தினசரி Google Maps யூஸ் பண்றீங்களா? அப்போ 'இதை' கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
உலகம் முழுவதும் அதிக மக்கள் கூகுள் மேப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். அதேபோல் இந்த செயலியில் தொடர்ந்து பயனுள்ள வகையில் பல புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாக செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுப்படுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியை தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நமது அன்றாடப் பயன்பாட்டில் இந்த கூகுள் மேப் தவிர்க்கவே முடியாது. அதாவது எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும், அதன் தொலைவு எவ்வளவு,எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுவதோடு, அடுத்து வரும் வலப்புறம் சாலையில் திரும்புங்கள், அல்லது இடது பக்கச் சாலையில் திரும்புங்கள் என்று நமக்கு டிஜிட்டல் வழிகாட்டியாக இருக்கிறது இந்த கூகுள் மேப்.
இருந்தபோதிலும் கூகுள் மேப்பில் நாம் தேடும் இடங்கள் அனைத்தும், அந்த செயலியில் உள்ள ஹிஸ்டரியில் பதிவாகியிருக்கும். இந்த ஹிஸ்டரியை அவ்வப்போது அழிப்பது தான் நல்லது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஆன்லைனில் உள்ள ஒவ்வொருவரின் டேட்டாக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. தற்போது இதனைக் கொண்டுதான் பல்வேறு தொழில்கள் இயங்குகின்றன.
குறிப்பாக கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் பயண விவரங்களை சேகரிப்பதன் மூலம் அந்தந்த இடங்களுக்குத் தகுந்தபடி வணிகரீதியான விளம்பரங்களை காண்பிக்கவும் அந்த இடம் சார்ந்த பிற தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே கூகுள் மேப் செயலி சேமித்து வைத்திருக்கும் பயண விவரங்களை அவ்வப்போது அழிப்பது மிகவும் நல்லது. இதை அழிப்பது எப்படி என்பது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் உங்களது போனில் உள்ள கூகுள் மேப் செயலியை ஓபன் செய்யவும். அதில் வலப்புறத்தில் மேலே இருக்கும் உங்கள் கணக்கின் ப்ரொஃபைல் பிக்சரை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு Your Timeline எனும் விருப்பத்தை தேர்வு செய்து அதனுள் உள்நுழைந்ததும், மேலே வலப்புறமாக இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2: அடுத்தது Settings and Privacy என்ற விருப்பம் தெரியும் அதை கிளிக் செய்தால், Delete all Location history என்கிற மெனு காண்பிக்கப்படும், அதை கிளிக் செய்யதால் நீங்கள் எங்கெங்கு பயணம் செய்தீர்கள் என்கிற விவரங்களை எளிமையாக அழித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-3: மேலும் அதே பக்கத்தில், Delete all location history என்பதற்கு கீழே, Automatically delete location history என்ற விருப்பமும் இருக்கும், அதை கிளிக் செய்தால் எத்தனை மாதங்களுக்கு முன்புள்ள பயண விவரங்களை அழிக்க வேண்டும் என செட் செய்கிறோமோ அதன்படி தானாகவே அழிந்து விடும். மேலும் இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தின் டேட்டாவினை எளிமையாக அழிக்க முடியும்.

வழிமுறை-4: ஆப்பிள் ஐபோன் வைத்திருக்கும் பயனர்களும் இதே முறையில் கூகுள் மேப்ஸ் சென்று செட்டிங்ஸில் இருக்கும் மேப் ஹிட்டரியை தேர்வு செய்து அதில் மேல் உள்ள 'search' option உதவியுடன் தேதி வாரியாக பயண விவரங்களை எளிமையாக அழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications