WhatsApp வழியாக தேசப்பற்று: நெகிழ வைக்கும் 2022 சுதந்திர தின வாழ்த்துக்கள்!
அன்னியர்கள் எங்கிருந்து வந்தார்களோ.. அவர்களை அந்த இடத்திற்கே திருப்பி அனுப்ப.. துணிச்சலுடன் போராடிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தைரியத்தை, வெற்றியை நினைவுகூரும் நாள் தான் - ஆகஸ்ட் 15!
அப்படியாக இந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்தியாவும், இந்தியர்களாகிய நாமும் 76-வது சுதந்திர தினத்தை (Independence Day 2022) கொண்டாடுகிறோம்!

தேசபக்தியால் மட்டுமே நிறைந்த ஒரு நாள்!
வெறும் தேசபக்தியால் மட்டுமே நிறைந்த இந்நாளை சக இந்தியர்களுடன், சக குடிமக்களுடன், சக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் நீங்களும் கொண்டாட விரும்பினால், ஒருவேளை அவர்கள் எல்லாம் உங்களை விட்டு சற்றே தொலைவில் இருந்தால்.. அவர்களுடன் உங்கள் சுதந்திர உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு அற்புதமான வழி உள்ளது.

அதுதான் WhatsApp Stickers மற்றும் GIFS!
நீங்கள் 100 வார்த்தைகளில் டைப் செய்து அனுப்பும் ஒரு வாட்ஸ்அப் மெசேஜை விட ஒரே ஒரு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அல்லது ஒரு GIF ஆயிரமாயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தும்.
ஒருவேளை சுதந்திர தின ஸ்டிக்கர்களை, GIF-களை வாட்ஸ்அப் வழியாக அனுப்புவது எப்படி? என்று உங்களுக்கு தெரியாது என்றால்.. இதோ அதற்கான எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகள்!

WhatsApp வழியாக சுதந்திர தின Sticker-களை எப்படி அனுப்புவது?
- Google Play Store-ஐ திறக்கவும்.
- அங்கே உள்ள Search பாக்சீல் Independence Day WhatsApp Stickers அல்லது 76th Independence Day அல்லது 15 August WhatsApp Stickers என்று டைப் செய்து தேடவும்.
- உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக் ஆப்பை தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதன் பெயருக்கு அருகில் உள்ள இன்ஸ்டால் (Install) என்கிற ஐகானை கிளிக் செய்யவும்.
- குறிப்பிட்ட ஸ்டிக்கர் பேக் இன்ஸ்டால் ஆனதும், ஓப்பன் (Open) என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது அந்த ஆப் ஆனது பல சுதந்திர தின ஸ்டிக்கர்களின் பட்டியலை காண்பிக்கும். மேலும் அவைகளை வாட்ஸ்அப் உள்ள ஸ்டிக்கர்ஸ் தொகுப்பில் சேர்க்க வேண்டுமா? என்றும் கேட்கும்.
- ஆம் என்று நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், அந்த ஸ்டிக்கர் ஆப்பில் உள்ள அனைத்து ஸ்டிக்கர்களுமே உங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும்.

இப்போது WhatsApp-ஐ திறக்கவும்!
- பின்னர் வாட்ஸ்அப்பை திறந்து, ஏதேனும் ஒரு சாட்டிற்குள் நுழைந்து, ஸ்டிக்கர் செக்ஷனை கிளிக் செய்யவும்.
- அங்கே நீங்கள் புதிதாக சேர்த்த சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை காண்பீர்கள். அவ்வளவு தான் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு பகிர வேண்டிய 2022 சுதந்திர தின வாழ்த்துக்கள் ரெடி!

WhatsApp வழியாக சுதந்திர தின GIF-களை எப்படி அனுப்புவது?
இது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவதை விட எளிது!
- வாட்ஸ்அப்பை திறந்து, நீங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர விரும்பும் ஏதேனும் ஒரு சாட்டிற்கு செல்லவும்
- மெசேஜ் பாக்ஸின் இடதுபுறத்தில் உள்ள ஸ்மைலி ஐகானை கிளிக் செய்யவும்.
- பின்னர் GIF ஐகானை கிளிக் செய்து, வலது புறத்தில் தெரியும் Search (தேடல்) ஐகானை கிளிக் செய்யவும்.
- அதில் Happy Independence Day 2022 அல்லது Independence Day என்று டைப் செய்து தேடவும்.
.
- உங்களுக்கு பலவகையான சுதந்திர தின GIF-கள் அணுக கிடைக்கும்.
- அதில் ஒன்றை தேர்வு செய்து, உங்களுக்கு விருப்பமான வாழ்த்தை Add a Caption (ஆட் ஏ கேப்ஷன்) பகுதியில் டைப் செய்து Send (சென்ட்) ஐகானை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications