'பெயிட்' ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை இலவசமாக டவுன்லோட் செய்வதெப்படி.?
விருப்பமான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை பணம் செலுத்தி பெறுவதில் உங்களுக்கு விருப்பமில்லையா..? பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்ற தயாராகுங்கள்.!
கூகுள் ப்ளே ஸ்டோர் சந்தேகத்திற்கு இடமின்றி எந்தவொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கும் இதயம் என்றே கூறலாம். ஏராளமான பயன்பாடுகள் கொண்டு ப்ளே ஸ்டோர் ஆனது நம் அன்றாட வாழ்வை மிகவும் எளிமையான ஒன்றாக மாற்றியமைப்பதற்கு ஒத்துழைக்கிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பல "இலவச" பயன்பாடுகள் உள்ளன என்ற போதிலும் சில நேரங்களில் குறிப்பிட்ட பயன்பாட்டை அணுக நாம் பணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
சரி அந்த சிக்கலில் இருந்து தப்பிக்க தமிழ் கிஸ்பாட் உங்களுக்கு இங்கே உதவ காத்திருக்கிறது. அதவாது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இலவசமாக உங்களுக்கு பிடித்த ஆப்ஸ்களை பணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறையை அதாவது ஒரு தந்திரத்தை இங்கே வழங்குகிறது.

வழிமுறை #01
முதலில் பயனர் அவர்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் 9ஆப்ஸ் ஏபிகே டவுண்லோடர் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதுதான் நீங்கள் இலவசமாக பணம் செலுத்தாமல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை பதிவிறக்க அனுமதிக்கும் என்று முதல் படியாகும்.

வழிமுறை #02
பின்னர் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடிங் நிகழ்த்திய பின்னர் அந்த ஆப்பை திறந்து பயனர் தன்னைத்தானே ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03
9ஆப்ஸ் ஏபிகே டவுன்லோடரில் ரிஜிஸ்டர் செய்த பின்னர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர் தங்களுக்கு தேவையான ஆப்பின் பெயரை அதாவது இலவசமாக பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஆப்பின் பெயரை பதிவு செய்யவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04
பின்னர் உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும் இன்ஸ்டால் ஆப்ஷனை செலக்ட் செய்யவும் பின்னர் இன்ஸ்டால் செய்து முடித்த பின்னர் பினிஷ் ஆப்ஷனை கிளிக் செய்து இலவசமாக ஆப்ஸ்களை அனுபவிக்கவும்.

மேலும் படிக்க
வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் : லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்வதெப்படி.?


Click it and Unblock the Notifications