரை பயன்படுத்துவது

முதல் முறை: ஃபைல் மேனேஜரை பயன்படுத்துவது

முதலில் உங்கள் ஃபைல் எக்ஸ்புளோரர் உங்களுக்கு படிக்கும் அனுமதியை தரவேண்டும். அனுமதி தானாகவே இல்லையெனில் நீங்கள் ரூட் எக்ஸ்புளொரர் அல்லது சூப்பர் மானேஜர் என்பதை டவுன்லோடு செய்து அதன் பின்னர் செயல்பட வேண்டும்

இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில் data/misc/wifi என்ற ஃபோல்டருக்கு சென்று அதில் உள்ள wpa_supplicant.conf. என்ற பெயரில் உள்ள பைலை கண்டுபிடிக்க வேண்டும்

 ES பைல் எக்ஸ்புளோரர்:

ES பைல் எக்ஸ்புளோரர்:

முதலில் ES பைல் எக்ஸ்புளோரரை டவுன்லோடு செய்து பின்னர் அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

பின்னர் ES பைல் எக்ஸ்புளோரரில் உள்ள ரூட் எக்ஸ்புளோரர் என்பதை எனேபிள் செய்ய வேண்டும்

பின்னர் இந்த ரூட் எக்ஸ்புளோரரில் உள்ள 'Date" என்ற டைரக்ட்ரியை கண்டுபிடிக்க வேண்டும்

பின்னர் இந்த 'Date"வில் உள்ள misc என்ற போல்டரை கண்டுபிடிக்க வேண்டும்

இந்த போல்டரில் உள்ல ஃவைபை போல்டரான wpa_supplicant.conf என்ற பைலை கண்டுபிடித்து பின்னர் இந்த பைலை S பைல் எக்ஸ்புளோரர் மூலம் ஓப்பன் செய்ய வேண்டும்

இப்போது நீங்கள் உங்களுடைய அனைத்து ஃவைபை சேவையையும் அதன் பாஸ்வேர்டையும் பார்த்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையானதை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்

ரூ.10,000/- என்ற சூப்பர் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

இரண்டாவது முறை; வைபை பாஸ்வேர்டு ரெகவரி மூலம்

இரண்டாவது முறை; வைபை பாஸ்வேர்டு ரெகவரி மூலம்

வைபை பாஸ்வேர்ட் ரெகவரி என்ற் டூல் இலவசமாக கிடைக்கும் ஒரு டூல். இந்த டூலின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ல வைபை பாஸ்வேர்டுகளை எளிதில் அறிந்து கொள்ளலாம். அது எப்படி என்பதை பார்ப்போம்

முதலில் வைபை பாஸ்வேர்டு ரெகவரி என்ற செயலியை உங்கள் ரூட்டட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்பொனில் டவுன்லோடு செய்யுங்கள்

பின்னர் இன்ஸ்டால் செய்தவுடன் ரூட் பெர்மிஷனுக்கு அனுமதியுங்கள்

பின்னர் இன்ஸ்டால் செய்தவுடன் ரூட் பெர்மிஷனுக்கு அனுமதியுங்கள்

தற்போது உங்களுடைய அனைத்து நெட்வொர்க் மற்றும் அதன் பாஸ்வேர்டு தெரியும். அதில் உள்ள பாஸ்வேர்டை காப்பி செய்ய விரும்பினால் அதில் இருக்கும் காப்பி என்பதை ஜஸ்ட் டேப் செய்தால் போதும் உடனே அது காப்பி ஆகிவிடும், பின்னர் தேவையான இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்

இந்த எளிய முறைகளால் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் இதே வேலையை செய்ய பல செயலிகள் இருந்தாலும் இந்த வைபை பாஸ்வேர்டு ரெகவரி மிகச்சிறந்ததால அனைவராலும் கருதப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Here's how you can find out saved wifi passwords in your android device.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot