Google Pay மூலம் தவறுதலாக பணம் அனுப்பிட்டீங்களா? இதை செய்தால் செய்தால் பணம் திரும்ப கிடைக்கும்.!
கூகுள் பே, போன்பே பேடிஎம் போன்ற யுபிஐ சேவைகளை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த யுபிஐ சேவைகளில் நாம் தவறுதலாக வேறு ஒருவருக்குப் பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்பப் பெறுவது தற்போது எளிதாகவிட்டது. குறிப்பாக எளிமையான வழிமுறைகள் மூலம் இந்த யுபிஐ செயலிகளில் பணத்தைத் திரும்ப பெற முடியும். மேலும் இப்போது இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பாக போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. இதுதவிர மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும்.
அதன்படி நீங்கள் இந்த யுபிஐ சேவை பயன்படுத்தி உங்களது நண்பருக்குப் பணம் அனுப்புவதற்குப் பதிலாக, வேறு ஒருவருக்குப் பணம் அனுப்பிவிட்டால், அதை எப்படி திரும்பப் பெறுவது என்பதை இப்போது பார்ப்போம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறான பணப் பரிமாற்றம் நடந்தால், 24-48 மணி நேரத்தில் உங்களது பணத்தைத் திரும்பப் பெறலாம்.
குறிப்பாக பணம் பெறுபவர் மற்றும் பணம் செலுத்துபவர் வங்கிகள் ஒரே வங்கியாக இருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்த நேரம்தான் எடுக்கும். அதேசமயம் இரண்டு வங்கிக் கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தை பெற அதிக நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தை திரும்ப பெறுவது எப்படி? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, நீங்கள் தவறான பரிவர்த்தனை மேற்கொண்டால், உடனே நீங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட யுபிஐ செயலியில் புகார் கொடுக்கலாம். பின்பு தவறான பரிவர்த்தனையின்ஸ்கிரீன் ஷாட் எடுத்து, நீங்கள் பணத்தை மாற்றிய கூகுள் பே, பேடிஎம், போன்பே அல்லது யுபிஐ ஆப்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஹெல்ப்லைனில் மெசேஜாக அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்பு கூட உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். குறிப்பாக NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPIஐத் தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதை தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும்.

அதேபோல் புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை,பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும். பின்பு இதை செய்தும் பணம் வரவில்லை என்றால் நேரடியாக ஆர்பிஐ பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








