Home
How to

தண்ணீரில் விழுந்த போனை சுத்தம் செய்ய ஹேர் டிரையரை பயன்படுத்தலாமா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க...

இப்போது அறிமுகமாகும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகின்றன. இருந்தபோதிலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது நாம் அனைத்து இடங்களுக்கும் இந்த ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்கிறோம்.

அப்படியிருக்கும் போது உங்களது ஸ்மார்ட்போன் தவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தண்ணீரில் விழுந்த போனை சுத்தம் செய்ய ஹேர் டிரையரை பயன்படுத்தலாமா?

முதலில் உங்களது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் வெளியே எடுத்து அதை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். ஆனால் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்த உடன் தானாக ஆப் ஆகிவிடும். ஒருவேளை அப்படி ஆப் ஆகவில்லை என்றால், போனை வெளியே எடுத்த உடன் சுவிட்ச் ஆப் செய்துவிடுவது நல்லது.

சுவிட்ச் ஆப்: தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போைனை உடனே சுவிட்ச் ஆப் செய்ய காரணம் என்னவென்றால், போனின் உள்ளே இருக்கும் சிறிய சிறிய சாதனங்கள் ஷார்ட் ஆகமால் இருக்கும். அதேபோல் ஸ்மார்ட்போனில் இருக்கும் சிம் கார்டை கூட வெளியே எடுக்க வேண்டும்.

காட்டன் துணி: குறிப்பாக போனில் இருந்த சிம் கார்டை வெளியே எடுத்த பின்பு போனில் இருக்கும் காட்டன் துணி அல்லது அதிக நீரை உறிஞ்சும் துணி கொண்டு துடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரில் விழுந்த போனை சுத்தம் செய்ய ஹேர் டிரையரை பயன்படுத்தலாமா?

ஹேர் டிரையர்:அதேபோல் சிலர் போனில் இருக்கும் நீரை எடுக்க ஹேர் டிரையரை பயன்படுத்தச் சொல்வார்கள். ஆனால் தப்பி தவறிக் கூட அந்த ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது. அதாவது ஹேர் டிரையரில் இருந்து வரும் காற்று மிகவும் சூடாக இருக்கும். எனவே இந்த சூடான காற்று ஸ்மார்ட்போனின் உள்ளே இருக்கும் சிறு மின் இணைப்புகளை அதிகமாகச் சேதப்படுத்திவிடும். எனவே போனை சுத்தம் செய்ய ஹேர் டிரையரை பயன்படுத்த வேண்டாம்.

முன்பு கூறியது போல ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தவுடன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். எனவே ஸ்மார்ட்போன் சார்ஜ் இல்லாமல் தான் ஆப் ஆகியிருக்கிறது என்று நினைத்து சார்ஜ் போட வேண்டாம். ஒருவேளை நீங்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை உடனே சார்ஜ் செய்தால் போன் முற்றிலும் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.

அரிசி மூட்டை: தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனில் உடன் ஹெட்போன் உள்ளிட்ட எந்த ஒரு சாதனத்தையும் இணைக்கக் கூடாது. பின்பு போனில் உள்ளே இருக்கும் நீரை வெளியேற்ற மொபைலை மெல்ல ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரளவுக்கு நீரை வெளியேற்றலாம். குறிப்பாக சிலர் போன் தண்ணீரில் விழுந்தவுடன் அரிசி மூட்டையில் போட சொல்வார்கள். அதாவது அந்த நீரை அரிசு உரிஞ்சும் என்று அவர்களது நம்பிக்கை. ஆனால் மொபைலை அரிசியில் போட்டால் அது நீரை எடுக்காது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இதனால் எந்த பயனுமில்லை.

தண்ணீரில் விழுந்த போனை சுத்தம் செய்ய ஹேர் டிரையரை பயன்படுத்தலாமா?

சூரிய ஒளி: அதேபோல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் ஒருபோதும் சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. பின்பு எந்த சூடான பொருளையும் மொபைல் பக்கத்தில் வைக்க வேண்டாம். குறிப்பாக வெயில் படாத இடத்தில் போனை வையுங்கள். அதன்பின்பு போனை எடுத்து ஆன் செய்து பாருங்கள். ஒருவேளை உங்களது போனில் அதிக தண்ணீர் போகவில்லை என்றால் ஆன் செய்த பின்னர் வழக்கம் போல் அது ஒர்க் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கூறிய அனைத்தையும் செய்தபின்பு உங்களது போன் ஆன் ஆகவில்லை என்றால், உடனே சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லவும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் போனை பாதுகாப்பாகவும், கவனமாகவும் வைத்திருப்பது மிகவும் நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Has your smartphone fallen into water? Here's what to do? Here's what not to do: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X