இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

|

பிளாக் செய்வது (Blocking) - நம்மில் பலரும் பயன்படுத்தும் ஒரு கடைசி ஆயுதம் ஆகும்.

நம்மை வெறுப்பேற்றுவர்களை பதிலுக்கு வெறுப்பேற்ற்றும் நோக்கத்தின் கீழ் அல்லது இனிமேல் இந்த கருமத்தை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது கட்டத்தை எட்டிய அனைவருமே.. நமக்கு தொல்லை கொடுக்கும் நபர்களை பிளாக் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்!

உலக மகா உருட்டு!

உலக மகா உருட்டு!

எந்தவொரு சமூக ஊடக தளங்களை (Social Media Platforms) விடவும் வாட்ஸ்அப்பில் உள்ள பிளாக் அம்சம் (Blocking Feature) தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது மிகையாகாது!

ஒரு மொபைல் நம்பரை கூட பிளாக் செய்யாத ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் இருக்கிறது என்றால்.. அது கண்டிப்பாக ஒரு "உலக மகா உருட்டு" ஆகத்தான் இருக்கும் (அதாவது உலக மகா பொய்யாகத்தான் இருக்கும் என்று அர்த்தம்)!

சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!

இனிமேல் இப்படி செய்யுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

இனிமேல் இப்படி செய்யுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

ஒருவேளை நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்ளும் ஒரு நபராக இருந்தால், அதாவது "அட ஆமாம்பா.. நான் கொஞ்சம் பேரை பிளாக் பண்ணிதான் வச்சி இருக்கேன்!" என்று ஓப்பன் ஆக ஏற்றுக்கொள்பவராக இருந்தால்.. பிளாக் செய்வதை இன்னும் கொடுமையான ஒரு விஷயம் இருக்கிறது.

அதை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்! அதென்ன மேட்டர்? வாழ்க்கையையே வெறுத்து விடுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு அதில் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

தடுப்பதை விட தண்டிப்பதே சிறப்பு!

தடுப்பதை விட தண்டிப்பதே சிறப்பு!

வாட்ஸ்ஆப் வழியாக உங்களை எரிச்சலூட்டும் நபர்களை தடுப்பதை விட (அதாவது பிளாக் செய்வதை விட) அவர்களை தண்டிப்பதையே நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - வாட்ஸ்அப் செட்டிங்ஸ் வழியாகவே அணுக கிடைக்கும் சில அம்சங்களை வைத்து அவர்களை 100% புறக்கணிக்க வேண்டும்.

அதாவது அவர்கள் என்ன செய்தாலும், அது உங்களுடையே கண்களுக்கு வராதபடி புறக்கணிக்க வேண்டும். இப்படி செய்வதால்.. உங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் - ஒருகட்டத்தில் - மன உளைச்சலுக்கு ஆளானாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

இதை செய்ய உங்களுக்கு 2 வழிகள் உள்ளன!

இதை செய்ய உங்களுக்கு 2 வழிகள் உள்ளன!

முதல் வழி: தொல்லை கொடுக்கும் ஒரு நபரின் மொபைல் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்வதற்கு பதிலாக அவரின் மெசேஜ்களை ஆர்ச்சிவ் (Archive) செய்து விடுங்கள்!

முன்னதாக ஆர்ச்சிவ் பிரிவின் கீழ் இருக்கும் சாட்டில் புதிய மெசேஜ் வந்தால், அது தொடர்பான நோட்டிஃபிக்கேஷன் உங்களுக்கு கிடைக்கும். அது உங்களை எரிச்சல் அடைய வைத்து இருக்கலாம்!

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு சாட்-ஐ ஆர்ச்சிவ் செய்துவிட்டால்.. அதை மண்ணுக்குள் போட்டு புதைத்ததற்கு சமம். நீங்களாகவே தோண்டி பார்க்கும் வரை, அதை உங்களால் அணுக முடியாது!

இப்படி செய்வதால் உங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வாட்ஸ்அப் நம்பர்களை பிளாக் செய்யாமலேயே மிகவும் கடுமையாக புறக்கணிக்கலாம். ஒருகட்டத்தில் "என்ன பண்ணாலும் நம்மள மதிக்க மாட்றாங்களே!" என்று அவர்களே வெறுத்துப்போய் விடுவார்கள்!

குறிப்பிட்ட நபரின் மெசேஜ்களை ஆர்ச்சிவ் செய்வது எப்படி?

குறிப்பிட்ட நபரின் மெசேஜ்களை ஆர்ச்சிவ் செய்வது எப்படி?

- வாட்ஸ்அப்பை திறந்து, நீங்கள் "தவிர்க்க" விரும்பும் சாட்-ஐ தேடவும்

- பின்னர் அந்த சாட்-ஐ லாங் பிரஸ் செய்யவும் (அதாவது நீண்ட நேரம் அழுத்தவும்)

- இப்போது ஸ்க்ரீனின் மேல் புறத்தில் கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் தோன்றும் ஒரு ஃபோல்டர் ஐகானை காண்பீர்கள், அது தான் ஆர்ச்சிவ் அம்சம் ஆகும்; அதை கிளிக் செய்யவும்

- அவ்வளவு தான், வேலை முடிந்தது. இனிமேல் குறிப்பிட்ட காண்டாக்ட் வழியாக வரும் எந்தவொரு மெசேஜுமே உங்கள் கண்களில் படாது!

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

இரண்டாவது வழி!

இரண்டாவது வழி!

ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்யவும் விருப்பம் இல்லை அதே சமயம் ஆர்ச்சிவ் செய்யவும் விருப்பம் இல்லை என்றால்.. நீங்கள் ம்யூட் (Mute) ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம். அதை செய்ய..

- வாட்ஸ்அப்பை திறந்து, நீங்கள் "தவிர்க்க" விரும்பும் சாட்-ஐ தேடவும்

- பின்னர் அந்த சாட்-ஐ லாங் பிரஸ் செய்யவும் (அதாவது நீண்ட நேரம் அழுத்தவும்)

- இப்போது ஸ்க்ரீனின் மேல் புறத்தில் ஒரு கோடு மூலம் இரண்டாக வெட்டப்படும் ஸ்பீக்கர் ஐகானை காண்பீர்கள், அது தான் ம்யூட் அம்சம் ஆகும்; அதை கிளிக் செய்யவும்

- இப்போது 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும் (Always) என்கிற மூன்று விருப்பங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும். உடன் ஷோ நோட்டிஃபிக்கேஷன்ஸ் (Show Notifications) என்கிற விருப்பமும் கிடைக்கும்.

- இப்போது 'ஆல்வேஸ்' என்பதை தேர்வு செய்து, ஷோ நோட்டிஃபிக்கேஷன்ஸ் என்கிற விருப்பத்தை தொடாமல் அப்படியே விட்டு விடவும். அவ்வளவு தான், வேலை முடிந்தது. இனிமேல் அந்த குறிப்பிட்ட காண்டாக்ட்டின் எந்தவொரு மெசேஜுமே உங்களை தொந்தரவு செய்யாது!

கடைசியாக.. வேற வழியே இல்லை என்றால்?

கடைசியாக.. வேற வழியே இல்லை என்றால்?

ஆர்ச்சிவ் செய்தும் புண்ணியம் இல்லை; ம்யூட் செய்தும் பலன் இல்லை என்றால்.. வேறு வழியே இல்லை - பிளாக் செய்வது மட்டுமே உங்களுக்கான ஒரு வழி! அதை செய்ய..

- வாட்ஸ்அப்பை திறந்து, நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் சாட்-ஐ தேடவும்

- பின்னர் அந்த சாட்டிற்குள் சென்று, மேல் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

- இப்போது கடைசியாக உள்ள மோர் (More) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்

- பின்னர் ரிப்போர்ட் (Report) என்கிற விருப்பத்தின் கீழ் உள்ள பிளாக் (Block) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் உறுதிப்படுத்துதல் விண்டோவில் (Confirmation Window) மறுபடியும் பிளாக் என்பதை தேர்வு செய்யவும். அவ்வளவு தான் - அவங்களோட சோலி முடிஞ்ச்சு!

Best Mobiles in India

English summary
Here after use this easy method instead of blocking someone in WhatsApp and make them fed up

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X